அன்பிலும் ஏழு வகையுண்டு!

 

யாராலும் விபரிக்க முடியாத ஒரு உணர்வே அன்பாகும். எவரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில், எந்த வகையிலும் அன்பை அனுபவித்திருக்கிறார்கள். அன்பு என்று வரும்போது ​​முதலில் நினைவுக்கு வருவது இளைஞர்களிடையேயான காதல் சார்ந்த அன்பாகும். ஆனால் காதல் மட்டும் அல்ல. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக உணரும் நிபந்தனையற்ற அன்புக்கும், அதே போல் நெருங்கிய நண்பர்களுக்காக அவர்கள் உணரும் உணர்வுகளுக்கும் இது பொருட்படும். எனவே இந்த வெவ்வேறு வகையான அன்பை பற்றிய விடயங்களை இன்று அறிந்து கொள்வோம். பலர் காதலித்திருந்தாலும் அவர்கள் கேள்விப்படாத கதைதான் இது. பண்டைய கிரேக்க தத்துவவாதிகள் இந்த அன்பை ஏழு பிரிவுகளாகப் பிரித்தனர்.

 

Eros

இது சிற்றின்பம் கொண்ட காதல் பற்றியது. சரியாகச் சொன்னால், காமத்திற்காக தோன்றும் மேலாண்மை பேராசை. இது ஒரு ஆபத்தான வகையான அன்பு என்றும் சொல்லலாம். மனித மனதில் உருவாகும் இந்த வகையான அன்பு மற்றொரு நபரின் உடலின் மீதுள்ள பாலியல் ஈர்ப்பு மூலம் உருவாகுபவை ஆகும். அந்த நேரத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதற்கான கட்டுப்பாட்டை கூட இந்த அன்பின் வெளிப்பாட்டினால் இழக்க நேரிடும். இந்த வெளிப்புற பாலியல் ஈர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒருவருக்கு உருவாகும் ஈரோஸ் எனப்படும் அன்பு முற்றிலும் தற்காலிக உணர்வு மட்டுமே ஆகும். அத்தகைய உணர்வின் அடிப்படையில் தொடங்கும் காதல் உறவுகள் தொடர்ந்து இருப்பதும் இல்லை.

 

Philia

ஒருவரின் பெற்றோர், உடன்பிறப்புகள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுக்கு இடையே ஒருவர் உணரும் ஒரு விதமான அன்பு பிலியா எனப்படும். இந்த அன்பு எப்போதும் நெருக்கமானது மற்றும் மிக்க நம்பிக்கை கொண்டது. ஒத்த அனுபவங்கள் மற்றும் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களுக்கு இடையே இந்த வகை அன்பு பெரும்பாலும் ஏற்படலாம். இது மிகவும் நல்ல நோக்கங்களுடன் கூடிய ஒரு அன்பின் விவகாரம். அடிப்படையில் ஈரோஸ் என்று அழைக்கப்படும் அன்புடன் தொடங்கும் ஒரு உறவு, ஆனால் பிலியாவின் இந்த உணர்வோடு நீங்கள் முன்னேறினால் அது மிகவும் வலுவான உறவாக இருக்கும்.

 

Storge

இந்த அன்பு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காட்டும் அன்பு. இது உலகின் எந்த மூலையிலும், எந்த இனத்திலும், எந்த எல்லையிலும் யாருடைய இதயத்திலும் எழும் நிபந்தனையற்ற அன்பு. ஒரு தாய் மற்றும் தந்தை தங்கள் பிள்ளைகளிடம் வைத்திருக்கும் அன்பு எந்த சூழ்நிலையிலும் மாறாது. அவர்கள் செய்யக்கூடிய தியாகங்களுக்கும் வரம்பு இல்லை. அந்த ஆற்றலும் பாதுகாப்பும் காரணமாகவே ஒரு குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் நல்ல பிரஜையாக உருவாகின்றது. பெற்றோரின் இந்த ஆழ்ந்த அன்பை உடலின் தோல், தசை மற்றும் எலும்புகளில் ஊடுருவி, எலும்பு மஜ்ஜையில் கூட உணரப்படும் ஒரு உணர்வு என்று மன்னர் சுத்தோதனா விபரித்தார்.

 

Agape

இது சற்று வித்தியாசமான அன்பென்றே கூற வேண்டும். இது ஒரு நெருங்கிய நபருக்கு அல்லது சில காரணங்களால் ஏற்படக்கூடிய ஒரு உணர்வு அல்ல. இந்த வகை அன்பு பொதுவாக உலகம் முழுவதும் பரவிய ஒரு அன்பாகும். இந்த அகபே எனும் அன்பின் வகை மற்ற மனிதர்களிடமும் இயற்கையுடனும் வைத்திருக்கும் அன்பை விவரிக்கிறது. இந்த அன்புதான் உலகில் உள்ள மற்றவர்களைப் பராமரிப்பதற்கும் அவர்களை பேணி நடப்பதற்கும் ஒருவரைத் தூண்டுகிறது. கிரேக்க தத்துவஞானிகளின் கூற்றுப்படி, உலகத்தின் மீதான அன்பு இயேசு கிறிஸ்து தனது வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு கற்பிக்க முயன்ற ஒன்று. இந்த வகை அகபே எனப்படும் அன்பு ஏழு வகையான அன்புகளில் மிக உயர்ந்ததாக கருதப்படுகிறது.

 

Ludus

இது விளையாட்டுத்தனமான அன்பை பற்றியது. ஒருவருக்கொருவர் பொறுப்பு அல்லது அர்ப்பணிப்பு இல்லாமல் எழுகின்ற மற்றும் தொடர்கின்ற ஒரு வகையான அன்பாகும். இந்த உறவில் பெரும்பாலான நடவடிக்கைகள் ஆத்திரமூட்டும் வேடிக்கையான மற்றும் ஏமாற்றும் செயலாகும். சில வகை காதல் ஆரம்ப நாட்களில் இந்த லுடஸ் மட்டத்தில் தொடங்கலாம். ஆனால் இந்த வகை அன்பு பிற்காலத்தில் ஒரு நிரந்தர காதல் உறவுக்கு வித்திடாது.

 

Pragma

நீண்ட காலமாக காதல் உறவில் இருக்கும் ஒரு தம்பதியினரிடையே காணக்கூடிய ஒரு வலுவான காதல் பிணைப்புக்கு வழங்கப்பட்ட பெயர் பிரக்மா. காலப்போக்கில் வலுவாக வளரும் இந்த பிணைப்பு மிகவும் சீரான பிணைப்பாகும். இரண்டு நபர்களுக்கிடையில் ஒரு அடிப்படை நிலை உறவை நீண்ட காலமாக பராமரிப்பதன் மூலம் மட்டுமே இந்த நிலை முன்னேற்றத்தை அடைய முடியும்.

 

Philautia

முன்னர் குறிப்பிட்ட மற்ற எல்லா வகைகளையும் விட இது ஒரு வித்தியாசமான அன்பு. பிலாட்டியா என்பது ஒருவர் தனக்குத்தானே வைத்திருக்கும் அன்பு. உண்மையான மதிப்பு மற்றும் தன்னம்பிக்கையை அளிக்க ஒருவர் கொண்டிருக்க வேண்டிய குணங்களில் ஒன்று தனக்குத்தானே அன்பு செலுத்துவது. இந்த வழியில் நீங்கள் தேவையில்லாமல் உங்களை அளவுக்கதிகம் நேசிப்பதால், நீங்கள் சுயநலவாதிகளாகவும் தேவையற்ற திமிர்பிடித்தவராகவும் மாறுகிறீர்கள் என்று எண்ண வைக்கிறது. ஆனால் நீங்கள் உலகில் யாரையும் நேசிக்க முன், உங்களை நீங்களே நேசிக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால், இந்த வகை அன்பில் தவறில்லை. உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க, ஒருவர் தன்னை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று கிரேக்க தத்துவவாதிகள் நம்பினர்.