மனைவியால் கிடைக்கும் நன்மைகள்

 

திருமணமான ஆண்களிடம் அவர்களது மனைவியரைப் பற்றி கேட்டுப்பாருங்கள். “ஏன் தான் கல்யாணம் பண்ணேனோ?, எல்லாம் சரி வாய் தான் கொஞ்சம் நீளம்!, கல்யாணம் பண்ணிடாதீங்க! ” இது போன்ற பதில்களே பெரும்பாலும் கிடைக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது திருமணமாகாதவர்கள் கூட மனைவி என்பவர் ஒரு விசித்திரமான இனம் என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாக திருமணம் செய்ய சிலர் பயப்படுகின்றனர். ஆனால் அது தவறு என்பதை சுட்டிக்காட்டவே இந்த ஆக்கத்தை எழுதுகிறோம். உண்மையில் மனைவியால் கிடைக்கும் நன்மை பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

 

பெண்கள் சார்ந்த கருத்துக்கள்

ஒவ்வொரு ஆண்களும் ஆண்களுக்கென்றே தனித்துவமான வகையில் சிந்திக்கிறார்கள். அப்படி நினைப்பது சரியா? இல்லை, அது தவறு! அவ்வாறு சிந்திப்பதால் பெரும்பாலும் தவறுகளே நிகழும். அதனால் எல்லா தரப்பிலிருந்தும் சிந்திக்க வேண்டும். உலகில் உள்ள பெண்களின் கண்ணோட்டத்திலும் இருந்தும் நீங்கள் சிந்திக்கவில்லை என்றால், செய்யும் விடயம் தோல்வியடையும். பெண்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்பதற்காக உங்கள் தாயிடம் எந்நேரமும் பெண்கள் சார்ந்த கருத்துக்களை நீங்கள் கேட்டு கொண்டிருக்க முடியாது. ஒரு காதலியிடம் கேட்பதாக இருந்தாலும் அவளும் எந்நேரமும் உங்கள் கூடேவே இருப்பதில்லை. எனவே ஒரு மனைவியாக இருந்தால் எந்நேரமும் உங்கள் கண்ணெதிரே இருப்பார். அதே போல தேவையானவற்றையும் இலகுவாக கேட்டு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம். இதுபோன்ற வேலைகளை செய்கையில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருப்பார்.

 

வித்தியாசமான சுவை

நம் வாழ்வின் பெரும்பகுதி எமது தாயின் உணவை சாப்பிட பழகிய நாம் இடையில் கடை உணவிற்கும் பழக்கப்பட்டு விடுகிறோம். மனைவியின் உணவு தனது தாயின் உணவைப்போல இல்லாவிட்டாலும் வித்தியாசமான சுவை மற்றும் அன்பைக் கலந்த ஒரு உணவைப் பெறுகிறோம். காதலியாக இருந்தாலும் எந்த நாளும் அவரிடம் இருந்து உணவு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கும் மேலாக, மனைவி சமையலில் செய்யும் சில தவறுகள்கூட சில சந்தர்ப்பங்களில் மிகவும் சுவையாக இருக்கும். மறுபுறம், தாயிடமிருந்து சாப்பிடுவதை விட சமையலறைக்கு போய் சமைப்பதில் மனைவிக்கு அதிக பங்களிப்பு செய்ய வாய்ப்பும் உள்ளது, எனவே மனைவியின் உணவில் கொஞ்சம் பெருமையும் கிடைக்கும்.

 

இளவயது சிந்தனை

சகோதரி, காதலி அல்லது மனைவியைத் தவிர எங்களுக்கு மிக நெருக்கமான பெண் யார்? அம்மாதான். ஒரு சகோதரி எப்போதும் எங்களுடன் இருக்க முடியாது. நாங்கள் குறிப்பிட்டுள்ளவர்களில், எங்களுடன் நீண்ட காலம் வாழக்கூடியவர் தாய் மற்றும் மனைவி. அம்மா நம்மைப் பற்றி எவ்வளவு நினைத்தாலும், மகன் எனும் பட்சத்தில் தான் தாய் நம்மைப் பற்றி நினைக்கிறாள். அப்படியிருந்தும், ஒரு மனைவி இளம் வயதாகவும் இருப்பதால் நம் மனதிற்கும் சிந்தனைக்கும் ஒத்துப்போகும் அளவிற்கு சிந்திக்க முடியும். ஆகவே, ஒரு பரிசைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அனைத்து விடயங்களிலும் எமக்கு பக்கபலமாக செயற்படுவார்.

 

டெய்லி ஹெபெனிங் லைஃப்

நிச்சயமாக மனைவி இருக்கும் போது வாழ்க்கை சலிப்பதில்லை. அவர் தவறாமல் புத்தகம் படிக்க வேண்டும் என்று எண்ணுபவராக இருந்தாலும், உங்களுக்கு அது ஒரு தொல்லையாக இருந்தாலும், அவர் படிப்பதை நிறுத்துவதில்லை. மேலும் அவர் தன்னால் முடிந்தவரை அடிக்கடி சண்டையிடுவார். சண்டை என்றால் கோபப்படுவதாகும். கோபமாக இருப்பதென்றால் அவர்கள் நண்பர்களை போலவும் இருப்பார்கள். எனவே, ஒரு மனைவி இருக்கும்போது வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சி இருக்கும். நாம் ‘மகிழ்ச்சி’ என்று சொல்லும்போது, ​​சிலருக்கு இது மகிழ்ச்சியாக இருக்கும் சிலருக்கு இது வதையாகவும் இருக்கும். ஆனால் சலிப்பை உண்டாக்காமல் இருக்கும்.

 

உறவினர்களின் கவனிப்பு

வழக்கமாக நாம் நமது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று மிகுந்த கவனிப்பை எதிர்பார்க்க முடியாது. சாப்பிட்ட பின்னர் வீடு திரும்பத்தான் வேண்டும். ஆனால் மனைவியின் உறவினர்களின் வீட்டிற்குச் சென்றால், ​​அது என்றும் ஒரு விருந்தாகத் தான் இருக்கும். மீண்டும், மூன்று அல்லது நான்கு நாட்கள் இருந்துவிட்டேதான் செல்லச் சொல்வார்கள். அந்த அளவிற்கு கவனிப்பார்கள். உறவினர் அத்தகைய கவனிப்பை நம் மீது காட்டுவார்கள் என்பது யார் நினைத்திருப்பர்? கேட்கும் விடயம் எதுவாக இருப்பினும் காலுக்கடியில் கொண்டு வந்து தருவார்கள். நீங்கள் தூங்க விரும்பினால் படுக்கையும் தயாராக இருக்கும். எழுந்தவுடன் கையருகே தேநீர் கோப்பை. இன்னும் சிறிது நேரத்தில் சுவையான சாப்பாடும் தயாராக இருக்கும். ஒரு சில உறவினரின் வீட்டின் ஆடம்பரத்தை மனைவியின் தரப்பால் மட்டுமே அனுபவிக்க முடியும்.

 

பொறுப்பானவர்களாக மாறுகிறார்கள்

வழக்கமாக ஒரு தாய் நீண்ட காலமாக செய்ததை ஒரு மனைவி வந்து ஏற்றுக்கொள்ளும்போது, ​​முதலில் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், நமக்கு தொடர்ந்து சில விடயங்கள் நினைவூட்டப்படுகின்றன. தாயிடமிருந்து மகனாகவும் மனைவியிடமிருந்து கணவர்களாகிய நமக்கு வந்ததுதான் இந்த மறதி. வீட்டில் ஏதாவது உடைந்துபோன பின்னர் அதனை சரிசெய்யவேண்டும் என்றால், ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது சொல்ல வேண்டும். திருமண ஆல்பம் முதல் ​​மூத்த குழந்தையை பள்ளிக்கு சேர்க்கும் நேர்முக தேர்வு வரை சகல விடயங்களிலும் நம்மை அடிக்கடி நினைவூட்டி நினைவூட்டி அவர்கள் எப்போதும் நம்மை பொறுப்புள்ளவர்களாக ஆக்குகிறார்கள்.

 

மரியாதையை தக்க வைத்துக்கொள்ள முடியும்

சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள இருப்பதற்கென்றே இருக்கும் ஒரு வழிதான் மனைவி.  இப்போது நாம் தட்டிக்கழித்து, தவறவிட முடியாத நேரங்கள் இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மனைவியின் பெயரை போட்டு நமது மரியாதையை காப்பாற்றிக்கொள்ள முடியும். மனைவிக்கு பிடிக்கவில்லை அல்லது மனைவி வேறொருவர் இடத்தில் ஆர்டர் செய்து விட்டார் அல்லது மனைவியிடத்தில் கேட்டுப்பார்த்து சொல்கிறேன், என்று ஏதாச்சும் சொல்லி தப்பிக்கலாம் அல்லது தவிர்க்கலாம்.