குடிப்பழக்கம் இல்லாத நடிகர்கள் பற்றி தெரியுமா?

 

பொலிவுட் நட்சத்திரங்கள் பெரும்பாலும் அடிக்கடி காதல் தொடர்புகள், சர்ச்சைகள் போன்றவற்றில் சிக்கிக்கொள்கிறார்கள் என்றே நாம் அறிந்துள்ளோம். அந்த நேரத்தில் மதுபானத்தை பயன்படுத்தி திருப்தி அடைந்தவர்களே அதிகம். மேலும், சில நடிகர்கள் தங்கள் பரபரப்பான நேர அட்டவணை காரணமாக ஒரு இடைவேளையின் போது குடித்து குதூகலமாக இருக்கப்பழகிக் கொண்டுள்ளனர். பொலிவுட் நட்சத்திரங்கள் குடிப்பழக்கம் காரணமாக தங்கள் வாழ்க்கையையே இழந்ததைப் பற்றி அனைவருக்கும் நன்றாகவே தெரியும். எனினும், என்னதான் பிரச்சினை ஏற்பட்டாலும் மதுவை நாடாத நட்சத்திரங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

 

அமிதாப் பச்சன்

மூத்த பொலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இப்போது 77 வயதாகின்றது. வயதான போதிலும், அமிதாப் இன்னும் அந்த அழகான தோற்றத்தையும் சிறந்த ஆளுமையையும் தன்னிடம் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். அமிதாப் இப்போது கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக மதுவை தவிர்த்து வருகிறார். மேலும் அவர் புகைப்பதுமில்லை. அமிதாப்பிற்கு பிடித்த பானங்களாக நீர் மற்றும் எழுமிச்சை சாறு என்று அவர் கூறுகிறார், மேலும் அவர் கார்பனேற்றப்பட்ட பானங்களை மட்டுமல்ல, தேநீர் மற்றும் கோப்பியையும் தவிர்த்து வருகிறாராம். மேலும் அமிதாப் ஒரு சைவ உணவு உண்பவர்.

 

அக்‌ஷய் குமார்

 

பார்ப்பதற்கு வெளியில் மிகவும் ஆடம்பரமான நடிகரைப் போல தோற்றமளித்தாலும், பார்ட்டிகளுக்கு குதூகலமாகவும் இருக்காத அவற்றை விரும்பாத நடிகராக அக்‌ஷய் குமார் அறியப்படுகிறார். அமிதாப்பைப் போலவே, இவரும் மது மற்றும் புகைப்பழக்கத்திலிருந்து விலகியே இருக்கிறார். தற்காப்பு கலை வீரராக திரைத்துறையில் நுழைந்த அக்‌ஷய், இன்னும் தனது உடலை நன்றாக பராமரிக்கும் ஒரு அழகான நடிகர். கடந்த காலத்தில், அக்‌ஷய் மதுபானம் மற்றும் புகைத்தல் விளம்பரங்களில் தோன்றினார். ஆனால் இன்று அவர் அத்தகைய விளம்பரங்களைத் தவிர்க்கிறார். ஏனென்றால், இளம் தலைமுறைக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதனால் ஆகும்.

 

அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் நடித்த பல கதாபாத்திரங்களில், அவர் குடிபோதையில் மிகவும் யதார்த்தமான முறையில் செயற்படுவதைக் கண்டோம். ஆனால் உண்மையில் அவர் தனது தந்தையைப் போலவே மதுவை விரும்பாத மற்றும் குடிக்காத நடிகர். அபிஷேக் மதுபான விளம்பரங்களில் தோன்ற மறுக்கிறார். இதுபோன்ற ஒரு விளம்பரத்தில் நடிக்க சுமார் ரூ.100 மில்லியனுக்கு விலைபேசப்பட்டபோதும் அபிஷேக் அதனை நிராகரித்துள்ளார். இது தனது கொள்கைகளுக்கு எதிரானதென கூறியுள்ளார்.

 

சித்தார்த் மல்ஹோத்ரா

2012 ஆம் ஆண்டில் ‘ஸ்டூடன்ட் ஒப் தி இயர்’ படத்தின் மூலம் பொலிவுட்டில் அறிமுகமான சித்தார்த் மல்ஹோத்ரா, இன்னும் பிரபலமான இளம் நடிகராக உள்ளார். மேலும் மது அருந்தாத நடிகரும் ஆவார். தொழிலில் உள்ள சிலருக்கு சோர்வு மற்றும் மன அழுத்தத்தை போக்க மதுபானம் உதவுகிறது என்றாலும் அவர் மதுவை விரும்புவதில்லை என்றுதான் அவர் கூறுகிறார். அவர் அடிக்கடி காதல் தொடர்புகளில் சிக்கிக்கொள்கிறார் என்றாலும், சித்தார்த் மகிழ்ச்சியான உரையாடல்களில் மாத்திரமே ஈடுபடுகிறார்.

 

ஜோன் ஆபிரகாம்

ஜோன் ஆபிரகாம் புகைப்பிடிக்காத, மது அருந்தாத நடிகர் என்று சிலர் நம்புவது கடினம். ஏனெனின் ஜோன் ஆபிரகாமின் பல படங்களில், அவர் ஒரு குடிகாரராக பாத்திரத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அவரது படங்களில் ஒன்றான நோ ஸ்மோக்கிங், அதிக புகைப்பிடிப்பவரின் எனும் பாத்திரத்தில் நடித்தார். படம் முழுவதும், அவர் புகைபிடிப்பதைக் காண முடிந்தது. ஆனால் ஜோன் ஆபிரகாம் உண்மையில் புகைப்பிடித்தல் மற்றும் மதுவை வெறுக்கும் ஒரு நடிகராவார்.  அவர் ஒரு கப் ஷாம்பெயின்கூட மிக அரிதாகவே குடித்திருந்தாலும் இப்போது அவற்றை தவிர்த்தே வாழ்ந்து வருகிறார்.

 

பிபாஷா பாசு

பிபாஷா பாசு நாற்பது வயதை எட்டிவிட்டாலும் இன்னும் அழகாக மற்றும் கவர்ச்சியான உடலை இன்னும் பராமரித்து வருகிறார். அவர் தனது உடல் வலிமையை பேணுவதில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகையாவார். இன்று, பல பெண்கள் மத்தியில் குறிப்பாக நடிகைகள் மத்தியில் மது அருந்துவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. ஆனால் பிபாஷா மதுவை விட்டு விலகியே இருக்கிறார். ஒருசில முக்கிய கொண்டாட்டத்தின் போது ஒரு துளி ஷாம்பெயின் குடிப்பதைத் தவிர, அவர் அரிதாகவே மது அருந்துகிறார் என்று அவர் கூறுகிறார். உடல்நிலை குறித்து மிகுந்த ஆர்வம் கொண்ட பிபாஷா, மது அருந்துவது மட்டுமல்லாமல், பால், கோப்பி போன்ற பானங்களையும் தவிர்க்கிறார்.

 

சோனு சூத்

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக திரைத்துறையில் பிரகாசிக்கும் சோனு சூத், ஹிந்தி மட்டுமல்ல, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் தன்னை பங்களித்த நடிகர். இப்போது சுமார் 50 வயதாகும் சோனு, இன்னும் சிக்ஸ் பெக்குடன் ஒரு அழகான கவர்ச்சியான உடலைப் பேணி வருபவர். அவரது கருத்துப்படி, அவர் பின்பற்றிய நல்ல சுகாதாரப் பழக்கம் அவரது இளமை தோற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவியது. சோனு மது அருந்துவதில்லை. அத்தோடு, சைவ உணவையே சாப்பிடுகின்றார்.