உடலுறவு பற்றி பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்பிக்க வேண்டியவை

 

நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்கள் பெற்றோர் உங்களுடன் உடலுறவு பற்றி பேசவில்லை என்றால், எங்களது பெற்றோரும் அப்படித்தான் இருந்தார்கள். பருவ வயதை அடையும் வரை செக்ஸ் பற்றிய விடயங்கள் எமக்குத் தெரியாது. அதேபோல எல்லா பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் அனைத்தையும் வெளிப்படையாக பேசுவது எளிதல்ல. சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுடன் நட்பின் அளவை வெற்றிகரமாக கையாண்டிருக்கும் போது, மேலும் சில பெற்றோர்கள் தமது குழந்தைகளுடன் சாதாரண ஒரு விடயத்திற்குக்கூட தொடர்புகொள்ள முடியாதுள்ளது. நாம் வாழும் இந்த சமூகம் ஒரு டிஜிட்டல் சமூகம் என்பதால் குழந்தைகள் சரியான வயதை அடையும் முன்னரே செக்ஸ் பற்றி தங்கள் நண்பர்களிடமிருந்து அறிந்துகொள்வதற்கு முன்பு நாம் நம் குழந்தைகளுடன் செக்ஸ் பற்றி பேச வேண்டும்.

 

பிறப்புறுப்புகளின் சரியான பெயர்கள்

பிறப்புறுப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் உண்மையான சொற்களை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்வது நல்லது. புனைப்பெயர்களைச் சொல்வது காயங்கள் அல்லது உடல்நலன் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் தவறான புரிதல்கள் மற்றும் தவறான தகவல்தொடர்புகளுக்கு வழிவகுக்கும். அதைப் பற்றி பேச சிறந்த நேரம் குளியல் நேரம். “ஆண்குறி” அல்லது “யோனி ” என்று சொல்வதில் எந்த கூச்சமும் படத்தேவையில்லை. ஏனென்றால் உங்கள் பிள்ளை வெட்கப்படாமல் அந்த வார்த்தைகளைச் சொல்வதில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

 

உடலை ஆராய்வது சரி என்று விளக்குதல்

தனது உடலின் மறைவான பகுதிகளைத் தொடுவது பல சமூகங்களில் வெட்கக்கேடானதாகக் கருதப்படுகிறது. இளவயதில் உங்கள் பிள்ளைக்கு பாலியல் தொடர்பு (sex) பற்றி நீங்கள் கற்பிக்க விரும்பினால், அவர்கள் அவர்களது உடல் பாகங்களைத் தொட விரும்பினால் அது தவறில்லை என்று நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் அதை தனிமையில்தான் செய்ய வேண்டும்.

 

நிர்வாணமாக இருப்பது சரியா ? தவறா ?  

குழந்தைகள் குறிப்பாக அவர்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருக்கலாம். எப்போது, யாருக்கு முன்னால் நிர்வாணமாக இருப்பது என்பதை நீங்கள் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். இவை சிறப்பு பாகங்கள் என்பதால் மற்றவர்களின் பிறப்புறுப்புகளைத் தொடுவது சரியில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த சிறப்பு உடல் பாகங்களைத் தொட யாரும் அனுமதிக்கக்கூடாது. (மருத்துவர்கள் அல்லது பெற்றோர்களால் பாதுகாப்பாகக் குறிக்கப்பட்ட நபர்கள் தவிர).

 

குழந்தைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறார்கள்?

கொக்குகள் குழந்தைகளை கூடைகளில் கொண்டு வந்து தந்ததாக கதைகளை தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குச் சொன்ன நாட்கள் போய்விட்டன. அதிக வெளிப்பாடு மூலம், குழந்தைகள் தவறான தகவல்களைப் பெறலாம். பின்னர் அதைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாமால் போகலாம். இந்த கருத்தை மிகவும் இலகுவாகவும் எளிதாகவும் கற்பிக்க பல புத்தகங்கள் உள்ளன. அதேபோல பகிரப்படும் தகவல்கள் வயதுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். ஆனால் குழந்தைகள் அவற்றைப் பற்றி இலகுவாக புரிந்துகொள்ள முடிந்தால், மேலும் அவற்றை பற்றிய தகவல் தேவைப்பட்டால் நாம் மேலும் பகிர்வதில் கூச்சப்பட வேண்டியதில்லை.

 

ஆபாசம்

 

பல பெற்றோர்கள் குழந்தைகளுடன் ஆபாசத்தைப் பற்றி பேசுவது சரியாக இருக்கும் என்று நினைப்பதில்லை. அவர்கள் ஒரு மொபைல் மூலமாகவோ அல்லது கணினி மூலமாகவோ ஆபாச வலைத்தளத்தை பார்த்து பெற்றுக்கொள்வதை விட நாமே நம் குழந்தைகளுக்கு ஆபாச விடயங்களை பற்றி விளக்குவது நல்லது. நாங்கள் டிஜிட்டல் உலகில் வாழ்கின்றோம். பிள்ளைகள் தற்செயலாக ஆபாச வலைத்தளத்தைத் திறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. திடீரென அவற்றைப் பற்றி அறிவதைவிட இந்த கருத்தை முன்பே அவர்களுக்குச் சொல்வது சிறந்தது.

 

சுயஇன்பம்

இது அதற்குரிய வயதுக்கு வந்தபிறகு பேசவேண்டிய மற்றொரு கருத்தாகும். மேலும் உங்கள் பிள்ளை தனது உடலை ஆராயத் தொடங்கி விட்டார் என்று நீங்கள் நினைக்கும் போது மட்டுமே இதை பற்றி பேசி அறிமுகப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் சரியான சுகாதார பழக்கத்தை கடைபிடித்தால் மட்டுமே அது சாதாரணமானதும் ஒழுக்கமானதாகவும் மாறும் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

 

பாலியல் துஷ்பிரயோகம்

குழந்தைகள் மிகவும் எளிதாக பாதிக்கப்படக்கூடியவர்கள். பல குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர். மற்றும் தங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பற்றி பேசுவது எளிதல்ல என்பதால் உண்மைகளைத் தங்களுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற தகவல்களை வழங்குவது பாலியல் துஷ்பிரயோகங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும்.

 

இணைய பாதுகாப்பு

குழந்தைப் பருவத்தில் இணையம் என்பது ஒரு பெரிய விடயமல்ல என்பதால் இணையத்தைப் பயன்படுத்தும்போது எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை பிள்ளைகளுக்கு பெற்றோர் கூறவேண்டும். நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது சட்டவிரோதமானது மட்டுமல்ல, பிற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

செக்ஸ் பற்றிய அறிவுறுத்தல்

வெளிப்படையாகப் பேசினால், சில குழந்தைகள் உடலுறவு கொள்வது மறைமுக அனுமதி என்றும் கருதலாம். செக்ஸ் பற்றிய அறிவுறுத்தல் மட்டுமே உடலுறவு கொள்ள மறைமுகமான அனுமதிபத்திரம் அல்ல என்றும் விளக்கிக்கொள்ளவும். “உடலுறவு அறிவுறுத்தல்கள்” என்பது அவர்களுக்கு கல்வி கற்பதற்காக மட்டுமே என்றும் அது நிச்சயமாக ஒரு அனுமதி கடிதம் அல்ல என்றும் கூறுங்கள். ஆனால் தேவை ஏற்படும் போது அவர்கள் எப்போதும் வந்து பேசலாம் என்றும் அவர்களிடம் சொல்லுங்கள்.