சாதனைக்கு அடிப்படை அவசியமில்லையென நிரூபித்த  பெண்கள்

 

வாய்ப்பு அனைவரின் கதவையும் தேடி வந்து தட்டுவதில்லை. இருப்பினும், நீங்கள் எவ்வாறு அவற்றை சரியாக பயன்படுத்துகின்றீர்கள் என்பதிலேயே விடயம் தங்கியுள்ளது. உற்சாகமான பின்னணியில் இருந்து வந்த ஒரு சிலரை தவிர சில ஆளுமைகள் மில்லியன் கணக்கானவர்களாக உயர்வதில்லை, இப்போது உலகெங்கிலும் உள்ள சில வெற்றிகரமான நபர்களின் மிகவும் செல்வாக்குமிக்க குழுவும் ஒன்றாகும். கிழிந்த கந்தல்களிலிருந்து அதிக செல்வத்தை சம்பாதித்து முன்னேறிய இந்த சகாப்தத்தின் முதல் 6 பெண்மணிகளைப் பார்ப்போம்.

 

இந்திரா நூயி – தலைமை நிர்வாக அதிகாரி பெப்சிகோ (CEO PepsiCo)

மிகவும் ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த மிகச் சிலரில் நூயிவும் ஒருவர். இருப்பினும், அவரது கதை ஊக்கமளிக்கவும் மற்றும் செல்வாக்கும் மிக்கது. அமெரிக்காவில் தனது முகாமைத்துவ கற்கையை கற்கும் கல்லூரிக்கு பணம் செலுத்துவதற்காக இவர் இரவு நேரத்திலும்  பணிபுரிந்துள்ளார். பட்டம் பெற்ற உடனேயே, நூயி ஜான்சன் வேலையில் இணைந்தார். பிறகு Motorola மற்றும் boston consulting group போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் சிறிது காலம் பணியாற்றிய பின்னர், இறுதியாக பெப்சிகோவின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

 

மைக்கேல் மோன் – இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எம்.ஜே.எம் (Co-founder and CEO MJM Ltd)

எந்தவொரு சரியான கல்வித் தகுதியும், நிதி ரீதியாக சரியான பின்னணியும் இல்லாமல் முன்னேறி வந்தவர்களில் குறிப்பிடத்தக்க பெயரைப் பெற்றவர்தான் மைக்கல் மோன். தந்தையின் பக்கவாதத்திற்குப் பிறகு, அவர் பேப்பர் விநியோகஸ்தராக வேலை செய்யத் தொடங்கினார். அதன்பிறகு, ஒரு பழக் கடையில் வேலை செய்யவும் ஆரம்பித்துள்ளார். இருப்பினும், அவரது தந்தையின் நோய்க்கும் ஏனைய கடன்களை செலுத்தவும் இது போதாது. அவர் தனது 17 வயதில் labatt ஸில் சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் நிறுவனத்தின் சேல்ஸ் டிவிஷனிற்கு தலைமை தாங்கினார். மைக்கேல் தொடர்ந்து வெற்றியின் ஏணியில் உயர்ந்து வந்தார். தற்போது எம்.ஜே.எம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவுனராக செயற்படுகின்றார்.

 

ஜே.கே.ரவுலிங் – எழுத்தாசிரியர் (Author)

அவரது தாயார் இறந்த உடனேயே, ரவுலிங் வேலை தேடி போர்ச்சுகலுக்கு சென்றார். இருப்பினும், இந்த யோசனை தோல்வியுற்றது மற்றும் அவரது குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான பணவசதியும் அவரிடம் இருக்கவில்லை. தினசரி வேலைகளை விட இவர் பகற்கனவில் காலத்தை இழந்தார். இதனால் அவர் மிக நீண்ட காலமாக வேலையில்லாமல் இருந்தார். இருப்பினும், பல வெளியீட்டாளர்களால் நிராகரிக்கப்பட்ட போதிலும் அவர் ஒருபோதும் தனது ஆர்வமான துறையான எழுதுவதை நிறுத்தவில்லை. இருப்பினும் தொடர் முயற்சிகளின் பின்னர், ‘ஹாரி பொட்டர்’ என்ற சிறந்த விற்பனையான புத்தகத் தொடரின் ஆசிரியராக மாறினார்.

 

ஹிலாரி டெவி – நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பால்-இஎக்ஸ் (Founder and CEO Pall-EX)

ஹிலாரியின் தந்தையால் வங்கிகடனை தீர்க்க முடியா நிலை வந்து விட்டது என்று அறிவித்தபோது ஹிலாரி டெவியின் குடும்பம் எல்லாவற்றையும் இழந்தது. இருப்பினும், டெவி பணம் சம்பாதிக்க விரும்பினார். இதற்காக அவர் தனது சமூக வாழ்க்கையையும் பள்ளி படிப்பையும் கூட விட்டுவிட்டு விற்பனை செய்யும் தொழிலில் தன்னை ஈடுபடத் தொடங்கினார். ஹிலாரி வேலை செய்யும் எண்ணத்தில் இலகுவாக ஈடுபடுவதாகவும் இருக்கவில்லை.அதே போல அவர் விரைவாகவும் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும், அது நீடிக்கவில்லை. அவரது இரண்டு தோல்வியுற்ற திருமணங்களுக்குப் பிறகு, தனது சொந்த ஸ்தாபனத்தைத் தொடங்க முடிவு செய்தார். அது இப்போது பால்-இஎக்ஸ் Pall-EX ஒரு சரக்கு விநியோகிக்கும் நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது.

 

உர்சுலா பர்ன்ஸ் – தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஜெராக்ஸ் (Chairman and CEO, Xerox)

பர்ன்ஸ் மன்ஹாட்டனின் நகரப் பகுதியில் அவரது தாயாரால் கஷ்ட சூழலில் தான் வளர்க்கப்பட்டார். தனது குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்காக அவர் தினமும் இரண்டு நேரங்களில் வேலை செய்தார். தாயின் கஷ்டத்தை உணர்ந்த பர்ன்ஸ், கடுமையாக படித்து NYU இல் அனுமதியும் பெற்றார். படித்து பட்டம் பெற்ற பிறகு, அவர் ஜெராக்ஸில் கோடைகால பயிற்சியாளராக சேர்ந்தார். இருப்பினும், அவரது கடின உழைப்பு, அவரது குடும்பத்தின் தற்போதைய நிலையை மாற்றுவதற்கான ஆர்வம் மற்றும் உறுதிப்பாடு, அவருக்கு கொடுத்த ஊதியமாக அவரது நிலையை உயர்த்திக்கொண்டார். இப்போது அவர் ஜெராக்சின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.

 

ஓப்ரா வின்ஃப்ரே – பிரபலம் – ஓப்ரா வின்ஃப்ரே ஷோ (Celebrity -The Oprah Winfrey Show)

வின்ஃப்ரே தனது பெற்றோர் விவாகரத்து செய்த பின்னர், தனது தாத்தா பாட்டியுடன் வாழத் தொடங்கினார். சிறிது காலம், அவர் உருளைக்கிழங்கு சாக்குகளை அணிந்து, உணவுக்காக எஞ்சியவற்றை சாப்பிட்டார். இருப்பினும், வின்ஃப்ரே இந்த முறையில் வாழ்க்கையை கடத்தி செல்ல விரும்பவில்லை. அவர் கடினமாக படித்து முழு புலமைப்பரிசிலையும் பெற்றார். தனது 19ஆவது வயதில், அவர் ஒரு செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார். அவரது தனிப்பட்ட திறன்கள் மிக விரைவாக பாராட்டப்பட்டன. இறுதியில் அவர் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘AM சிகாகோவின் தொகுப்பாளராக மாறினார். இப்போது இது ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ என்று அழைக்கப்படுகிறது.

ஒருவருக்கு உறுதியும் தைரியமும் வெற்றிபெற விருப்பமும் இருக்கும்போது எதுவும் சாத்தியம் என்பதை இந்த பெண்கள் உலகுக்கு காட்டுகிறார்கள் !