புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு அணிவிக்கக்கூடிய உடைகள்

 

 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் புதிதாகப் பிறந்த குழந்தை மகிழ்ச்சியின் மடல் என்றே கூற வேண்டும். அந்த வீட்டில் மகிழ்ச்சியின் அளவை போலவே பராமரிப்பின் அளவும் அதிகமாக இருப்பதை மறுக்க முடியாது. மேலும் குழந்தையின் பராமரிப்பு செலவுகளும் விரைவாக அதிகரிக்கும். குழந்தை பெற்ற மகிழ்ச்சியில் அவை பெரிதாக தெரியாவிட்டாலும் குழந்தை பராமரிப்பில் கவனம் செலுத்துவது அவசியமானது. ஒரு அனுபவமிக்க தாயாக இருந்தால் குழந்தைக்கான உடை உள்ளிட்ட சகல பராமரிப்பு விடயங்களும் அவருக்கு பழக்கப்பட்டதாக இருக்கும். அதுவே ஒரு புதிய தாயாக இருந்தால், பிறந்த குழந்தைக்கான ஆடைகளை பற்றிய அறிவு பெரிதாக இருக்காது. அவர்களுக்கு உதவும் வகையில் இந்த கட்டுரையை கொண்டுவந்துள்ளோம்.

 

புதிதாக பிறந்த குழந்தை எதை அணிய வேண்டும்?

பிரத்தியேகமாக இதைப் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு மென்மையான வசதியான மற்றும் இழுபடக்கூடிய வகையில் ஆடைகளை அணிவிக்க வேண்டும். அந்த தேவைகளை மனதில் கொண்டு, அவர்களின் சருமத்தை எரிச்சலூட்டாத உடைகளை அணிவிக்க வேண்டும். குறிப்பாக, விரைவாகப் அணிவிக்கக்கூடிய மற்றும் எளிதாக கழற்றி அகற்றுவதற்கு முடியுமான துணிமணிகளை வாங்கவும்.

 

குழந்தை ஆடைகளில் எத்தனை லேயர்கள் இருக்க வேண்டும்?

குழந்தைகளுக்கான ஆடை விதி என்னவென்றால், குழந்தைகளுக்கான ஆடைத்தெரிவின் போது ஒரு லேயர் அதிகமாகவே அணிவிக்க வேண்டும். அதாவது நாம் அணியும் ஆடையில் ஒரு அடுக்கு அதிகமாக காணப்பட வேண்டும். குளிர் காலத்திற்கு நாம் ஒரு கம்பளி ஆடையை (ஸ்வெட்டர்) அணிந்தால் அவர்களுக்கு ஸ்வெட்டருக்கு மேலேயும் அதற்கு கீழ் ஒரு சிங்க்லட்டை அணிவிக்க வேண்டும். வெப்பமான மாதங்களில், நீங்கள் ஒரு சோர்ட்ஸ் மற்றும் டீஷர்ட் அணிவதானால், குழந்தைக்கு நீளமான மெல்லிய துணியில் இரண்டு லேயர்ஸ் அணிவிக்க வேண்டும்.

 

சிங்க்லட் (Singlets)

ஒரு குழந்தைக்கு கூடுதல் அரவணைப்பை தருவதற்காக மற்ற ஆடைகளுக்கு அடியில் அணிவிக்கக்கூடிய ஒன்றுதான் இந்த சிங்க்லட். குழந்தைக்கு உரித்தான முறையில் இது கதகதப்பையும் தரும். மேலும் இதனை வாங்கும்போது விலை சற்று அதிகமானாலும் பரவாயில்லை. மலிவான தரம் குறைந்த சிங்க்லட் வாங்கினால் அடிக்கடி அவிழ்ந்து குழந்தைக்கு அலுப்பை தரக்கூடும். நல்ல மிருதுவான துணியில் நல்ல தரமான பட்டன் வைத்த சிங்க்லட்களை வாங்கவும். தொடர்ந்து அதை சரிசெய்ய வேண்டியதில்லை. உங்கள் குழந்தையை நாள் முழுவதும் வசதியாக உணரவைக்கும்!

 

Onesies and growsuits

இது பெரிதும் தாய்மார்கள் அறிந்த ஒரு ஆடைதான். புதிதாகப் பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் இந்த க்ரோசூட்களில்தான் நாளை கடத்துகிறார்கள். இவை பார்பபதற்கு சிங்க்லட்ஸ் போலவே இருக்கும். ஆனால் இவை காலநிலைக்கு ஏற்றவாறு விதவிதமான தடிமனில் உள்ளது. குளிர்காலத்திற்கு ஏற்றவாறு தடிமனான துணியிலும், வெயில் காலத்திற்கு ஏற்றவாறு மெல்லிய வியர்க்காத துணியிலும் இந்த வன்சைஸ் அல்லது க்ரோசூட்ஸ் குறுகிய ஸ்லீவ் முதல் நீண்ட ஸ்லீவ் வரை இருக்கின்றன.

 

Sleep bags 

sleep bags (தூக்கப்பைகள்) குழந்தைகளுக்கு இரவில் தூங்குவதற்கான பாதுகாப்பான மற்றும் எளிமையான ஒரு விடயமாகும். இதனை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகளுக்கு அலுப்பை தரக்கூடிய பெட் ஷீட்ஸ்களில் இருந்து விடுதலை கொடுக்க முடியும். இதிலும் குளிர்காலத்திற்கு ஏற்ற தடிமனான ஒரு ஆடை உண்டு. வெயில் காலத்திற்கு மெல்லிய ஆடையொன்று உண்டு.