ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய தைரியமான மனிதர்கள்

 

பொதுநலன் கருதக்கூடியவர்களில் ஒரு சில உன்னதமானவர்களால் மட்டுமே தன்னுயிரை துச்சமாக எண்ணி பிற உயிர்களை காப்பாற்ற முடியும். இன்று நாம் அவ்வாறான மக்களைப் பற்றியே பேசப் போகிறோம். குறிப்பாக இரண்டாம் உலகப் போரின்போது அவர்களின் வாழ்க்கையின் பாதுகாப்பை பற்றி சிந்திக்காமல் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாப்பதில் பெரும் அர்ப்பணிப்பைச் செய்த சிலரை பற்றி பார்ப்போம்.

 

ஐரீனா செண்ட்லர் (Irena Sendler)

ஜேர்மனியர்கள் போலந்தை ஆக்கிரமித்து தலைநகரான வார்சாவில் வசிக்கும் அனைத்து யூதர்களையும் யாரும் நுழையவோ வெளியேறவோ முடியாத ஒரு சிறிய பகுதிக்குள் அடைத்து வைத்தனர். ஒரு செவிலியர் அடையாளத்தைப் பயன்படுத்தி அந்தப் பகுதிக்குள் நுழைந்த இரினா, பல யூதக் குழந்தைகளை அப்பகுதியிலிருந்து காப்பாற்றினார். நாஜிக்கள் அவளை ஒரு உளவாளி என்று அடையாளம் கண்டு மரண தண்டனை விதித்தனர். ஆனால் அவர் தூக்கிலிடப்பட வேண்டிய நாளில், அவரது நண்பர்கள் துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து அவளை விடுவித்தனர்.

 

சார்ள்ஸ் கோவர்ட் (Charles Coward)

யூதர்களிடையே அவர் கவுண்ட் ஒஃப் ஆஷ்விட்ஸ் என்று அழைக்கப்பட்டார். ஒரு பிரிட்டிஷ் நாட்டவரான அவர், நாஜிகளால் யூத கைதியாக அழைத்துச் செல்லப்பட்டார் . பின்னர் அவர் முகாமில் இருந்து தப்பித்து ஜேர்மனியர்களிடையே ஒரு ஜெர்மன் சிப்பாயாக உளவு பார்த்தார். அவர் ஆஷ்விட்ஸ் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு யூத கைதிகள் இறந்துவிட்டதாக நடித்து அவர்களை சடலங்களுடன் மாற்றுமாறு அறிவுறுத்துவதற்காக வருகை தந்திருந்த மருத்துவரின் உதவியைப் பெற்றார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான யூதர்கள் காப்பாற்றப்பட்டனர்.

 

ஜோர்ஜ் ஃபெர்டினாண்ட் டக்விட்ஸ் (Georg Ferdinand Duckwitz)

ஃபெர்டினாண்ட், பிறப்பால் ஒரு ஜெர்மனியர்  மற்றும் நாஜியில் ஒரு உயர் அதிகாரி. யூத-விரோதம் அற்றவர். நாஜி டென்மார்க்கை ஆக்கிரமிக்கப் போகிறது என்பதை அறிந்ததும், அவர் டேனிஷ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். ஸ்வீடிஷ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். டேனிஷ் யூதர்களை ஸ்வீடனுக்கு அகதிகளாக அனுப்பினார். இதன் விளைவாக, டென்மார்க்கில் யூத மக்களின் தொண்ணூற்றொன்பது சதவீதமான உயிர்கள் பாதுகாக்கப்பட்ட.

 

அரிஸ்டைட்ஸ் டி சசா மெண்டிஸ்  (A‍ristides de Sousa Mendes)

ஜேர்மன் படைகளால் பிரான்ஸ் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான யூதர்கள் பாதுகாப்புக்காக தெற்கு பிரான்சுக்கு தப்பி ஓடினர். பிரான்சில் போர்த்துக்கலின் தூதுவராக இருந்த சூசா மென்டிஸ் ஆயிரக்கணக்கான யூதர்களுக்கு விசா வழங்க தனது தொழில்நிலையைப் பயன்படுத்தினார். அந்த நேரத்தில், போர்த்துக்கேய அரசாங்கம் யூதர்களுக்கு விசா வழங்காத கொள்கையை பின்பற்றி வந்தது. ஆனால் இராஜதந்திரி அந்த உத்தரவை மீறி செயற்பட்டதால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

ஹக் ஓ ஃப்ளாஹெர்டி (Hugh O’Flaherty)

அந்த நேரத்தில் வத்திக்கானில் வாழ்ந்த இந்த ஐரிஷ் பாதிரியார், பல யூத மற்றும் நேச நாட்டு போர்க் கைதிகளின் உயிரைக் காப்பாற்ற தனது ஞானத்தைப் பயன்படுத்தினார். இதன் காரணமாக அவர் ஜெர்மன் இரகசிய பொலிஸாரிடமிருந்து கடுமையான மரண அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேர்ந்தது. ஒரு அறிக்கையின்படி, ஜேர்மன் உளவுத்துறைத் தலைவர்கள் வத்திக்கான் முற்றத்தில் ஒரு வெள்ளைக் கோட்டை வரைந்து, பாதிரியார் இதனை கடந்து சென்றால் கொலை செய்வோம் என்று மிரட்டினர். அச்சுறுத்தலைப் புறக்கணித்து, பாதிரியார் தனது ஆட்களை வத்திக்கானுக்கு வரவழைத்து ரோமில் பல்வேறு இடங்களில் பாதுகாத்து வைத்தார்.

 

ஜோஸ் காஸ்டெல்லனோஸ் கொன்ட்ரேராஸ் (Jose Castellanos Contreras)

இரண்டாம் உலகப் போரின்போது சுவிட்ஸர்லாந்தின் எல் சல்வடோரில் தூதராக பணியாற்றிய ஜோஸ், சுவிட்ஸர்லாந்திற்கு தப்பி ஓடிய 25,000 க்கும் மேற்பட்ட யூதர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். எல் சல்வடோர் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இந்த யூதர்கள் அனைவருக்கும் அவர் விசா வழங்கினார். மேலும் இந்த விசாக்களைப் பயன்படுத்தி யூதர்கள் சோதனைச் சாவடிகள் மூலம் ஏனைய நாடுகளுக்கு தப்பிச் செல்ல அனுமதித்தார்.

 

ஏஞ்சல் சான்ஸ் பிரிஸ் (Angel Sanz Briz)

ஹங்கேரியின் ஸ்பெயினின் தூதராக பணியாற்றிய சான்ஸ் பிரைஸ், ஹங்கேரியில் வசிக்கும் ஏராளமான யூதர்களுக்கு ஸ்பானிஷ் விசாக்களை வழங்கினார். புடாபெஸ்ட் நகரில் உள்ள சில கட்டிடங்களை ஸ்பெயினின் அரசாங்க சொத்துகளாக மாற்றவும், மீட்கப்பட்ட யூதர்களை இந்த கட்டிடங்களில் குடியேறவும் அவர் தனது இராஜதந்திர அதிகாரங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.