ஆண்களிடம் பெண்கள் விரும்பும் 7 விடயங்கள்

 

பெண்களை எவ்வாறு கவர்வதென தெரியாத ஆண்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றனர். சிலர் பெண்களை கவர்ந்துவிடலாம் என்று எண்ணி கராத்தே வகுப்புகளுக்குச் செல்கிறார்கள். சிலர் வாரணம் ஆயிரம் படத்தை பார்த்து விட்டு கிட்டார் வாசிக்க கற்றுக்கொள்கிறார்கள். சன்கிளாஸ்கள் போடுகிறார்கள், புத்தகங்களைப் படிக்கிறார்கள். இதற்கிடையில், சிலர் தேங்காய் மரங்களிலும் ஏறுகிறார்கள். ஆனால் அது எதுவாக இருந்தாலும், ஒரு ஆணை பார்த்து ஒரு பெண் ஈர்க்கப்படும் சில எளிமையான விடயங்கள் உள்ளன.ஆண்களே இவற்றை பின்பற்றிப் பாருங்கள்.

 

சுத்தம் சுகம் தரும்!

பொதுவாக சில ஆண்கள் மிகவும் அசுத்தமாக இல்லாவிட்டாலும், சாதாரண மட்டத்தில் சுத்தம் ஆற்றும் நேர்த்தியின்றியும் இருப்பார்கள். ஆனால் ஆண்கள் ஒரு பெண்ணைச் சந்திக்கச் செல்லும்போது, ​​இருக்கு சென்ட்கள் அனைத்தையும் போட்டு குளித்துவிட்டு இன்னும் கொஞ்சம் ஸ்பிரே செய்து விட்டும் செல்வார்கள். இப்போது சில படங்களில்கூட, ஒரு பெண் திடீரென்று ஒரு ஆணின் வீட்டிற்குள் நுழைந்தால், சிதறி கிடந்த பொருட்கள் எல்லாம் ஒரு சில செக்கன்களிலேயே சுத்தமாகி விடும். ஆனால் அதற்கென்று பெண்கள் மட்டும் தங்கள் அறைகளை முற்றுமாக நேர்த்தியாக வைத்திருப்பதில்லை. எப்படியாக இருந்தாலும் சுத்தமாக இருக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவதே அதிகம். அதனால் பெண்களை ஈர்க்க நினைக்கும் ஆண்கள் எல்லா நேரங்களிலும் அவர்களையும் அவர்களை சூழவுள்ள பொருட்களையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

ஆரோக்கியமான பழக்கங்கள்

இது உண்மையில் ஒரு தனிப்பட்ட விடயமல்ல. இது பல விடயங்களின் தொகுப்பு. நாம் ஆண்கள் பொதுவாக வழக்கமாக ஒரு வேலையை செய்வதில்லையே? ஆனால் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நீங்கள் ஒரு தினசரி வழக்கத்தைத் தொடங்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நீங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அதாவது காலையில் எழுந்து முகம் கழுவி, பல் துலக்கி, ஜிம்மிற்குச் செல்வது, தாடியை நேர்த்தியாக வைத்திருப்பது, இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் பல் துலக்கி, வேண்டுமென்றால் நைட் கிரீம் பூசிவிட்டு படுக்கைக்குச் செல்வது போன்றவை. இப்போது இதற்கு ஏற்ற அடுத்த கேள்வி. நாம் இவ்வாறு தினசரி வழக்கமாக இவற்றை செய்கிறோம் என்பது பெண்களுக்கு எப்படி தெரியும்? ஒரு ஆணை பார்த்தவுடன் அவன் எவ்வாறு இருக்கிறான் எப்படி இருக்கிறான் என்பது இன்னொரு ஆண் பார்ப்பதை விட பெண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும்போது பெண்கள் உங்களை பற்றி நோட்டமிடும்போது நீங்கள் தினசரி வழக்கமாக ஒரு ஆரோக்கிய பழக்கத்தை கொண்டிருந்தால் அது இலகுவாக வெளிக்காட்டிப்பட்டுவிடும்.

 

நல்ல நறுமணம்

இங்கே சொல்லவிருக்கும் இந்த விடயம் உண்மையில் மேலே உள்ள இரண்டோடும் தொடர்புடையது. உங்களை யாராவது நெருங்கிச்செல்லும் போது நல்ல நறுமணம் கொண்ட வாசனையுள்ள மனிதனாக நீங்கள் இருக்க வேண்டும். இதில் இரண்டு விடயங்கள் உண்மையில் மிக முக்கியமானவை. ஒன்று உங்கள் மீது இயற்கையாகவே வீசக்கூடிய வாசனை. அது நன்றாக இருக்க, நீங்கள் எப்போதும் சுத்தமாக இருக்கும் ஒருவராக இருக்க வேண்டும். தினசரி கழுவும் மற்றும் பல் துலக்கும் ஒரு மனிதன் இயற்கையாகவே சுத்தமான ஒரு வாசனையைத் தருகிறான். இரண்டாவது உங்களுக்கு வாசனையை தரக்கூடிய சரியான வாசனை திரவியத்தை தேர்வு செய்வது. அதாவது வீதி ஓரங்களில் விற்கும் 50 ரூபாய் வாசனை திரவியம் இல்லாமல், நீங்கள் ஒரு உயர் ரக வாசனை திரவியத்தை சற்று அதிக விலைக்கு வாங்கலாம் மற்றும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான வாசனையை தேர்வு செய்யலாம். சிறிது நேரம் கழித்து, அந்த வாசனை உங்கள் உடலின் இயற்கையான வாசனையுடன் கலந்து, அதன் சொந்த தனித்துவமான வாசனையை உருவாக்குகிறது. அத்தகைய ஆண் எப்படி பெண்களால் ஈர்க்கப்படாமல் இருக்க முடியும்?

 

சிரிக்க வேண்டிய இடத்தில் சிரிப்பும், சிந்திக்க வேண்டிய இடத்தில் அறிவும்

இந்த கதை என்ன? நீங்கள் சிரிக்க வேண்டும், அதுவும் சரியான நேரத்தில் சிரிக்க வேண்டும். இது அவ்வளவு பெரிய கடினமான செயல் அல்ல. பெண்கள் நல்ல நகைச்சுவை உணர்வைக் கொண்ட ஒரு ஆணை மிகவும் விரும்புகிறார்கள். அதற்கென்று ஒருவர் எப்போதும் சிரிக்க வைக்க முயற்சிக்கும் ஜோக்கர் போன்றவர் அல்ல. இதற்கு உதாரணமாக சில விடயங்களின் வேடிக்கையான பக்கத்தைப் பார்க்கவும் மற்றவர்களை சிரிக்க வைக்கவும் முடியும். பொதுவாக ஒரு தீவிரமான சிந்தனை கொண்டவர் ஒருவர், ஒரு விடயத்தில் சிரிக்கும் போது, ஆவர் இருக்கும் அந்த இடமே சிரிக்கும் அளவிற்கு இருந்தால், அது மாதிரியான ஆண்களையே பெண்கள் விரும்புவார்கள்.

 

கேளுங்கள் ! கேட்டுக்கொண்டிருங்கள் !

இது மிகவும் எளிமையான ஒரு காரணி, ஆனால் அத்தோடு நீங்கள் ஒரு சிறிய குழிக்குள் விழக்கூடிய இடமும் கூட. பெண்கள் நிச்சயமாக சிறந்தவற்றை சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கும் ஒருவரை விரும்புகிறார்கள். அத்தோடு பேசுவதற்கும் தன்னுள் சில விடயங்களை வைத்திருப்பவரையும் விரும்புவார்கள். இந்த இரண்டும் நல்ல சமநிலையில் இருக்க வேண்டும். அதாவது நீங்கள் எப்போதும் குதித்து குறுக்கிடாமல் கேட்க பொறுமை இருக்க வேண்டும். கேட்பவர்களை கவரும் விதத்தில் பேசும் திறனும் உங்களிடம் இருக்க வேண்டும். ஆனால் மிக முக்கியமாக, ஒரு ஆண் வெறுமனே சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கும் ஒருவராக மாத்திரம் இருந்தாலும் சரிவராது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

 

சமைக்கவும் முடியும் ! சமைத்தவற்றை கழுவவும் முடியும் !

நம் நாட்டில் பெண்கள் சமைப்பது என்பது பொதுவான ஒன்று. உலக அடிப்படையிலும் 85 சதவீதத்திற்கும் மேலாக வீட்டில் பெண்களே சமைக்கின்றனர்.  உண்மையில், இது உலகில் ஒரு பொதுவான பாரம்பரியம். ஆனால் வாய்க்கு ருசியான உணவை எப்படி செய்வது என்று தெரிந்த ஒரு ஆணுக்கு இது போன்ற தினமும் சமைக்கும் ஒரு பெண்ணிடமிருந்து நல்ல மதிப்பு கிடைக்கும்! சிலர் சமைக்க முடியும் என்று வாய் வார்த்தையால் கூறுகிறார்கள். ஆனால் நாம் சமைப்பதைப் பற்றி கொஞ்சம் பேசும்போது, ​​இவருக்கு சமைக்க முடியுமா இல்லையா என்ற கேள்வியில் சிக்கிக் கொள்கிறோம். அதனால்தான் நீங்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் எப்படி சமைக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது நல்லது. அது பெண்களை ஈர்க்கும் விடயமாகும்.

 

தாடி மேன்

இந்த பட்டியலில் கொஞ்சம் ட்ரெண்டிங் ஆன ஒரு தலைப்பு தான் இது. தாடி வளர்ப்பது என்பது சமீபத்திய காலங்களில் மிகப்பெரிய ஃபேஷன்களில் ஒன்றாகும். தாடி வைத்த சகோதரர்களும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒன்று தாடியை அமேசன் காட்டில் வளரும் ஆயிரம் காலத்து மரத்தை போல வளரவிடும் சோம்பேறி ஆண்கள், இரண்டாவது அதே அமேசன் காட்டில் வளரும் அறிய வகை மூலிகைகளை போட்டு தாடியை சீராக வளர்க்கும் ஹேண்ட்ஸம் ஆண்கள். பெண்களோ இரண்டாவது வகை ஆண்களிடையே  தான் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள். தாடி வைத்த ஆண்களை விரும்பாத பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் தாடி வைத்த ஆண்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார்கள்.