சிவப்புக் கிழங்கு அல்லது பீட்கிழங்கு என்று நாம் அழைக்கும் பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்திருப்போம். கறியாகவோ அல்லது சீவி சம்பல் வடிவிலோ சாப்பிட்டிருப்போம். தினசரி நாம் சாப்பிடும் கறியை விட சிறப்பாக செய்யக்கூடிய நிறைய உணவு வகைகள் உள்ளன. அப்படி வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்பினால் தொடர்ந்து வாசியுங்கள்.
பீட்ரூட் ரைஸ்
தேவையான பொருட்கள்
- நறுக்கிய பீட்ரூட் – 1
- கழுவிய அரிசி – 2 கப்
- பிரியாணி இலைகள் – 2
- எண்ணெய் – சிறிதளவு
- மிளகு – சிறிதளவு
- கராம்பு – 2-3
- சீரகம் – 1 தேக்கரண்டி
- சோம்பு – 1
- இலவங்கப்பட்டை – 1
- நறுக்கிய பச்சைமிளகாய் – 2
- நறுக்கிய வெங்காயம் – 1
- இஞ்சி, வெள்ளைப்பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
- வேகவைத்த பச்சை பட்டாணி – 1/2 கப்
- புதினா இலைகள் – சிறிதளவு
- அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிது எண்ணெய் சேர்க்கவும். பிரியாணி இலைகள், மிளகுக்கொட்டை, கராம்பு, சீரகம், சோம்பு, இலவங்கப்பட்டை மற்றும் பச்சைமிளகாய் சேர்க்கவும்.
- கிளறும்போது அதில் வெங்காயத்தையும் சேர்த்து கிளறவும். வெங்காயம் வதங்கி வரும்போது, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை பட்டாணி மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். சிறிது நேரம் அதை கிளறி தாளிக்கவிடவும்.
- நறுக்கிய பீட்ரூட்டை அதில் சேர்க்கவும். ருசிக்கேற்ப அதில் உப்பு சேர்க்கவும். அரிசியையும் அதில் சேர்த்து விடவும். பிறகு அதற்கு தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பீட்ரூட் ஊறுகாய்
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் – 5
- வினிகர் – 1 1/2 கப்
- சிவப்பு வெங்காயம் – 10-15
- பச்சைமிளகாய் – 10-12
- நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு – 1 மேசைக்கரண்டி
- அரைத்த கடுகு – சிறிதளவு
- சீரகம் – சிறிதளவு
- நொறுக்கிய கராம்பு – 4
- ஏலக்காய் விதைகள் – 2
- சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
- உப்பு
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
- பீட்ரூட்டை நீளமாக வெட்டுங்கள். அடுப்பில் ஒரு களிமண் பானை வைத்து சிறிது வினிகர் சேர்க்கவும். இஞ்சி பூண்டு விழுது, அரைத்த கடுகு, இஞ்சி, கராம்பு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
- கிளறும்போது மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும். ருசிக்கேற்ப உப்பு சேர்க்கவும். இது சிறிது கொதிக்கும் போது பீட்ரூட், பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு வெங்காயம் சேர்த்து கிளறவும். சுமார் ஒரு நிமிடத்தின் பிறகு அடுப்பை அணைத்து, பானையை ஒரு துணியால் நன்றாக மூடி, 3 நாட்களுக்குப் பிறகு பீட்ரூட் ஊறுகாயை சாப்பிடுங்கள்.
பீட்ரூட் சுண்டல்
தேவையான பொருட்கள்
- அரைத்த பீட்ரூட் – 2
- நறுக்கிய சிவப்பு வெங்காயம் – 3
- நறுக்கிய பச்சைமிளகாய் – 2
- உப்பு
- மிளகுத்தூள்
- எழுமிச்சை சாறு – சிறிதளவு
- மெல்லிதாக நறுக்கிய தேங்காய் – 1/4 கப்
- அரைத்த பீட்ரூட்டில் சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும்.
- சிவப்பு வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சுவைக்கவும்.
- பீட்ரூட் கொதித்து வரும்போது, தேங்காய் சற்று சேருங்கள். தேங்காய் வதங்கி வரும் வரை கிளறி, பிறகு அடுப்பில் இருந்து கீழிறக்கி எழுமிச்சை சாறு சேர்க்கவும்.
பீட்ரூட் கட்லட்
தேவையான பொருட்கள்
- அரைத்த பீட்ரூட் – 2
- வேகவைத்து பிசைந்த உருளைக்கிழங்கு – 1
- நறுக்கிய வெங்காயம் – 1
- மஞ்சள் – 1/4 தேக்கரண்டி
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
- சாட் மசாலா – 1/2 தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – சுவைக்கேற்ப
- சிறிது நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
கோட்டிங்கிற்கு தேவையான பொருட்கள்
- கார்ன்ஃப்லா – 2 மேசைக்கரண்டி
- கோதுமை மா – 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
- பிஸ்கட் தூள் – 1/4 கப்
- பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
- பீட்ரூட்டில் உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தை சேர்த்து, அனைத்து மசாலா வகைகளையும் மற்றும் உப்பு சேர்த்து கட்லெட் கலவையை தயாரிக்கவும்.
- பின்னர் கார்ன்ஃப்லா, கோதுமை மா, உப்பு மற்றும் மிளகு சேர்த்து, சிறிது நீர் சேர்த்து மாக்கலவை ஒன்றை தயாரிக்கவும்.
- இப்போது கட்லெட் கலவையிலிருந்து சிறிது உருண்டைகளை செய்து அதை அந்த மாக்கலவையில் போட்டு பிரட்டி, பிஸ்கட் தூளில் பிரட்டி பொரித்து எடுக்கவும்.
பீட்ரூட் ஃப்ரைஸ்
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் – 2
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
- மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
- எழுமிச்சை சாறு
- உப்பு
- கர்ன்ஃப்லா – 3 மேசைக்கரண்டி
- பிஸ்கட் தூள் – 1/2 கப்
- பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
- பீட்ரூட்டின் தோலை உரித்து அதை நீளமாக வெட்டவும். இதற்கு உப்பு, மிளகுத்தூள், மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அரை மணி நேரம் உறைய விடவும்.
- நன்கு ஊறிய பீட்ரூட்டை எடுத்து பாதி அளவிற்கு ஸ்டீம் செய்ய விடவும். இப்போது இதை ஒரு தனி தட்டில் போட்டு கோர்ன்ப்ஃலாவில் பிரட்டவும்.
- ஒரு தனி பாத்திரத்தில், கோர்ன்ஃப்லா போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் இந்த பீட்ரூட்டை போட்டு பிரட்டி கோட்டிங் செய்து எடுத்து பிறகு பொரித்தெடுக்கவும்.