இலங்கை இளைஞர்கள் செய்யக்கூடிய பகுதிநேர வேலைகள்

 

கல்வி கற்க வேண்டிய நேரத்தில் கல்வி கற்க வேண்டும். வளர்ந்த பின்னர், படித்துக்கொண்டே ஒரு பகுதிநேர வேலையை நீங்கள் செய்வது வருமானத்திற்கும் உங்கள் செலவிற்கும் உதவியாக இருக்கும். படிக்கும்போது உங்கள் சொந்த செலவுகளை எவ்வாறு நிர்வகிப்பதென நீங்கள் தீர்மானிப்பதில் தவறே இல்லை. பகுதிநேர வேலை செய்வது குறிப்பாக ஆண்களுக்கு மிகவும் பொருந்தக்கூடியது. மனம் விரும்பினால் இவற்றை செய்யலாம். பெரிதாக இல்லாவிட்டாலும், செலவுகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இது உதவும்.

 

டியூஷன் வகுப்பு

மேலதிக வகுப்புகளை நடத்துவது சற்று சிரமமான விடயம்தான். அது எதுவாக இருந்தாலும், உயர்கல்வி பெற்ற ஒருவருக்கு மேலதிக வகுப்பு செய்வது அவ்வளவு கடினமான காரியம் அல்ல. ஆனால் அதற்கு சரியாக புரிந்துகொள்ளும் திறன் இருக்க வேண்டும். அது சிலவேளை பழக்கத்துடன் வரலாம். பகுதிநேர மேலதிக வகுப்புகளை நடத்திய பல ஆசிரியர்கள் இப்போதெல்லாம் முழுநேரமாக அவற்றை செய்வதும் உண்டு. ஒருபுறம், கல்வி என்பது வருமானம் ஈட்டித்தரக்கூடிய ஒரு ஆதாரமாகும். மறுபுறம், நீங்கள் ஒரு ஆசிரியராக இருப்பதன் பலன்களைப் பெறுவீர்கள். ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் எடுப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களின் மாத வருமானத்தை யோசித்துப்பாருங்கள்.

 

எழுத்தாளர்

எம்மை போல இணையத்தளங்களுக்கு கட்டுரைகள் எழுதக்கூடிய திறமை உங்களிடம் இருந்தால் எழுதலாம். இதுபோல இலங்கையில் பல இணையத்தளங்கள் உள்ளன. தேடிப்பார்த்தால் உங்கள் கட்டுரைகளுக்கு பொருத்தமான இணையத்தளங்கள் நிச்சயம் கிடைக்கும். ஒரு கட்டுரைக்கு 1000 ரூபாய் என்று எடுத்தாலும் நஷ்டம் இல்லை.

 

யூடியூபர்

இலங்கையில் தற்போது மிகவும் பிரபலமான பகுதி நேர வருமான தளமாக யூடியூப்  காணப்படுகின்றது. யூடியூபர் என்பது என்ன? YouTube இல் ஒரு சேனலைத் தொடங்குவது, ஆக்கப்பூர்வமாக சிந்திப்பது, அதில் வீடியோக்களைப் பதிவேற்றுவது, வியூஸ்களை அதிகரிப்பது மற்றும் சேனலை நல்ல பிரபலமான இடத்திற்கு கொண்டு வருவது உங்கள் பொறுப்பு. அதன்படி உங்களுக்கு யூடியூப் மூலம் பணம் வழங்கப்படும். கிரியேட்டிவ் மைண்ட் இருந்தால் மட்டுமே உங்களுக்கான பார்வையாளர்கள் மற்றும் சப்ஸ்க்ரைபர்ஸ் அதிகரிப்பர்.

 

புகைப்பட கலைஞர்

தற்போது பலர் தேர்வு செய்யும் பகுதி நேர வருமான பாதை இதுவாகும். புகைப்படம் எடுத்தல் என்பது படைப்பாற்றலுடன் அதாவது கிரியேட்டிவிடியுடன்  செய்யக்கூடிய ஒரு தொழில். இதற்கு முதலில் கேமராவின் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வதும் முக்கியம். உங்களுக்கு எல்லாம் தெரியும், ஆனால் உங்களிடம் கேமரா இல்லையென்றால் பெறுமதியில்லை. ஒன்றும் தெரியாமல் இந்த வேலைக்கு வந்தால், அதைப்பற்றி கொஞ்சமாவது படித்து கற்றுக்கொள்ளுங்கள். அப்படியில்லாவிட்டால் உங்களை நீங்களே சங்கடப்படுத்திக் கொள்ள வேண்டி ஏற்படும். இரண்டு மணி நேர படப்பிடிப்புக்கு 3000 எடுத்துக் கொண்டால் போதுமல்லவா?

 

சித்திரம் அல்லது கைவினைப்பொருட்கள்

உங்களுக்கு வரைய முடியுமா? அல்லது கைவினைப்பொருட்கள் செய்ய முடியுமா? பகுதி நேர வேலையாக பென்சில் ஆர்ட்ஸ் செய்யும் நிறைய ஆண்களும் உள்ளனர். சிலர் பென்சில் மட்டுமே பயன்படுத்துகிறார்கள், சிலர் கொலாஜ் முறையைப் பயன்படுத்துகிறார்கள், இன்னும் சிலர் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துகிறார்கள். எந்த முறையாக வரைகிறோம் என்று பொருட்படுத்தாமல் வரைதல், கைவினைத்திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை மிக முக்கியமானவை என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஒரு சாதாரண ஓவியம்கூட இப்போது குறைந்தது 3,000 வரை விற்பனையாகிறது.

 

டேட்டா என்ட்ரி

அது என்ன? இது உண்மையில் ஒரு பகுதி நேர வேலை. data entry operators in srilanka என்று கூகிளில் நீங்கள் தேடிப்பார்த்தால், ஒரு பட்டியல் வரும். அதில் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் வரக்கூடிய பல்வேறு வகையான தரவுத்தாள்களை வீட்டிலிருந்தே நிரப்ப வேண்டும். அதற்கு நீங்கள் ஊதியமும் பெறுவீர்கள். உங்கள் ஆர்வம் மற்றும் செயற்திறனின் அடிப்படையில் உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் திறன் உங்களுக்கு உள்ளது. காத்திருக்காமல் சிறிது முயற்சி செய்தால் நஷ்டமில்லை.

 

டெலிவரி பார்ட்னர்ஸ்

ஒரு பகுதிநேர வேலையாக பிட்ளஸா ஹட்டில் உள்ள உணவுப் பார்சல்களை மற்றும் பிற பார்சல்களை மேலும் வேறு உணவுக் கடைகளுக்கும் பிற வணிக நிறுவனங்களுக்கும் வழங்குதல். பெரும்பாலான நேரங்களில், உங்களுக்கு இரவில் ஓய்வு இருந்தால், நீங்கள் அந்தந்த நிறுவனங்களுடன் பேசி அதற்கேற்ப நேரத்தை ஏற்பாடு செய்யலாம். அவர்களே பைக்கைக் கொடுக்கிறார்கள். அதற்கான எரிபொருளும் அவர்களிடமிருந்தே கிடைக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது விரைவாக சென்று உணவை டெலிவரி செய்வது மட்டுமே.