உலகளவில் தோல்வியடைந்த சந்தைப்படுத்தல் விளம்பரங்கள்

 

 

சந்தைப்படுத்தல் என்பது எந்தவொரு வணிகத்திலும் இன்றியமையாத ஒரு பகுதியாகும். ஒருமுறை ஒரு பத்திரிகையாளர் கோகோ கோலா நிறுவனத்தின் தலைவரிடம் ஒரு விசித்திரமான கேள்வியைக் கேட்டார். “உங்கள் நிறுவனம் உலகப் புகழ்பெற்ற பிராண்டாக இருக்கும்போது, ​​மற்றொரு தயாரிப்புடன் போட்டி இல்லாத சூழலில் இருக்கும்போது விளம்பரத்திற்காக ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டும்?” என்றார். அதற்கு அந்த தலைவர் திரும்பி பத்திரிகையாளரிடம் ஒரு கேள்வி கேட்டார். “விமானம் புறப்பட்ட பிறகு ஒரு விமானம் ஆகாயத்தில் நிறுத்தப்படுவதை நீங்கள் எப்போதாவது பார்த்தீர்களா?” என்றார். இதே கேள்வி சில இடங்களில் வெவ்வேறு வழிகளில் சொல்லப்படுகிறது. ஆனால் எந்தவொரு பிராண்டின் உயர்ச்சியும் அந்த பிராண்டிற்காக விளம்பரப்படுத்தப்படுவதைப் பொறுத்தது என்று அவர் குறிப்பிடுவதே இங்கு மையப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சில சமயங்களில், இந்த விளம்பரம் என்பது சரியாக செய்யப்படாவிட்டால், அது ஒரு பிராண்டிற்கு எதிர்பாராத சேதத்தை ஏற்படுத்தும். உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளில் இந்த வகையான தவறுதலான சந்தைப்படுத்தல் பிரசாரத்தின் தாக்கம் குறித்து இன்று நாம் பேசப்போகிறோம்.

 

Pepsi

2017 இல் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு கறுப்பினத்தவர் கொல்லப்பட்டார். இதனால் பொலிஸாருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த கட்டத்தில் பெப்சி, ஒரு ரியாலிட்டி ஸ்டாரான கெண்டல் ஜென்னரை வைத்து ஒரு விளம்பரத்தை உருவாக்கினர். அதில் பொலிஸ் அதிகாரிக்கு பெப்சி கேன் ஒன்றை கொடுப்பது போல சித்தரிக்கப்பட்டு விளம்பரம் இருந்தது. இந்த விளம்பரம் அறிவிக்கப்பட்ட சிலமணி நேரங்களுக்குள், அனைத்து பகுதிகளிலிருந்தும் வலுவான எதிர்ப்புக்கள் எழுந்தன. பெப்சி பின்னர் அந்த விளம்பரத்தை தடை செய்தது. ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு நிறுவனத்தின் முதலாளி இந்த சம்பவத்தின் விளைவாக இராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

 

Dove

பெண்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட டவ் நிறுவனத்தின் ரியல் பியூட்டி பிரசாரம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக இடம்பெறும் திட்டமாகும். ஆனால் பின்னர் இங்கிலாந்தில் அவர்கள் வெவ்வேறு பெண்களின் உடல் வடிவத்திற்கு ஏற்ப குறைந்த அளவில் தங்கள் தயாரிப்புக்களை தயாரிக்க முடிவு செய்தனர். ஆனால் ஏழு வடிவங்கள் மட்டுமே இருந்ததால் ஏனைய பெண்கள் வருத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இதனால் அந்த தயாரிப்பு நிறுத்தப்பட்டது. ஆனால் பிராண்டிற்கு ஏற்பட்ட சேதம் மிகப்பெரியது.

 

Ford

பெண்களின் பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் #MeToo ட்ரெண்டிங் சென்று கொண்டிருந்த காலப்போக்கில், ஃபோர்டு கார் தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய விளம்பரத்தை அறிமுகப்படுத்தியது. விளம்பரத்தில் ஃபோர்டு காரில் பின்பகுதியில் மூன்று பெண்கள் கட்டப்பட்டிருப்பதைக் காட்டியது. #MeToo ட்ரெண்ட் போய்க் கொண்டிருந்த காலமாக அது காணப்பட்டது. இந்நிலையில், அந்த விளம்பரத்திற்கு எதிராக பலர் கூட்டம் கூடினர். இறுதியில் நிறுவனம் விளம்பரத்தை அகற்றியது மட்டுமல்லாமல், பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது.

 

Sony

சில காலத்திற்கு முன்பு, சோனி “Sony’s white Playstation Protable device” என்ற பெயரில் ஒரு சிறிய பிளே ஸ்டேஷனை அறிமுகப்படுத்தியது. அதற்காக அவர்கள் பயன்படுத்திய விளம்பரம் மிகவும் கேள்விக்குரியதாக மாறியது. இதில் ஒரு கறுப்பின பெண்ணின் கன்னத்தை, வெள்ளை முடி மற்றும் வெள்ளை தோலுடன் ஒரு வெள்ளை நெரிப்பதாக காணப்பட்டது. அதற்கு கீழே “Playstation Portable, White is Coming” என்று இருந்தது. இந்த விளம்பரத்திற்காக சோனி தனது விளம்பரங்களில் இனவெறியைப் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதன் ஒரே நோக்கம் தனது வாடிக்கையாளர்களுக்கு வண்ண மாற்றத்தை அறிமுகப்படுத்துவதாகும்.

 

Burger King

உலகிற்கு கவர்ச்சிகரமான விளம்பர உத்திகளை அறிமுகப்படுத்திய ஒரு பிராண்டாக புகழ்பெற்ற பர்கர் கிங்கும் அதில் அதிக முதலீடு செய்கிறது. விக்கிபீடியாவில் குறிப்பிட்டுள்ளபடி பர்கரின் உள்ளடக்கத்தைக் கேட்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கான பயன்பாட்டை அவர்கள் ஒரு முறை அறிமுகப்படுத்தினர். ஆனால் இந்த படைப்பு பிரசார திட்டத்தின் ஆயுட்காலம் மிகக் குறைவு. காரணம், வெவ்வேறு நபர்கள் தரவை மாற்றி, சில சமயங்களில் சயனைட் போன்ற நச்சுக்களும் இருப்பது போல சேர்த்தனர்.

 

Adidas

உலகெங்கிலும் உள்ள பல தடகள போட்டிகளுக்கு அனுசரணை செய்யும் அடிடாஸ், அதன் பங்கேற்பாளர்களுக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் மின்னஞ்சலை அனுப்பும் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 2013 ஆம் ஆண்டில் பாஸ்டன் மரத்தனுக்குப் பிறகு, வழக்கம் போல் அவர்கள் “Congrats, you survived the Boston Marathon” என்ற தலைப்பில் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார்கள். பொதுவாக, தலைப்பு ஒரு பிரச்சினையாக இல்லை. ஆனால் 2013 இல் இந்த மரத்தான் குண்டுவெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் இந்த நிறுவனத்திற்கு எதிர்பாராத சோகத்தை ஏற்படுத்தியது.

 

Airbnb

2017 ஆம் ஆண்டில், ஹார்வி சூறாவளியால் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நீரில் மூழ்கியது. இந்த நேரத்தில், ஏர்பின்ப் ஒரு புதிய விளம்பர பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியது.

“தண்ணீருக்கு மேலே இருங்கள்” “Stay above water”

“இந்த மிதக்கும் வீடுகளுடன் வாழ்க்கை நீர்வாழ்வை வாழ்க” “Live the life aquatic with these floating homes”

இப்படி ஒரு விளம்பரத்தில் யாராவது விரும்புவார்களா என்று நீங்களே சொல்லுங்கள்?