2020 இல் புதிதாக வெளிவந்துள்ள iPHONE 12

 

ஆப்பிள் என்றாலே எந்த வருடமும் தமது புதுப்புது மொபைல் போன்களை தரமான வடிவத்திலும் தரமான செயற்பாட்டிலும் வெளியிடும் உலகப்புகழ்பெற்ற நிறுவனம். அதேபோல அதன் விலைமதிப்புக்கும் பஞ்சமில்லை. இதுவெல்லாம் நாம் அறிந்ததே. இதற்கு முன்பும் லைபீ தமிழ் 2019 இல் வெளிவந்த ஐபோன் 11 பற்றிய ரிவியூ செய்திருந்தோம். இன்று நாம் 2020 ஒக்டோபரில் வெளியான iPHONE 12 மொடல் சீரீஸில் புதிதாகவும் கண்ணை கவரும் விதத்திலும் அமைந்த சில ஸ்பெசிபிகேஷன்ஸ் பற்றி பார்க்கப்போகிறோம்.

 

ஹோம்பொட் மினி (HOMEPOD MINI)

APPLE 2018 இல் வெளியிட்ட HOMEPOD இன் சிறிய வெர்ஷனாக இந்த வருடம் HOMEPOD MINI யை ரிலீஸ் செய்துள்ளது. இதுவும் முன்பு வெளியிடப்பட்ட HOMEPOD போல செயற்படக்கூடிய ஒரு APPLE ஸ்பீக்கராகும். இதன் மேற்பகுதியில் தொடுதிரை கொண்ட அமைப்பும், SIRI VOICE CONTROL சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.  பெயரில் உள்ளவாறு சிறியதாக இருப்பதும், பொதுவாக அனைவரும் வாங்கக்கூடிய விலையாக கிட்டத்தட்ட 99 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகவுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக நம் நாட்டில் மேற்கத்தேய நாடுகளை போல வளர்ச்சியடைந்த தொழிநுட்பங்கள் வீடுகளில் பயன்படுத்துவது குறைவென்பதால் இந்த HOMEPOD MINI  இலங்கையில் அதிகம் விற்பனையாகாது என்று எதிர்வுகூறப்படுகின்றது.

 

iPHONE 12 சீரிஸ் DISPLAY SIZE

iPHONE 12 சீரிஸில் iPHONE 12 மற்றும் iPHONE 12 MINI ஒரே மாதிரியாகவும் அளவின் அடிப்படையில் மாத்திரம் சிறுவித்தியாசத்தை கொண்டுள்ளன. அதாவது iPHONE 12 SUPER XDR RETINA OLED DISPLAY யை 6.1 INCH  அளவில் 1170 X 2532 PIXELS உடன் அமைந்துள்ளது. பெயரை போல MINI யாக இருப்பதால் iPHONE 12 MINI அதே (S.X.R) OLED DISPLAY வில் 5.4 INCH DISPLAY வை கொண்டுள்ளது.

IPHONE 12 PRO சீரீஸில் 6.1 INCH (1170 X 2532 PIXELS) DISPLAY வை IPHONE 12 PRO வும் 6.7 INCH (1284 X 2778 PIXELS) DISPLAY வை IPHONE 12 PRO MAX   உம் கொண்டுள்ளன.

 

EDGE-TO-EDGE DISPLAY

இந்த முறை iPHONE 12 சீரீஸில் EDGE-TO-EDGE DISPLAY யை மீண்டும் அறிமுகம் செய்துள்ளனர். இது பார்ப்பதற்கு iPHONE 4 மற்றும் 5 சீரிஸ்களில் இருந்தது போல இருந்தாலும், இதனை மீண்டும் அறிமுகப்படுத்திய காரணம்தான் நமக்கு சற்று சாதகமாக இருக்கிறது. நான்கு மடங்கு 4X அதிகமான சிறந்த DROP PERFOMANCE கொண்ட CERAMIC SHIELD பொருத்தியுள்ளனர். அதாவது கீழே எதிர்பாராத விதமாக விழுந்தால் நொறுங்கும் ஐபோன் DISPLAY யினை மாற்றுவதற்கான செலவை குறைப்பதற்கும், இலெக்ட்ரோனிக் கழிவுகளை உலகில் இருந்து குறைப்பதற்கும் இந்த EDGE-TO-EDGE DISPLAY வை மீண்டும் கொண்டு வந்துள்ளனர் என்பதை பொதுவாக நாம் தெரிந்து கொள்ளமுடியும்.

 

உலகிலேயே சக்திவாய்ந்த PROCESSOR

 

 

ஒரு ஸ்மார்ட்போனின் சக்தி மட்டுப்படுத்தப்படுவது அதன் வன்பொருள், இயக்க முறைமை மற்றும் அந்த ஸ்மார்ட்போனில் HARDWARE / SOFTWARE அமைப்பு எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் பொறுத்தது. எனவே iPHONE 12 உயர் மட்ட வன்பொருளைக் கொண்டிருந்தாலும் iPHONE 12 அதிலிருந்து அதிகமானதைப் பெற்று அதன் பெர்போமான்ஸை அதிகரிக்கிறது. இது பொதுவாக ஐபோனை பயன்படுத்தும் எவருக்கும் தெரியும். எடுத்துக்காட்டாக, iPHONE 12 , 12 MINI , 12 PRO மற்றும் 12 PRO MAX ஆகிய நான்கு சீரீஸ்களும் 6 GB RAM ஐ கொண்டுள்ளது. ஆனால் இப்போது எளிதாக வெளிவரும் ஒரு MIDRANGE ஸ்மார்ட்போனில் கூட 6 GB RAM உள்ளது. ஆனால் APPLE iPHONE 12 இன் வேகம் மற்றும் செயற்திறனுடன் 6 ஜிகாபைட் RAM போதுமானது.

இதற்கு மேலதிகமாக, ஐபோன் 12 இன் நான்கு சீரீஸ்களிலும் தெரிவுசெய்ய பல INTERNAL MEMORY CAPACITY சீரீஸ் உள்ளன. அவை 64 GB முதல் 512 GB வரை வேறுபடுகின்றன. இது APPLE A14 BIONIC (5 NM) HEXA-CORE PROCESSOR மற்றும் APPLE GPU (4-CORE GRAPHICS) செயலியைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த PROCESSOR சக்தி காரணமாக, ஐபோன் 12 சீரிஸ் தற்போது சந்தையில் உள்ள மிக சக்திவாய்ந்த HIGHRANGE ஸ்மார்ட்போன்களுக்கு அதிக நெருக்கடியை கொடுக்கும்.

 

LOW LIGHT 4K HDR வீடியோ கேமரா

iPHONE 12 PRO சீரிஸில் உள்ள 3 கேமராக்களும் iPHONE 11 PRO சீரிஸில் இருந்ததை போல அதே கேமரா FEATURES ஐ கொண்டுள்ளது, அதே WIDE , ULTRA WIDE , TELEPHOTO கேமரா லென்செஸ்களை கொண்டுள்ளன. ஆனால் IPHONE 12 சீரிஸ் மற்றும் 12 PRO சீரிஸில் உள்ள WIDE  மற்றும் ULTRA WIDE கேமராக்கள் இரண்டுமே இப்போது நைட் பயன்முறையைக் கொண்டுள்ளன. மேலும் நம்பமுடியாத LOW LIGHT காட்சிகளைக் படம்பிடிப்பதிலும் இது முன்னெப்போதையும் விட சிறந்ததாக மாற்றியுள்ளனர். புதிய WIDE கேமரா 27 சதவீதம் அதிக LIGHTENING ஐ கொண்டுவருகிறது. ஆகவே, நீங்கள் பகல் அல்லது நிலவொளி இருக்கும் சந்தர்ப்பங்களில் கூட புகைப்படங்களை எடுத்தாலும் அழகிய வண்ணத்தைப் பெறுவீர்கள்.  இதற்கெல்லாம் காரணம் இவர்கள் இதில் பொருத்தியுள்ள TOF 3D LiDAR SCANNER  எனப்படும் ஒன்றே காரணம். இதன் மூலமே LOW LIGHT சந்தர்ப்பங்களிலும் சிறப்பாக வீடியோக்களையும் படங்களையும் பதிவுசெய்யலாம்.