இப்போது KFC என்றால் யாருக்குத் தான் தெரியாது? இது அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரிந்த இடமாகும். இந்த KFC நம் நாட்டு மக்களுக்கு பழக்கமான இடம் மட்டுமல்ல, இது ஒரு அமெரிக்க FAST FOOD RESTAURANT. இலங்கையில் முதல் KFC உணவகம் 1995 இல் மெஜஸ்டிக் சிட்டி சூப்பர் காம்ப்ளெக்ஸில் திறக்கப்பட்டது. இப்போது, KFC இலங்கை முழுவதும் 40 க்கும் மேற்பட்ட கிளைகளை திறந்துள்ளது. இலங்கையில் உள்ள இந்த KFC நெட்வொர்க் கார்கில்ஸ் சிலோனுக்கு சொந்தமானது. அதாவது நாம் அனைவரும் அறிந்த கார்கில்ஸ் புட் சிட்டி நடத்துனருக்குச் சொந்தமானது. KFC வலையமைப்பின் சர்வதேச தரத்திற்கு ஏற்ப கார்கில்ஸ் உணவு வகைகளை வழங்குகிறது என்பதால் இந்த உணவகம் இலங்கையில் மிகவும் பிரபலமாகிவிட்டது.
எதுவாயினும் இந்த கதை அதை பற்றி அல்ல. KFC-யில் சாப்பிட்டுவிட்டு சுவையை பற்றி பேசிய பிறகு இந்த உணவகச் சங்கிலியின் தொடக்கத்தின் கதை முதல் இப்போது இருக்கும் வரை இந்த தொடர் பயணம் உங்களில் பலருக்கும் தெரியாது. ஆனால் இதைப் படித்தால், இது தெரிந்து கொள்ள வேண்டிய கதை தான் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
நிறுவனர் மற்றும் அசல் உரிமையாளர்
இந்த KFC உணவக சங்கிலியின் நிறுவனர் கர்னல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ் ஆவார். அவர் செப்டம்பர் 1890 இல் பிறந்தார். அவரது தந்தை அவருக்கு 6 வயதாக இருந்தபோது இறந்தார். அதனால், முழு குடும்பத்தின் சுமையும் சிறிய சாண்டர்ஸின் தாயின் மீது விழுந்தது. எனவே சிறிய சாண்டர்ஸ் மற்றும் இரண்டு ஆண்குழந்தைகளை விட்டு வேலைக்கு வெளியேறும் நிலைக்கு அவரது தாயார் தள்ளப்பட்டார். ஏழு வயதிலிருந்தே, அம்மா சாண்டர்ஸுக்கு எப்படி சமைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார். சாண்டர்ஸ் சமையல் கலையைப் பற்றி அறிந்துகொள்வது இப்படித்தான்.
ஆரம்பத் தொழில்
13 வயதில் வீட்டை விட்டு வேலைக்காக வெளியேறிய சாண்டர்ஸ் பலவிதமான வேலைகளை செய்துள்ளார். அவர் முதலில் ஒரு பண்ணையில் வேலை செய்தார். 15 வயதில் பண்ணை வேலையை விட்டு வெளியேறி பல்வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அவர் வண்ணப்பூச்சு தொழிலாளியாக, தீயணைப்பு வீரராக மற்றும் காப்பீட்டு விற்பனையாளராக 1929 வரை 40 ஆண்டுகள் வெவ்வேறு துறைகளில் தொழில்களில் பணியாற்றியுள்ளார்.
முதல் உணவகம்
1929 இல் தான் சாண்டர்ஸ் தனது முதல் உணவகத்தைத் திறந்தார். இது கென்டக்கி எனும் இடத்தில் ஒரு சேவை நிலையத்திற்கு அருகில் உள்ளது. அவர் சிறுபிள்ளையாக இருந்தபோது தனது தாயிடமிருந்து கற்றுக்கொண்ட சிக்கன் ரெசிபியை முதலில் தயாரித்து விற்கிறார். இந்த சிக்கன் சுவைக்கு இந்த உணவகம் மிகவும் பிரபலமானது, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தெருவில் எதிர்பக்கமாக ஒரு பெரிய நிலத்தை வாங்கி உணவகத்தை விரிவுபடுத்தினார். இந்த சிக்கன் உணவின் சுவை காரணமாக, அப்போதைய ஆளுநரும் அவருக்கு கென்டக்கி கர்னல் (Kentucky Colonel) என்ற பெயரைக் கொடுத்தார். 1937 ஆம் ஆண்டளவில் அவர் 142 இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய உணவகத்தை சாண்டர்ஸ் கோர்ட் & கபே ( Sanders Court & Café )என்று திறந்து வைத்தார். 1940 ஆம் ஆண்டில் தான் இன்றளவும் பயன்படுத்தும் அசல் KFC சிக்கன் செய்முறையை உருவாக்கினார். இந்த அசல் செய்முறை 11 மசாலாப் பொருட்களுடன் கூடிய மறைக்கப்பட்ட செய்முறையாகக் கூறப்படுகிறது.
ஓய்வுக்காலம் மற்றும் நிராகரிப்பு
எப்படியோ, 1955 ஆம் ஆண்டில் சாண்டர்ஸ் உணவகத்தை விற்று தனது இரகசிய சிக்கன் செய்முறையை உரிமையாக்க முடிவு செய்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் உணவகத்திலிருந்து ஒவ்வொரு இடத்திற்குச் சென்றார். ஆனால் இந்த செய்முறை பலமுறை நிராகரிக்கப்படுகிறது. கடைசியாக, ஒரு உணவகம் அவரது செய்முறையையும் இரகசிய மசாலா பாக்கெட் ஒப்பந்தத்தையும் விரும்புகிறது. ஆனால் அவரது இரகசிய சமையல் குறிப்பை யாருக்கும் கொடுக்கவில்லை. மாறாக அந்த செய்முறைக்காக தயாரிக்கப்பட்ட மசாலாப் பொருட்களின் பக்கெட்டுகளைத்தான் தருகிறார்.
KFC இன் ஆரம்பம்
பின்னர் அவர் முன்பு தொடங்கிய சாண்டர்ஸ் கோர்ட் & கஃபே உணவகத்தை விற்று, இந்த உரிமையை உலகம் முழுவதும் ஊக்குவிக்க கடுமையாக உழைக்கிறார். அப்படித்தான் முதல் கென்டக்கி ஃபிரைட் சிக்கன் (Kentucky Fried Chicken) அல்லது KFC உணவகம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் உரிமையின் நிறுவனர் பீட் ஹர்மன், Kentucky Fried Chicken என்ற பெயரையும் “It’s finger lickin’ good” என்ற வாசகத்தையும் உருவாக்கினார். 1964 வாக்கில் சாண்டர்ஸின் ரெசிபியை விற்கும் உரிமையாளர்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்த முடிந்தது.
KFC விற்பனை
1964 இல், அதாவது செண்டர்ஸின் 74 வயதில் KFC நெட்வெர்க்கை விற்பனை முடிவு செய்தார். அதன்படி, அவர் நிறுவனத்தை இரண்டு மில்லியன் டொலர்களுக்கு விற்றார். இருப்பினும், விற்பனை ஒப்பந்தத்தின்படி அவருக்கு நிறுவனத்தால் ஆயுள் ஓய்வூதியம் செலுத்தப்படும். மேலும் நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் தர கட்டுப்பாட்டாளராக தொடர்ந்திருப்பார். 1971 இல் உரிமையாளர்கள் நிறுவனத்தை விற்றனர். இந்த நிறுவனத்தின் நிறுவனர் கர்னல் சாண்டர்ஸ் 1980 இல் தனது 90 வயதில் இறந்தார். அதற்குள், அவர் உருவாக்கிய KFC உணவக சங்கிலி 48 நாடுகளில் 6,000 உணவகங்களாக வளர்ந்தது.
தற்போதைய KFC நெட்வொர்க்
KFC நெட்வொர்க் தற்போது Yum! Brands நிறுவனத்தின் கீழே இயங்குகிறது. Pizza Hut மற்றும் Taco Bell போன்ற நிறுவனங்களின் உரிமையாளர் தான் இந்த Yum! Brands. KFC தற்போது 135 நாடுகளில் 22,600 உணவகங்களைக் கொண்ட ஒரு பெரிய FAST FOOD RESTAURANT சங்கிலியாகும். அத்தோடு KFC தான் உலகின் இரண்டாவது மிகப்பெரிய FAST FOOD சங்கிலியாகும். இது மெக்டொனால்டுக்கு அடுத்தபடியாக உள்ளது.