எம்மிடமுள்ள தீய பழக்க வழக்கங்கள் மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் நாம் அதிக எடை மற்றும் உடல் பருமனைப் பெறுகிறோம். ஆரோக்கியமான உணவுப்பழக்கதின் மூலம் சிலர் கொழுப்பை குறைக்க முயற்சிக்கின்றனர். இந்த செயற்பாட்டை துரிதப்படுத்துவதற்காக சில பானங்களும் உண்டு. அவற்றை உங்களுக்காக இன்று கொண்டுவந்துள்ளோம். இரைப்பை அழற்சி போன்றவற்றை கொண்டவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் இந்த பானங்களை குடிக்கவும் அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் கொழுப்பை குறைக்கும் பானங்களை வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே குடிப்பது நல்லது. தினசரி பயன்பாட்டிற்கு அவ்வளவாக பரிந்துரைக்கப்படவில்லை.
டார்க் சொக்கலேட் கோஃபி
தேவையான பொருட்கள்
- (FLAX SEEDS) ஆளி விதைகள் – 1/2 தேக்கரண்டி (தூள்)
- அரைத்த டார்க் சொக்கலேட் – 1 தேக்கரண்டி
- ப்ளக் கோஃபி – 1 தேக்கரண்டி
- சுடு நீர் – 1 கப்
- முதலில் சூடான நீரில் ப்ளக் கோஃபி சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
- பின்னர் ஆளி விதைகளை அதில் சேர்த்து பிறகு அதில் டார்க் சொக்கலேட்டையும் சேர்த்து கலக்கி சூடாக குடிக்கவும்.
கறுவாப்பட்டை மற்றும் மரத்தேன் கலவை
தேவையான பொருட்கள்
- கறுவாப்பட்டை தூள் – 2 தேக்கரண்டி
- தேன் – 1 மேசைக்கரண்டி
- சுடு நீர் – 1 கப்
- சூடான நீரில் கறுவாப்பட்டை தூள் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை சற்று ஆறவிடவும். தேன் சேர்க்கும்போது இது முற்றிலும் ஆறி இருக்க வேண்டும். இல்லையெனில் தேனின் பலன்கள் இன்றி போய்விடும்.
- நன்கு ஆறியதும் தேன் சேர்த்து கிளறவும். 12 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்து காலை உணவுக்கு 30 நிமிடங்கள் முன்னதாக எடுத்துக் கொண்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இஞ்சி எலுமிச்சை நீர் / ஜிஞ்சர் லெமன் வோட்டர்
தேவையான பொருட்கள்
- குளிர்ந்த நீர் – 1 கப்
- வறுத்த சீரக தூள் – 3/4 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
- இஞ்சி – ஒரு துண்டு
- இஞ்சியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். இதை குளிர்ந்த நீரில் போட்டு கலக்கவும். நன்கு கலந்த பிறகு ஒரு குவளையில் போடவும்.
- இப்போது இதில் சீரகத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் மேலதிகமாக நீரை சேர்த்துக்கொள்ளுங்கள்.
லெமன் – மின்ட் கலந்த கிறீன் டீ
தேவையான பொருட்கள்
- சுடு நீர் – 1 கப்
- மின்ட் இலைகள் – 7 – 8
- உலர்ந்த கிறீன் டீ – 4 முதல் 5 இலைகள் (அல்லது ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ தூள்)
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
- முதலில் மின்ட் இலைகளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு வெப்பத்தை சிறிது குறைத்து, கிரீன் டீ தூள் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வேகவைத்து வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக குடிக்கவும்.
அன்னாசி மற்றும் கறுவாப்பட்டை டீ
தேவையான பொருட்கள்
- நறுக்கிய அன்னாசிப்பழம் – 1 1/2 கப்
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
- கறுவாப்பட்டை தூள் – 1/2 தேக்கரண்டி
- அன்னாசிப்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கவும். இப்போது அதை ஸ்மூத் ஆகும் வரை ப்ளெண்ட் செய்யவும்.
- சிறிது அன்னாசிப்பழத்தை ஒரு குவளையில் போட்டு எலுமிச்சை சாறு மற்றும் கறுவாப்பட்டை தூள் போட்டு கலக்கவும். ருசிக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
- சிறந்த பயனை பெற இதை வெறும் வயிறாக இருக்கும் போதே குடிக்கவும்.
ஆப்பிள் சைடர் வினிகர், புளுபெர்ரி, லெமன் ஜூஸ்
தேவையான பொருட்கள்
- ஆப்பிள் சைடர் வினிகர் – 1 மேசைக்கரண்டி
- ஐஸ் கட்டிகள்
- நீர் – 1 கப்
- உறைந்த புளூபெர்ரி – 2 மேசைக்கரண்டி
- தேன் – 1 தேக்கரண்டி
- எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
- முதலில் ஒரு கரண்டியால் புளூபெரிகளை பிசைந்துகொள்ளுங்கள். அதில் சிறிது தேன் சேர்க்கவும்.
- பின்னர் எலுமிச்சை சாறு மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்க்கவும். ஐஸ் கட்டிகளை சேர்த்து தேவையான அளவிற்கு நீர் சேர்க்கவும். இதைக் குடிக்க ஒரு நிமிடத்திற்கு முன் ஒரு கரண்டியால் கிளறவும்.
க்ரேஃப்ரூட் மற்றும் வெள்ளரி பானம்
தேவையான பொருட்கள்
- வெள்ளரி – 1/2 கப்
- எலுமிச்சை – 1
- திராட்சைப்பழம் – 1
- நீர் – 1 கப்
- எல்லாவற்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி சிறிது நீர் சேர்த்து கலக்கவும்.
- நன்கு மெதுவான பதத்திற்கு வரை கலக்கவும். தேவைப்பட்டால் மேலும் நீர் சேர்த்து பருகவும்.