நிர்வாணமாக இருப்பதைப் போல கனவு கண்டீர்களா?

 

அடிக்கடி காணும் கனவுகளின் மறைக்கப்பட்ட அறியாத அர்த்தங்கள் குறித்த தொடர் கட்டுரைகளை நாங்கள் உங்களிடம் கொண்டு வருவோம் என்பதை Lifie தமிழ் வாசகர்கள் ஏற்கனவே அறிவார்கள். இன்றும் அப்படித்தான் ஒரு தலைப்புடன் வந்துள்ளோம். அதாவது நிர்வாணமாக நீங்கள் கனவு கண்டிருப்பீர்கள். இது பொதுவானதுதான். என்றாலும் அர்த்தத்தை புரிந்துகொள்வது நல்லது தானே? நாங்கள் சொல்வதைத் தவிர வேறு ஏதாவது நிர்வாண கனவுகளைப் பற்றி கேள்விகள் இருந்தால், கமெண்ட் பகுதியில் எங்களுக்கு அறிவியுங்கள்.

 

உங்கள் நிர்வாணத்தை பார்த்து மற்றவர்கள் சிரித்தார்களா?

நீங்கள் கனவில் நிர்வாணமாக இருக்கும்போது, ​​உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நிர்வாணத்தைப் பார்த்து சிரிப்பது போல கனவு காண்கிறீர்களா? அத்தகைய கனவு என்பது உங்கள் வாழ்க்கையில் உள்ள ஒரு பலவீனத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த நீங்கள் வெட்கப்படுகிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அதேபோல உங்கள் நிர்வாணத்தை பார்த்து மற்றவர்கள் சிரிக்கும்போது நீங்கள் அதை பற்றி கவலைப்படாமல் இருப்பது போல கனவு கண்டால், உங்கள் பலவீனங்கள் வெளிப்பட்டாலும் நீங்கள் அதை பற்றி கவலைப்படப்போவதில்லை என்று அர்த்தம்.

 

பணியிடத்தில் / கல்வி கற்கும் இடத்தில் நிர்வாணம்!

அலுவலகத்தில் அல்லது நீங்கள் படிக்கும் பாடசாலையில் நிர்வாணமாக இருப்பது போல நீங்கள் எப்போதாவது கனவு கண்டீர்களா? அப்படி பெரும்பாலும் காணும் கனவிற்கு, நீங்கள் செய்யும் எந்த வேலை அல்லது கல்வி நடவடிக்கைகளுக்கும் நீங்கள் சரியாக தயாராக இல்லை என்று அர்த்தம். அதாவது உங்களுக்கு வேலையில் ஒதுக்கப்பட்ட பணிகளை முடிக்க உங்கள் இயலாமையையும், அதைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிந்து விடுமா என்ற பயத்தையும் வெளிப்படுத்தும். இதுவே நீங்கள் படிக்கும் ஒருவராக இருந்தால் படிக்கும் இடத்தில் நிர்வாணமாக இருப்பது போல காண்பது ஏனென்றால், கற்றுக் கொள்ளும் பாடங்களைப் பற்றிய அறிவு பலவீனமடையும், மேலும் தோல்வியுற்ற நபரைப் போல இருக்கக்கூடும் என்று பயப்படுவைத்தாலே ஆகும்.

 

பல நிர்வாணங்களுக்கு மத்தியில் உங்களுக்கு மட்டும் ஆடை!

ஒரு கனவில், நீங்கள் உங்கள் ஆடையை அணிந்து தனியாக இருக்கிறீர்கள் மற்றவர்கள் அனைவரும் நிர்வாணமாக இருப்பதாகவும் காணும் கனவின் மூலம் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணரலாம். ஆனால் அந்த கனவு உண்மையில் நீங்கள் பாதுகாப்பற்றவர் என்பதைக் காட்டுகிறது. மற்றவர்களுடன் நல்ல உறவைப் பேண முடியாமல் நீங்கள் தவிப்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

 

நிர்வாணம் என்றாலும் வசதியான கனவு

ஒரு கூட்டத்தின் நடுவில் தான் நிர்வாணமாக இருப்பது போல காணும் கனவு பெரும்பாலான மக்கள் வெட்கப்படுகின்ற ஒரு கனவு. ஆனால் சில நேரங்களில் கனவில் நீங்கள் நிர்வாணமாக இருந்தாலும், ஆனால் நீங்கள் அதை ஒரு அவமானமாக உணராமல் இருக்கக்கூடும். உங்களுக்கு அப்படி ஒரு கனவு இருந்தால், அதற்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, நீங்கள் எதையும் மறைக்காமல் முழு சுதந்திரத்துடனும் நல்ல வெளிப்படையுடனும் உங்கள் வாழ்க்கையை கொண்டு செலுத்துகிறீர்கள். இதைத் தவிர இரண்டாவது அர்த்தம், நீங்கள் பொருத்தமற்ற வழிகளில் பிரபலமடைய முயற்சிப்பதாகவும் கனவு சித்திகரிக்கக்கூடும்.

 

நிர்வாணமாக ஆனால் தனியாக!

நீங்கள் ஒரு கனவில் நிர்வாணமாக இருக்கிறீர்கள் என்று ஒரு கனவை காண்கிறீர், ஆனால் இந்த கனவில் நீங்கள் ஒரு அறைக்குள் அல்லது ஏதோ மறைந்த சூழலுக்குள் நிர்வாணமாக இருக்கிறீர்கள். எனவே உங்கள் நிர்வாணத்தை வேறு யாரும் பார்க்க மாட்டார்கள். இது போன்ற ஒரு கனவு என்பது உங்கள் உண்மையான சுயரூபத்தை மற்றவர்களிடமிருந்து மறைக்கிறீர்கள் என்பதாகும். எளிமையாகச் சொன்னால், நீங்கள் உண்மையில் யார் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த நீங்கள் தயக்கம் / பயப்படும்போது இது போன்ற ஒரு கனவை நீங்கள் காணலாம்.

 

உங்கள் நிர்வாணத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை

நீங்கள் நெரிசலான, கூட்டமான இடத்தில் நிர்வாணமாக இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் நிர்வாணமாக இருப்பதை உங்களைச் சுற்றியுள்ள யாரும் பார்க்க முடியாது. அல்லது அதைப் பொருட்படுத்தாமல் அவர்களின் வேலையில் ஈடுபடுகிறார்கள். நீங்கள் தேவையில்லாமல் எதையாவதை பற்றி பயப்படும்போது உங்களுக்கு இந்த கனவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. யாருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாத ஒரு விடயத்தை பற்றி நீங்கள் கவலைப்படும் போதும் இது போன்ற கனவு ஏற்படும்.

 

நிர்வாணத்தை மறைக்க சிரமப்படுகின்றீர்கள்

ஒரு கனவில் நீங்கள் நிர்வாணமாக இருந்து, அதை மற்றவர்களிடமிருந்து மறைக்க முயற்சிப்பது போல கண்டீர்களா? நீங்கள் பெரியதாக அல்லது மற்றவர்களிடமிருந்து ஒரு ரகசியத்தை மறைக்கும்போது இது போன்ற ஒரு கனவு கண்டிருக்க வேண்டும். மறைத்து வைத்த ரகசியங்கள் வெளிப்பட்டால் வெட்கித்துப் போகக்கூடும், இழிவுபடுத்தப்படலாம் என்று ஒருவர் பயப்படும்போது இந்த வகையான கனவைக் காணலாம்.