உலகின் பலம் பொருந்திய வல்லரசான அமெரிக்காவின் பலம் பற்றி அநேகமானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வாரத்திற்கு ஒரு முறையாவது அமெரிக்காவைப் பற்றிய தகவல்களை கேள்விப்படுகிறோம். வழக்கமாக இலங்கையில் இருக்கும் ஒருவருக்கு அண்டைய நாட்டின் ஜனாதிபதி அல்லது பிரதமர் யார் என்று தெரியாவிட்டாலும் அமெரிக்காவின் ஜனாதிபதி யார் என்பது நன்றாகவே தெரியும். அதனால் இன்று நாம் அமெரிக்கா பற்றி அறிவதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பவரை பற்றி ஆராயப்போகிறோம். அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பவருக்கு கிடைக்கக்கூடிய பலங்கள் என்ன? அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு உண்மையில் என்ன சூப்பர் சக்திகள் உள்ளன என்பதை அறிந்து கொள்வோம்.
சீக்ரெட் ஒஃப் சூட்கேஸ்
ஹொலிவுட் திரைப்படங்களை பார்த்துள்ளவர்களுக்கு இது என்னவென்று ஓரளவு தெரியும். அமெரிக்க ஜனாதிபதி செல்லும் அனைத்து இடங்களுக்கும், அருகில் ஒருவர் எடுத்துக்கொண்டு செல்லும் லெதர் பையில் போட்ட சூட்கேஸ்தான் இது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்த சூட்கேஸை திறந்து அணுவாயுத தாக்குதலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதியால் செய்ய முடியும். பெரும்பாலான ஹொலிவுட் படங்களில் சித்தரிப்பதை போல யாராவது அமெரிக்க ஜனாதிபதியிடம் போர் அச்சுறுத்தல் விடுக்கும்போது, அவர் பிரீஃப்கேஸைத் திறந்து பதிலடி கொடுப்பார். ஆனால் உண்மையில் ஜனாதிபதி நினைத்தபடி அணு ஆயுத யுத்தத்தை நடத்த முடியாது. அதற்கு பாதுகாப்பு செயலாளர் அனுமதி வழங்க வேண்டும். ஆனால் அப்படி நினைத்தவாறு அமெரிக்க ஜனாதிபதி போரை அறிவிக்கவும் முடியாது. அவற்றிக்கான நெறிமுறைகள் பல உள்ளன.
பீஸ்ட் கார்!
ஹொலிவுட் திரைப்படங்களை பார்த்திருந்தால், அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கார், மரைன் ஒன், உத்தியோகபூர்வ ஹெலிகொப்டர் மற்றும் உத்தியோகபூர்வ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன் பற்றி உங்களுக்குத் தெரியும். மேலும் பல உத்தியோகபூர்வ வாகனங்கள் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ காரை எடுத்துக் கொண்டால், அதன் வசதிகள் மற்றும் திறன்கள் அதிசக்தி வாய்ந்தது. அடிப்படையில், இந்த பீஸ்ட் கார் மற்றொரு ஆர்மர் பிளேட் லிமோசைன் மட்டுமன்றி, இதை தொழில்நுட்பத்துடன் இணைக்க பல ஆண்டுகளாக தனி ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்கு சுமார் 15 மில்லியன் செலவாகியது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. எட்டு அங்குல குண்டு துளைக்காத கதவுகள், குண்டு துளைக்காத கண்ணாடி மற்றும் ஐந்து அங்குல இராணுவ தர கவச உடலுடன், இந்த பீஸ்ட் கார் உண்மையில் ஒரு பீரங்கி போல் தெரிகிறது. ஆனால் இந்த பீஸ்ட் கார் சுமார் 15 வினாடிகளில் மணிக்கு 60 மைல் வேகத்தில் மாத்திரமே செல்ல முடியும். இருப்பினும், இந்த கார் அதிக வேகத்தை அடைய முடியாவிட்டாலும் ஒரு சிறந்த டிரைவரால் இயக்கப்படுகிறது.
ஜனாதிபதிகளின் மர்ம புத்தகம்
அமெரிக்க அதிபர்களுக்கு தனித்துவமான மற்றொரு சக்தியாக, அமெரிக்க ஜனாதிபதிகள் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு பத்திரிகை உண்டு. ஆமாம், நீங்கள் NATIONAL TREASURE: BOOK OF SECRET என்கிற படத்தைப் பார்த்தால், ஜனாதிபதியிலிருந்து ஜனாதிபதிக்கு மாற்றப்படும் இரகசியங்களைக் கொண்ட ஒரு மர்மமான புத்தகம் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த திரைப்படத்தில் குறிப்பிடுவது போல, அமெரிக்காவில் இதுவரை இருந்த அனைத்து மர்மங்களும் இரகசியங்களும் இந்த புத்தகத்தில் உள்ளன. இதில் தீர்க்கப்படாத கென்னடி படுகொலை போன்ற மர்மங்களும், ஏரியா 51 போன்ற வேற்றுலகவாசிகளை பற்றிய மர்மங்களும் அடங்கும். ஆனால் அத்தகைய புத்தகம் இருப்பதாக யாரும் அதிகாரப்பூர்வமாக கூறவில்லை. அத்தகைய ஒரு புத்தகம் இருப்பதாக அரசாங்க புலனாய்வு சேவையே கூறுகிறது. அந்த புத்தகத்தில் அன்றைய மிக முக்கியமான விடயங்களும் உள்ளன. ஆனால் வேற்றுலகவாசிகள் அமெரிக்காவில் இறங்கினார்களா இல்லையா என்ற கதைகள் அதில் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
வெள்ளை மாளிகையின் நிலத்தடி சுரங்கங்கள் மற்றும் பதுங்கு குழிகள்
பல திரைப்படங்களில் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையின் கீழ் இருப்பதாக நிலத்தடி சுரங்கங்களைக் காட்டுகின்றன. ஜோன் எஃப் கென்னடிக்கு மர்லின் மன்றோவுடன் இரகசிய உறவு இருந்ததாகவும் அந்த இரகசிய சுரங்கங்களைப் பயன்படுத்தி மர்லின் மன்றோவை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கு மேலதிகமாக, ஹொலிவுட் படங்களில் வெள்ளை மாளிகையின் சுவர்களுக்கு இடையில் இரகசிய பாதைகளை கொண்டுள்ளன என்பதை காட்டுகின்றன. அந்தக் கதைகளில் உள்ள உண்மை பொய்கள் என்பது எவை என நமக்குத் தெரியாது. ஆனால் வெள்ளை மாளிகையின் கீழ் ஒரு அதிநவீன வெடிகுண்டு தடுப்பு பதுங்குகுழி உள்ளது என்பது அனைவரும் அறிந்த இரகசியமாகும். இந்த பதுங்குகுழி ஒரு அணு ஆயுத தாக்குதலைக்கூட தாங்கக்கூடியது. ஆனால் அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதும் எங்களுக்குத் தெரியாது.
நிர்வாக உத்தரவுகள்
அரசாங்கத்தில் பெரிய மாற்றங்களாக இருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி யாரையும் கேட்காமல் உத்தரவுகளை பிறப்பிப்பதை நாம் சில படங்களில் பார்த்துள்ளோம். உண்மையில், அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு அத்தகைய அதிகாரம் உள்ளது. அவை நிர்வாக உத்தரவுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை மத்திய அரசில் உள்ள சகல விடயங்களையும் பாதிக்கின்றன. இந்த நிறைவேற்று உத்தரவுகளை வழங்க காங்கிரசுக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டியதில்லை. உண்மையில், அமெரிக்காவின் ஜனாதிபதிகள் தங்கள் ஆட்சிக் காலத்தில் ஏராளமான நிர்வாக உத்தரவுகளை வழங்குகிறார்கள். உதாரணமாக, டொனால்ட் ட்ரம்ப் இதுபோன்ற 38 நிர்வாக உத்தரவுகளை 2017 ஆம் ஆண்டில் மட்டும் பிறப்பித்துள்ளார்.
சட்டரீதியான சக்தி
இப்போது ஜனாதிபதி காங்கிரஸில் ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தினார் என்று சொல்லலாம். அவர் அதில் கையெழுத்திட்டு சம்மதத்தை வெளிப்படுத்தலாம். பின்னர் பத்து நாட்களுக்குள் அது அரசியலமைப்புச் சட்டமாக மாறும். ஆனால் ஜனாதிபதி இந்த சட்டத்தை அல்லது ஆலோசனையை விரும்பவில்லை என்றால், அவர் செய்ய வேண்டியது அதை நிராகரிப்பதுதான். ஜனாதிபதிக்கு இந்த மாதிரியான வீட்டோ அதிகாரம் உள்ளது. அதைத்தான் ஜனாதிபதியின் வீட்டோ பவர் என்கின்றோம். ஆனால் “எனக்கு பிடிக்கவில்லை” என்று வெறுமனே சொல்ல முடியாது. காங்கிரஸிற்கு அதை நிராகரிப்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதற்கு பதிலாக சட்டத்தை மாற்றுவதற்கான அவரது ஆலோசனைகள் குறித்து ஜனாதிபதி ஒரு குறுகிய செய்தியை வழங்க வேண்டும்.
நியமனங்களை வழங்குவதற்கான அதிகாரம்
எந்தவொரு நாட்டின் ஜனாதிபதியும் அவர் விரும்பும் நபர்களுக்கு நியமனங்கள் வழங்க முடியும். இதன்படியே அவரது குழந்தைகள், பேரக்குழந்தைகள், சகோதர சகோதரிகள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் பலர் ஜனாதிபதியானவுடன் பெரிய பதவிகளுக்கு வருகிறார்கள். எப்படியோ அமெரிக்காவின் ஜனாதிபதிக்கும் இந்த அதிகாரம் உண்டு. அதாவது, பரந்த அளவிலான அரசு அலுவலகங்களில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம். இதில் பிற நாட்டு தூதர்கள், உச்ச நீதிமன்ற உறுப்பினர்கள், கூட்டாட்சி நீதிமன்றங்கள் மற்றும் அமைச்சரவை செயலாளர்கள் உள்ளனர். இருப்பினும், இந்த பதவிகளில் 2,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு செனட்டில் சான்றிதழ் பெற வேண்டும். இந்த பதவிகளுக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்பது குறித்து செனட்டிற்கு ஆலோசனை கூறலாம்.
தலைமை தளபதி அல்லது முதற்பெரும் படைத்தலைவர்
அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் இராணுவ சக்தி என்பது ஒரு விளையாட்டு பொருள் போன்றதல்ல. அணு ஆயுதங்களை பற்றி சற்று ஒதுக்கி வைப்போம். ஆனால் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டின் இராணுவ சக்தியை வைத்து எளிதில் மற்றொரு நாட்டை ஆக்கிரமித்து அடக்க முடியும். எனவே அத்தகைய இராணுவத்தின் தளபதிக்கு என்ன வகையான அதிகாரம் உள்ளது என்று சொல்லாமல் புரிந்துகொள்ள முடியும். வழக்கமாக அமெரிக்காவின் ஜனாதிபதி அவர் விரும்பியபடி இராணுவத்தை வழிநடத்துவதில்லை. அதற்கென்று ஆலோசிக்கவும் விவாதிக்கவும் ஏராளமான மக்கள் உள்ளனர். ஆனால் அவசரகால தேவைப்பாட்டால், காங்கிரஸின் ஒப்புதலுக்காகக் காத்திருக்காமல் ஜனாதிபதி அமெரிக்க இராணுவப்படையை யுத்த நிலைக்கு அனுப்ப முடியும்.