உலகின் மிகப்பெரிய துரித உணவக சங்கிலி

 

துரித உணவு அல்லது FAST FOOD என்பது இப்போதெல்லாம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சொல். வேகமான வாழ்க்கை முறை மற்றும் வீட்டில் உணவு தயாரிக்க நேரம் இல்லாததால் மக்கள் பல்வேறு காரணங்களுக்காக இந்த துரித உணவு விடுதிகளுக்குச் செல்வது பழக்கமாகிவிட்டது. பொதுவாகவே வெளியில் சாப்பிடுபவர்களும் உள்ளனர், அதேபோல அவ்வப்போது ஒரு மாற்றத்திற்காக வெளியில் செல்வோரும் உள்ளனர். துரித உணவுகளை விநியோகிக்கும் உணவகங்கள், இப்போது காளான் போல விரைவாக வளர்ந்து வரும் வணிகமாகும். ஆனால் ஆரம்பிப்பதை போலல்லாமல் தொடர்ந்து வாடிக்கையாளர்களை மகிழ்விக்கக்கூடிய அளவிற்கு உணவுகள் இருக்க வேண்டும். ஏனென்றால் சாப்பாடு என்பது பொதுவாக அனைவரையும் திருப்திப்படுத்தும் மிகவும் கடினமான விடயமாகும். எனவே வாடிக்கையாளர்கள் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து வர வேண்டுமென்றால் சிறந்த ஆரம்பத்தை வழங்க வேண்டும். அவ்வாறான துரித உணவுகளை வழங்கி பிரபலமாக உள்ள சில உணவகங்கள் தொடர்பாக இன்று பார்ப்போம்.

 

 

Subway

SYBWAY ஒரு அமெரிக்க உணவக சங்கிலி ஆகும். இங்கு பிரதானமாக சப்மெரீன் சாண்ட்விச்கள் மற்றும் சாலட்களை விற்பனை செய்கின்றனர். இந்த SUBWAY ரெஸ்டூரண்ட் உலகில் வேகமாக வளர்ந்து வரும் உணவக சங்கிலிகளில் ஒன்றாகும். அக்டோபர் 2019 நிலைவரப்படி, இந்த SUBWAY ரெஸ்டூரண்ட் நெட்வொர்க்கின் கீழ் 100 நாடுகளில் 41,512  உணவகங்கள் உள்ளன. 1965 ஆம் ஆண்டில், அதன் நிறுவனர் ஃப்ரெட் டெலூகாவால் தனது நண்பரிடமிருந்து கடனாக பெற்ற 1,000 டொலர் முதலீட்டில் இந்த வணிகம் தொடங்கப்பட்டது. இந்த வணிகத்திற்கு முதலில் பீட்ஸின் சூப்பர் சப்மரீன் / PETE’S SUPER SUBMARINE என்று பெயரிடப்பட்டது. 1968 ஆம் ஆண்டில் தான் இதன் பெயர் SUBWAY என்று மாற்றப்பட்டது. 2015 ஆம் ஆண்டில், SUBWAY உணவக சங்கிலி உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் வணிகங்களில் முதலிடத்தையும், உலகளவில் சிறந்த உரிமையாளர்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. இந்த SUBWAY நெட்வொர்க் 2010 முதல் உலகின் மிகப்பெரிய துரித உணவு உணவக சங்கிலியாக இருந்து வருகிறது. இந்த உணவாக சங்கிலியில் மொத்தம் 33,749 உணவகங்கள் இருந்தன. இது 2010 இல் மெக்டொனால்டின் இரண்டாவது பெரிய உணவக சங்கிலியை விட 1012 உணவகங்கள் அதிகம்.

 

McDonald’s

இன்று இலங்கையில் யாருக்கும் McDonald’s  பற்றி தெரியாது என்று கூற முடியாது. அந்த அளவிற்கு இலங்கையில் மிகவும் பிரபலமான ஒரு உணவாக நிறுவனமாக மெக்டொனால்ட்ஸ் கருதப்படுகிறது. இலங்கையில் உள்ள McDonald’s உணவக சங்கிலி அபான்ஸ் குழுமத்திற்கு சொந்தமானது. முதலாவது McDonald’s கிளை இலங்கையில் 1998 இல் திறக்கப்பட்டது. உலக வரலாற்றைப் பார்த்தால் இந்த உணவகச் சங்கிலி 1940 இல் தொடங்கப்பட்ட ஒரு அமெரிக்க உணவக சங்கிலியாகும். வருவாயைப் பொறுத்தவரை McDonald’s தான் உலகின் முதலாவது தர உணவகச் சங்கிலியாகும். 2018 க்குள், 100 நாடுகளில் 37,855 உணவகங்களில் தினமும் 69 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு McDonald’s சேவை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் நிறுவன உரிமையாளர்கள் சகோதரர்கள் ரிச்சர்ட் மற்றும் மாரிஸ் மெக்டொனால்ட் ஆகியோர் ஆவர். ஆரம்பத்திலிருந்தே உணவகம் அவர்களின் குடும்பப்பெயருடன் தொடங்குகிறது.

 

Starbucks

Starbucks எனும் அமெரிக்க உணவகம் எங்களுக்கு மிகவும் பழக்கமான பெயர் அல்ல. இதுவும் ஒரு அமெரிக்க உணவக சங்கிலிதான். இது அடிப்படையில் ஒரு கோஃபி ஹவுஸ் அல்லது கோஃபி ஷொப் ஆகும். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த உணவக சங்கிலியில் உலகளவில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் 30,000 க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. Starbucks சூடான மற்றும் குளிரான பானங்கள் இரண்டையும் விற்கின்றது. சிப்ஸ், கிரேக்கர்ஸ் போன்ற சிற்றுண்டிகளையும் விற்கிறார்கள். இந்த உணவக சங்கிலி முதன்முதலில் 1971 இல் ஜெர்ரி பால்ட்வின், ஜீவ் சீகல் மற்றும் கோர்டன் போக்கர் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

 

KFC

 

KFC எங்களுக்கு மிகவும் பரீட்சயமான இடம். KFC ஒரு அமெரிக்க துரித உணவக சங்கிலி. KFC உணவக சங்கிலியின் நிறுவனர் கர்னல் ஹார்லேண்ட் சாண்டர்ஸ் ஆவார். முதல் KFC உணவகம் 1929 இல் கென்டக்கியில் ஒரு சேவை நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் KFC எனும் பெயரில் ஆரம்பிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக வேறொரு பெயரில் ஒரு சிறிய உணவகமாக ஆரம்பிக்கப்பட்டது. காலப்போக்கில், உணவகத்தின் சிக்கன் ரெசிபி மிகவும் பிரபலமடைந்தது. உணவக சங்கிலி படிப்படியாக இன்று நாம் இருக்கும் இடத்திற்கு முன்னேறியுள்ளது. KFC வலையமைப்பு தற்போது Yum! Brands எனப்படும் நிறுவனத்திற்கு சொந்தமானது. KFC தற்போது 135 நாடுகளில் 22,600 உணவகங்களைக் கொண்ட ஒரு பெரிய துரித உணவக சங்கிலியாகும்.  KFC பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பினால் இதனை அழுத்தி எமது முன்னைய கட்டுரையை படியுங்கள்.

 

Burger King 

BURGER KING என்பது இலங்கைக்கு ஒப்பீட்டளவில் புதியது. ஆனால் புதிய உணவு நிறுவனம் என்றும் கூற முடியாத அளவிற்கு பிரசித்திவாய்ந்த துரித உணவகம். இந்த உணவ சங்கிலி இலங்கைக்கு 2013 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள BURGER KING வலையமைப்பு SOFTLOGIC நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. எல்லாவற்றையும் போலவே, இதுவும் ஒரு அமெரிக்க உணவக சங்கிலி. இந்த உணவக சங்கிலி 1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டின் இறுதியில், இந்த உணவாக நிறுவனத்தின் கீழ் 100 நாடுகளில் 17,796 உணவகங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிறுவனத்தின் முதல் உரிமையாளர் கீத் ஜே. கிராமர் மற்றும் அவரது மனைவியின் மாமாவான மத்தேயு பர்ன்ஸ்.

 

Pizza Hut

PIZZA HUT நிறுவனமும் KFC வலையமைப்பை நிர்வகிக்கும் YUM! BRANDS நிறுவனத்திற்குச் சொந்தமானது. PIZZA HUT ஒரு அமெரிக்க உணவக நிறுவனமாகும். PIZZA HUT நிறுவனம் தான் உலகின் தற்போதைய மிகப்பெரிய PIZZA உணவகமாகும். இலங்கையில், முதல் PIZZZA HUT உணவகம் 1993 இல் திறக்கப்பட்டது. அந்த நேரத்தில் PIZZA இலங்கையில் யாருக்கும் அவ்வளவாக தெரிந்த உணவாக இருக்கவில்லை. எப்படியிருந்தாலும், இலங்கையில் 1993 இல் திறக்கப்பட்ட முதல் PIZZA HUT உணவகம் யூனியன் பிளேஸ் கிளை ஆகும். மேலும், இந்த PIZZA HUT நிறுவனம்தான் இலங்கையில் ஒரு வணிகத்தை ஆரம்பித்த முதல் சர்வதேச உணவக சங்கிலியாக கருதப்படுகிறது. வரலாற்று ரீதியாக இந்த உணவக நிறுவனம் முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் சகோதரர்கள் டான் மற்றும் ஃபிராங்க் கார்னி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.

 

Domino’s

Domino’s PIZZA வும் எங்களுக்கு மிகவும் தெரிந்த பெயர்தான். பீட்ஸாவை விற்கும் இந்த உணவக நிறுவனம் இலங்கையில் முதல் உணவகத்தை 2011 இல் தெஹிவளை பிரதேசத்தில் திறந்தது. Domino’s PIZZA என்பது 1961 இல் நிறுவப்பட்ட அமெரிக்க பன்னாட்டு உணவக வலையமைப்பாகும். இந்த நிறுவனம் முக்கியமாக பீட்ஸாவையும் விற்பனை செய்கிறது. பீட்ஸாவை விற்கும் இந்த உணவக சங்கிலி, பீட்ஸா ஹட்டுக்கு அடுத்தபடியாக இப்போது உலகெங்கிலும் ஏராளமான நாடுகளில் உணவகங்களைத் திறந்துள்ளது. இந்தியாவில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட டோமினோஸ் PIZZA உணவகங்கள் உள்ளன. அமெரிக்காவுக்குப் பிறகு டோமினோஸ் PIZZA உணவகங்களில் இந்தியா எண்ணிக்கையில் அடுத்த இடத்தில் உள்ளது.