வித்தியாசமான முறைகளில் குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமா?

 

இலங்கையில் பழங்காலத்தில் இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பணி மிகவும் முறையான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாம் கேள்வியுற்ற வகையில் பழங்காலங்களில், நன்கு அனுபவம் வாய்ந்த ஒரு வயதான மருத்துவச்சி அல்லது கிராம மருத்துவராக இருக்கும் பெண்ணின் உதவியுடன் தனி அறையில் தான் பிரசவம் நடந்தது. இந்த முறையில் உள்ள நன்மைகள் மற்றும் வீட்டைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அறிவியல் முறைகள் குறித்து சமீபத்தில் நிறைய பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அந்த நாட்களில் ஒரே ஒரு முறையில்தான் குழந்தைகள் பெற்றெடுக்கப்பட்டன. அதுதான் சாதாரண பிரசவ முறை. அந்த காலங்களில் யாரும் அதைத் தவிர்த்து எதையும் கேள்விப்பட்டும் இருக்க மாட்டார்கள். ஆனால் இப்போதெல்லாம் எளிதாகவும் பாதுகாப்பாகவும் குழந்தையை பிரசவிக்க பல வழிகள் உள்ளன. எனவே அதில் சில அடிப்படை முறைகளைப் பற்றி பேசப் போகிறோம்.

 

இயற்கை பிரசவ முறை (Natural Delivery)

இந்த இயற்கையான பிரசவ முறை நாம் முன்னர் குறிப்பிட்ட பிரசவத்தின் சாதாரண முறையை போலவாகும். இதன் பொருள் எந்தவொரு வெளிப்புற சிகிச்சையோ உதவியோ இல்லாமல் எந்த நேரத்திலும் குழந்தை தாயின் யோனி வழியாக இயற்கையாகவே பிறக்கும். முன்னைய காலங்களில் பிரசவம் என்றாலே இதுதான் ஒரே முறையாகும். ஆனால் இப்போது இந்த முறையைத் தேர்ந்தெடுக்கும் தாய்மார்கள் மற்றும் மருத்துவர்கள் மிகக் குறைவு. வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த இயற்கையான பிரசவத்தை தெரிவு செய்யலாம். அதற்கான வசதிகளைக் கொண்ட தனி பிறப்பு மையங்கள் கூட உள்ளன. ஆனால் இலங்கையில் இந்த இயற்கையான பிறப்புகள் கணிசமான அளவு குறைந்து வருகின்றது.

 

ASSISTED DELIVERY  

இதைத்தான் இலங்கையில் NORMAL டெலிவரி அல்லது சாதாரண பிரசவம் என்று அழைக்கிறோம். சரியான நேரத்தில் வெளிப்புற மருந்துகள் செயற்கை பிரசவ வலியை ஏற்படுத்தும். குழந்தையின் இதயத் துடிப்பு பின்னர் பிரசவத்தின் ஆரம்ப கட்டங்களிலிருந்து அடிவயிற்றில் இணைக்கப்பட்ட ஒரு பட்டியின் உதவியுடன் பரிசோதிக்கப்படுகிறது. அடுத்த கட்டமாக அம்னியோடமி (Amniotomy) அல்லது நீர் பை (water bag)யை உடைக்க வேண்டும். பிரசவத்தை விரைவுபடுத்துவதற்காக மருத்துவர் இந்த நீர் பையை வெளியில் உடைக்க வேண்டும். அடுத்த மற்றும் இறுதி கட்டமாக ஒரு எபிசியோடமி (Episiotomy) எனப்படும் சிறிய கீறல் செய்ய வேண்டும். குழந்தை வெளி வரும் வழியை சற்றே விரிவுபடுத்தவும், யோனியின் உட்புறத்தில் உரசல் மூலம் தேவையற்ற வகையில் ஏற்படும் கிழிசல்களை தடுக்கவும் இந்த கீறல் செய்யப்படுகிறது. இந்த கீறல் யோனி மற்றும் ஆசனவாய் இடையே செய்யப்படுகிறது. அசிஸ்டட் டெலிவரி என்பது இந்த வகையில் பல்வேறு முறைகள் மூலம் பிரசவத்தை விரைவாகவும் எளிதாகவும் செய்யும் ஒரு முறையாகும்.

 

WATER BIRTH

நீர் பிறப்பு / Water Birth என்பது வெளிநாட்டில் மிகவும் பிரபலமான முறையாகும். இந்த விஷயத்தில், குழந்தை எந்த வெளிப்புற உதவியும் இல்லாமல் இயற்கையான வழியில் நீருக்குள் பிறக்கிறது. ஆனால் தாய் தன் குழந்தைப்பேறு நேரத்தில் பெரும்பகுதியை இந்த தண்ணீர் தடாகத்தில் கழிக்க வேண்டும். தண்ணீருக்குள் பிரசவிக்கும் போது குழந்தைப்பேற்றின் வலியையும் தளர்வையும் குறைக்கிறது என்பதனால், பல பெண்கள் இந்த முறையைத் தெரிவுசெய்கிறார்கள். இலங்கையில், பிரசவம் பொதுவாக இந்த முறையில் நடப்பதில்லை. இலங்கையில் நடந்த முதல் மற்றும் ஒரே நீர் பிறப்பு 2020 ஏப்ரல் மாதம் நைன்வெல்ஸ் மருத்துவமனையில் நடந்துள்ளது.

 

ஃபோர்செப்ஸ் டெலிவரி / FORCEPS DELIVERY

ஃபோர்செப்ஸ் என்பது ஒரு குறடின் மூலம் பிரசவிக்கும் முறையாகும். குழந்தையின் தலை யோனி வழியாக வெளியே வருவது சிரமமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், யோனி வழியாக இரண்டு பெரிய ஸ்பூன் போன்ற குறடுகள் செருகப்பட்டு குழந்தையின் தலை யோனியிலிருந்து வெளியே இழுக்கப்படுகிறது.

 

வெற்றிடகுழாய் டெலிவரி / VACCUME DELIVERY

வெற்றிடகுழாய் பிரசவம் / VACCUME DELIVERY என்பது குழந்தையை வெளிப்புற உதவியுடன் வெளியே எடுக்கும் செயல். குழந்தையின் தலையை பிடித்து யோனி வழியாக உறிஞ்சு இழுக்கும் கப் போன்ற எந்திரத்தை செருகுவதும் குழந்தையை வெளியே இழுப்பதும் இதில் அடங்கும். இந்த வெற்றிடகுழாய் உறிஞ்சுதல் மூலம் குழந்தை பிறந்த பிறகு தலையில் ஒரு சிறிய வடு காயத்தை ஏற்படுத்தும். ஆனால் பிறந்த முதல் 48 மணி நேரத்திற்குள் அந்த வடு மறைந்துவிடும்.

 

PLANNED  C  SECTION

சி செக்ஷன், சிசேரியன் அல்லது சிசர் என்று சொல்லும்போது நாம் அறிந்த ஒன்றே. இது இன்றளவில் நடைபெறும் பல பிரசவங்களில் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான முறைகளில் ஒன்றாகும். தனியார் துறை மருத்துவமனைகளில் பிரசவத்தைப் பொறுத்தவரையில், ஒரு சிசேரியன் முறை முன்கூட்டியே தாயின் விருப்பப்படி, அதாவது எந்த காரணத்திற்காகவும் அவர் சாதாரண பிரசவத்தை விரும்பவில்லை என்றால் மட்டுமே இந்த முறை திட்டமிட்டு நடைபெறும். சிலர் தாயின் அல்லது தந்தையின் பிறந்த நாள், சிறப்பு நாட்களில் குழந்தை பிறக்க சரியான நேரம் அல்லது நல்ல சந்தர்ப்பங்களில் சிசேரியன் செய்ய தெரிவு செய்கிறார்கள். இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் தாயின் விருப்பப்படி சிசேரியன் செய்வது எளிதல்ல. இல்லையெனில், சிசேரியன் அவசியம் என்றும் சாதாரண பிரசவம் சாத்தியமில்லை என்றும் மருத்துவர் முடிவு செய்யும்போது இதை செய்கின்றனர்.

 

அவசர சி பிரிவு / EMERGENCY C SECTION

இது சாதாரண சிசேரியன் போன்றது. ஆனால் அது முன்பே திட்டமிட்டு செய்யப்படும் C  செக்ஷன் அல்ல. இந்த சிசேரியன் என்பது ஒரு சாதாரண பிரசவத்திற்கு தயாரான பிறகு பிரசவத்தின்போது ஏற்படக்கூடிய சில பிரச்சினைகள் காரணமாக மருத்துவர்கள் சேர்ந்து எடுக்கும் திடீர் முடிவாகும். இந்த முறையானது தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பிற்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது.