கொரோனா வைரஸ் ஏற்படுத்தக்கூடிய தாக்கம்

 

உலகில் எவ்வளவு பெரிய வீர சூரனாக இருந்தாலும் நோய் ஏற்பட்டவுடன் சோர்ந்து விடுகின்றனர். பணம், அந்தஸ்து மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை தொற்று நோய்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதுபோலவே கொவிட-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளைக்கூட உதவியற்றதாக ஆக்கியுள்ளது. கொரோனா வைரஸால் இலட்சக்கணக்கான மக்கள் இறந்தும், இன்னும் இதன் தாகம் தீரவில்லை என்றே கூற வேண்டும். பெரும்பாலான தொற்றுநோயியல் வல்லுநர்கள், எதிர்காலத்தை நாம் எவ்வளவு விரும்பாவிட்டாலும், இந்த வைரஸுடன் வாழ வேண்டிய நேரம் இது என்று கூறுகிறார்கள். எனவே கொரோனாவின் நீண்டகால விளைவுகள் குறித்த சில உண்மைகளைப் பார்ப்போம்.

 

கொவிட்-19 என்பது எந்தளவிற்கு கடினமானது?

கொவிட்-19 தொற்று நோய் ஏற்படும் பெரும்பான்மையான மக்களுக்கு சிரமம் இருப்பதில்லை என்று ஒரு பொதுவான நிலை தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் 10% முதல் 15% வரை மாத்திரமே சிரமப்படுகிறார்கள். 5% மக்களுக்கு கடினமான மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும். கொவிட்-19 இல் இருந்து குணமடைய 2 முதல் 6 வாரங்கள் ஆகும். ஒரு சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொற்றுக்குள்ளாகி இரண்டு வாரங்களில் குணமடையாமல் பல வாரங்களுக்கு நீடித்து இருப்பதோடு பல்வேறு நோய் அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர். கொவிட்-19 இனால் ஏற்படும் துன்பங்களும் மரணங்களும் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. இந்தியாவில் மில்லியன் கணக்கான நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஆனால் அவர்களின் இறப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

 

தொற்றுநோய் உருவாகுவதற்கான அறிகுறிகள்

  • சோர்வு – சளி ஜலதோஷத்துடன் இயல்பை விட சோர்வு அதிகமாக இருக்கும். கொவிட் தொற்று நம் உடலில் உருவாகும் போது இது மாதிரியான கடுமையான சோர்வு, மற்றும் உடல் வலிகள் ஏற்படுகின்றன.
  • இருமல் மற்றும் மூச்சுத் திணறல் – மூச்சுத் திணறல் கொவிட்டின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். இது மூச்சுத் திணறல் மற்றும் இருமலையும் ஏற்படுத்தும்.
  • தலைவலி மற்றும் உடல் வலிகள் – தலைவலி ஒரு சாதாரண காய்ச்சலைப் போலவே வந்து போகலாம். மேலும், உடல் வலிகள் மற்றும் தலைவலிகள் கொவிட் அறிகுறிகளாக வருகின்றன.
  • மார்பு வலி – கொவிட் தொற்றானது நுரையீரல் தொற்றுநோயை ஏற்படுத்தும். கொவிட் தொற்றும்போது மார்பு வலி மற்றும் அசௌகரியத்திற்கு வழிவகுக்கும்.
  • நுகரும் தன்மை – நரம்பு மண்டலத்தின் சில கோளாறுகள் காரணமாக கொவிட் தொற்றுக்குப் பிறகு வாசனை மற்றும் சுவை உணர்வும் குறையக்கூடும்.

 

முழுமையான குணமாகியதை நீங்கள் எவ்வாறு காணலாம்?

இது ஒரு சிக்கலான கேள்விதான். கொவிட்-19 நீண்டகாலமாக தொற்றுநோயால் பாதிக்கப்பட்டாலும் பலமுறை பாதிக்கப்பட்டுள்ளவர்களில் அரிதாகவே காணப்படுகின்றது. கொவிட்-19 என்பது நம்மைப் போன்ற நாடுகளுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கும் ஒரு புதிய நோயாகும். எனவே, இது குறித்து மருத்துவ ஆராய்ச்சி அதிகமாக மேற்கொள்ளப்படவில்லை. கொவிட்-19 இலிருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்த மருத்துவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் ஏற்பட்ட 18-34 வயதுடையவர்களில் சுமார் 20% பேருக்கு நாட்பட்ட அசௌகரியம் மற்றும் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உயர் இரத்த அழுத்தம், மன நோய் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் கொவிட்-19 ஏற்பட்டவுடன் எச்சரிக்கையாக இருப்பது புத்திசாலித்தனமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

கொவிட் 19 இற்கு பின் உள்ள விளைவுகள் குறித்த ஆராய்ச்சி

இந்த கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரசுக்கு முன்னதாக உலகிற்கு இரண்டு கொரோனா வைரஸ்கள் வந்துள்ளன. ஒன்று SARS, மற்றொன்று MERS. இரண்டுமே உலகம் முழுவதும் அவ்வளவு வலுவாக பரவவில்லை. MERS ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கு மட்டுமே பரவியது. அதை தவிர, SARS வைரஸின் இறப்பு விகிதம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருந்தது. SARS நோயாளிகள் பற்றிய ஆராய்ச்சியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, SARS தொற்று 40% மக்களில் தாக்கம் செலுத்தியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கொவிட் 19 உருவாகி பல மாதங்கள் கடந்துவிட்ட போதிலும், கொவிட்டின் விளைவுகள் குறித்து அதிக ஆராய்ச்சி செய்யப்படவில்லை.

 

கொவிட் 19 இனால் நீண்டகாலம் பிரச்சினைக்குள்ளாகும் உறுப்புக்கள்

  • இதயம் – கொவிட் 19 இதய நோயாளிகளுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய் இதய தசையில் தீங்கு விளைவிக்கும். இது பிற்கால வாழ்க்கையில் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • நுரையீரல் – கொரோனா வைரஸால் நேரடியாக பாதிக்கப்படும் நுரையீரலில் உள்ள குறைபாட்டால் நீண்டகால மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
  • மூளை மற்றும் நரம்பு மண்டலம் – முன்பு குறிப்பிட்டபடி, கொவிட்-19 கொண்ட சில நோயாளிகளுக்கு வாசனை, சுவை மற்றும் உணர்வின்மை ஆகியவை நீண்ட கால அடிப்படையில் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், டிமென்ஷியா கொண்ட சில நோயாளிகளுக்கு நினைவாற்றல் இழப்பு அல்லது மூளை பாதிப்பு ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தசை உறுப்புக்கள் – கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த இளைஞர்களிடையே உடல் அதன் முன்னைய நிலைக்குத் திரும்ப மிகவும் தாமதமாகும் என்று கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மிகவும் சுறுசுறுப்பாக இருந்த உடல் இப்போது சோர்வு மற்றும் சோம்பலால் பாதிக்கப்படுகிறது. இந்த நிலைக்கு பெரும்பாலும் தசை பலவீனம் மற்றும் உறுப்பு சேதம் காரணமாக ஏற்படலாம்.

 

 நோயாளிகளுக்கு ஏற்படும் விளைவுகள்

சில கொரோனா நோயாளிகளுக்கு லேசான கால்-கை வலி இருக்கலாம். ஆனால் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, உடல் பலவீனம் ஏற்படும் பிரச்சினைகளும் உள்ளன. வளர்ந்த நாடுகளில் உள்ள அனைத்து கொரோனா நோயாளிகளும் மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. பல இளைஞர்கள் வீட்டிற்கு வந்து கொரோனாவை நிம்மதியாக எதிர்கொண்டனர். இருப்பினும், அந்த நாடுகளில் உள்ள மருத்துவ அதிகாரிகள் அவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். நம் நாட்டில், கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட அனைவருமே மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். எனவே பின்விளைவுகள் பற்றி மேலும் கரிசனை காணப்படலாம்.

 

விலகி இருப்பதன் முக்கியத்துவம்

கொரோனா வைரஸ் ஒரு கொடிய வைரஸ் என்றாலும், இது இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே இறப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு. ஆனால் கொவிட் நோயின் விளைவுகளிலிருந்து இளைஞர்களால் கூட தப்பிக்க முடியாது. அவர்கள் இறக்கும் அளவிற்கு பெரிதாக பாதிக்கப்படாவிட்டாலும், பல்வேறு அறிகுறிகளையும் கோளாறுகளையும் காட்டலாம். கொவிட் 19 இலிருந்து விலகிச் செல்வது எளிதான காரியமல்ல. அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பராமரிப்பது ஆகியவை கொரோனா நம் உடலுக்கு பாதிக்காத அளவிற்கு ஓரளவு பாதுகாக்கின்றது. இருப்பினும், இதுபோன்ற நல்ல பழக்கங்களை கடைப்பிடிப்பது இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை பெரிதும் குறைக்கும். நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொண்டால், நம் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினரையும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியும்.