பஜ்ஜி என்பது ஒரு எளிய சிற்றுண்டியாகும். இதனை எந்த நேரத்திலும் விரைவாக தயாரிக்கலாம். ஒன்று அல்லது இரண்டு வகையான பஜ்ஜியை கடைகளில் சாப்பிட்டு இருப்பீர்கள். அதனை விட விதவிதமான பஜ்ஜி வகைகள் உண்டு. அவற்றில் சிலவற்றை இன்று லைபீ தமிழ் கொண்டுவந்துள்ளது. இதை செய்து பார்த்துவிட்டு எமது கமெண்டில் உங்களது உணவுகளின் படங்களை பதிவிட மறக்க வேண்டாம்.
வாழைப்பழ பஜ்ஜி
தேவையான பொருட்கள்
- வாழைப்பழங்கள் – 3-4
- கோதுமை மா – 3/4 கப்
- பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி
- ஐசிங் சர்க்கரை – சிறிதளவு
- பட்டர் – சிறிதளவு
- எண்ணெய்
- கோதுமை மா மற்றும் பேக்கிங் பவுடரை ஒன்றாக கலக்கவும். அதில் பட்டர், ஐசிங் சர்க்கரை சேர்த்து பிரட்டிக் கொள்ளவும். அத்தோடு பிசைந்த வாழைப்பழம் மற்றும் சிறிது நீர் சேர்த்து ஒரு கலவையை தயாரித்துக்கொள்ளவும்.
- இப்போது இதை 20 நிமிடங்கள் வைத்துடுவிட்டு, பிறகு சிறிய உருண்டைகளாக அல்லது எந்த மாதிரியான பஜ்ஜி வேண்டுமோ அதுபோல செய்து எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடவும்.
உருளைக்கிழங்கு பஜ்ஜி
தேவையான பொருட்கள்
- அரைத்த உருளைக்கிழங்கு – 2
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- முட்டை – 1
- துருவிய மொஸரெல்லா சீஸ் – 2 மேசைக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் – 1
- நறுக்கிய பூண்டு – 3 பல்
- நறுக்கிய பார்ஸ்லி – சிறிதளவு
- கோதுமை மா – 4 மேசைக்கரண்டி
- அரைத்த உருளைக்கிழங்கை ஒரு துணியில் போட்டு பிழிந்து அதில் உள்ள நீரை அகற்றவும். பின்னர் அதில் அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி கலவையை சிறிது கரண்டியால் எடுத்து அதில் போட்டு பொரித்து சாப்பிடவும்.
சிக்கன் பஜ்ஜி
தேவையான பொருட்கள்
- எலும்பில்லாத கோழி இறைச்சி – 200 கிராம்
- முட்டை – 2
- கோதுமை மா – 2 மேசைக்கரண்டி
- துருவிய மொஸரெல்லா சீஸ் – 2 மேசைக்கரண்டி
- ஸ்வீட்கோர்ன் – 1/4 கப்
- மயோனீஸ் – 1 மேசைக்கரண்டி
- நறுக்கிய பார்ஸ்லி – சிறிதளவு
- உப்பு மற்றும் மிளகுத்தூள்
- எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கலவையை ஒரு கரண்டியால் எடுத்து போட்டு, பொன்னிறமாகும் வரை இருபுறமும் சுமார் 4 நிமிடங்கள் வறுக்கவும்.
ஆப்பிள் பஜ்ஜி
தேவையான பொருட்கள்
- கோதுமை மா – 1 1/2 கப்
- சர்க்கரை – 1 மேசைக்கரண்டி
- பேக்கிங் பவுடர் – 2 தேக்கரண்டி
- உப்பு – சிறிதளவு
- இலவங்கப்பட்டை தூள் – சிறிதளவு
- உரித்த ஆப்பிள்கள் – 2
- முட்டையின் மஞ்சள் கரு – 2
- கரைத்த பட்டர் – 2 மேசைக்கரண்டி
- பால் – 150 மில்லி
- வெணிலா அசன்ஸ்
கோட்டிங்கிற்கு
- சர்க்கரை தூள் – 100 கிராம்
- இலவங்கப்பட்டை தூள் – சிறிதளவு
- கோதுமை மாவுக்கு பேக்கிங் பவுடர், சர்க்கரை, உப்பு மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்கு கலக்கவும். நறுக்கிய ஆப்பிள்கள், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் பட்டரை அதில் சேர்க்கவும். ஒரு கரண்டியால் அதை கிளறிக்கொண்டே பால் ஊற்றி திக்கான கலவை ஒன்றை தயாரிக்கவும். இதில் சிறிது வெணிலா சேர்க்கவும்.
- சுமார் 20 நிமிடங்கள் வைத்துவிட்டு, அதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பஜ்ஜியை பொரித்து முடித்தபின் அதற்கு மேலே கோட்டிங்கிற்கு ஐசிங் சர்க்கரை மற்றும் இலவங்கப்பட்டை தூளில் பிரட்டவும்.
சைவ பஜ்ஜி
தேவையான பொருட்கள்
- அரைத்த சீமை சுரைக்காய் / கோர்கெட்கப் – 1
- அரைத்த கரட் – 1 கப்
- நறுக்கப்பட்ட குடைமிளகாய் – 1 மேசைக்கரண்டி
- அரைத்த கோவா – 1 கப்
- நறுக்கிய வெங்காய இலைகள் – சிறிதளவு
- நறுக்கிய பூண்டு – சிறிதளவு
- முட்டை – 2
- கோதுமை மா – 1/2 கப்
- சுவைக்கேற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள்
- மேலே உள்ள அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு கலக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, இதில் சிறிது போட்டு தட்டையாகவும் இருபுறமும் வறுக்கவும்.
கோலிஃபிளவர் பஜ்ஜி
தேவையான பொருட்கள்
- அரைத்த கோலிஃபிளவர் – 1 கப்
- முட்டை – 2
- கோதுமை மா – 2 மேசைக்கரண்டி
- பேக்கிங் சோடா – 1/2 தேக்கரண்டி
- உப்பு மற்றும் மிளகுத்தூள்
- இதையெல்லாம் கலந்து ஒரு மாக்கலவையை தயாரிக்கவும். இப்போது கைகளால் சிறிய உருண்டைகளை பிடித்து எடுத்து எண்ணெயில் வறுக்கவும்.
காளான் பஜ்ஜி
தேவையான பொருட்கள்
- காளான் – 1 பைக்கற்று
- எண்ணெய் – சிறிதளவு
கலவைக்கு
- கோதுமை மா – 1/2 கப்
- முட்டை – 1
- நறுக்கிய பச்சைமிளகாய் – 2
- நறுக்கிய வெங்காய இலைகள் – சிறிதளவு
- உப்பு மற்றும் மிளகுத்தூள்
- கரம் மசாலா – சிறிதளவு
- பால் – 1/2 கப்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
- அடுப்பில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய காளான்களை சுமார் 4 நிமிடங்கள் வறுக்கவும். சுவைக்கு ஏற்ப உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும். காளான்களை நன்கு வறுத்த பின் அடுப்பை அணைக்கவும்.
- கலவைக்கு தேவையான அனைத்தையும் கலந்து திக்கான கலவையை செய்யுங்கள். அடுத்து, காளான்களைச் சேர்த்து கிளறவும்.
- ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெயை சூடாக்கி, கலவையை ஒரு கரண்டியால் போட்டு இருபுறமும் வறுக்கவும்.