பொது கழிப்பறைகள் மற்றும் சிறுநீர் தொட்டிகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்

 

கழிவறை என்பது பொதுவான தேவை மாத்திரமன்றி அத்தியாவசிய தேவையுமாகும். இந்த கழிப்பறை மற்றும் சிறுநீர் தொட்டிப்பழக்கம் உலகம் முழுவதும் மாறிக்கொண்டே இருக்கிறது. வடிவங்களும் இடங்களும் மாறினாலும் அங்கு தமது அத்தியாவசிய கடமையை கழிக்க மக்கள் பழக்கப்பட்டுவிட்டனர். எமது நாட்டில் இரவில் இருளான இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு பஞ்சமில்லை என்றாலும் பகலில் கழிப்பறையை சரியாகவே பயன்படுத்துகின்றனர் என்பது ஆறுதலான விடயம்.

 

இஸ்லாமியர்களின் சிறுநீர் கழிக்கும் பழக்கம்

இஸ்லாமியர்களின் முஹம்மது நபியவர்கள் அவர்கள் கூறுகையில், நீர்நிலைகளிலும் மரங்களின் கீழும் பொது இடங்களிலும் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் இஸ்லாத்தின் படி தவறானது. அந்த இடங்களில் மலசலம் கழிப்பது, சிறுநீரை வெளியேற்றுவது சபிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுநீர் கழித்தபின் உடலின் அந்த பகுதியை சுத்தம் செய்வது முஸ்லிம்களிடையே ஒரு கட்டாய வழக்கம். எனவே, முஸ்லிம்களின் கழிப்பறைகளில் சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள் உள்ளன. முஸ்லிம்களின் கூற்றுப்படி, சிறுநீர் கழிப்பதற்காக (கிப்லா) மக்கா இருக்கும் பக்கம் திரும்புவதும், அந்த நேரத்தில் இறைவனை நினைவில் கொள்வதும் தவறானதாகும்.

 

கொழும்பிலுள்ள பொது கழிவறைகள்

கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் கழிவறை வசதிகள் சில காலத்திற்கு முன்பு மிகவும் மோசமாக இருந்தன. ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராகவும், நகர அபிவிருத்தி பொறுப்பாளராகவும் வந்த பின் கொழும்பு முழுவதும் சுத்தமான கழிப்பறை அமைப்புகள் நிறுவப்பட்டன. அதன்படி, கழிப்பறைக்குச் செல்வது எளிதாகிவிட்டது. ஆனால் சிறுநீருக்கு இருபது அல்லது ஐம்பது ரூபாய் வசூலிப்பது சிலரது தவறான கண்ணோட்டத்திற்கு உள்ளாகிறது. அதனால்தான் மக்கள் இரவில் இருட்டில் சிறுநீர் கழிக்க ஆசைப்படுகிறார்கள். எமது நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு இந்த பொது கழிப்பறைகள் குறித்து இன்னும் தவறான எண்ணம் உள்ளது. அதனால்தான் ரயில் நிலையங்கள் மற்றும் சில பொது இடங்களில் வெளிநாட்டவர்களுக்கென தனி கழிப்பறைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

பாரிஸ் மற்றும் லண்டனில் உள்ள சிறுநீர்த்தொட்டிகள்

ஆசிய நாடுகளில் ஒரு மரத்தின் அடியில் அல்லது ஒரு சுவரின் கீழ் சிறுநீர் கழிப்பது ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது. ஆனால் மேற்கத்தேய நாட்டவர்கள் அப்படியில்லையென தொலைக்காட்சிகளிலும் பல்வேறு தனிப்பட்டவர்களின் கருத்துக்களிலும் நாம் காணவும் கேட்கவும் செய்கிறோம். ஆனால் உண்மையில் சுத்தம் செய்ய இடமில்லை என்றால், மரங்களுக்கு அடியில், சுவர்களுக்கு அடியில், இந்த வேலையைச் செய்ய தயங்கும் யாரும் இல்லை. அதனால்தான் லண்டன் மற்றும் பாரிஸில் திறந்தவெளி சிறுநீர் தொட்டிகள் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. பாரிஸில், பயனர்கள் இந்த தொட்டிகள் இயற்கையான முறையில் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்கும் உணர்வைத் தருகின்றன என்று கூறுகிறார்கள். ஆனால் சிலரது வீட்டுக் கடைகளுக்கு முன்னால் இருக்கும் இந்த தொட்டிகளில் விடியற்காலையிலேயே யாரோ சிறுநீர் கழிப்பதைப் பார்த்து கவலைப்படுகிறார்கள்.

 

வரலாற்று கழிப்பறைகள்

பண்டையகால கழிப்பறை மற்றும் சிறுநீர் தொட்டிகளின் இடிபாடுகள் மிகிந்தலை மற்றும் அநுராதபுரம் போன்ற பல இடங்களில் உள்ள அநுராதபுர கால மடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அந்த நாட்களில் செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்ட இடங்கள் சிறுநீர் கழிக்க பயன்படுத்தப்பட்டன என்பதற்கான சான்றுகள் உள்ளன. இப்படியான கழிப்பறை இருப்பிடம் குறித்த இறுதி முடிவுகளை எட்டுவதற்கு முன்னர் போதுமான ஆதாரங்களை சேகரிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் சிரமப்படுகிறார்கள். அதன்படி, வெள்ளையர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன கழிப்பறை மற்றும் கழிப்பறை முறைகளைப் பயன்படுத்தினாலும், முற்காலத்தில் எமது சொந்த கற்செதுக்கல்களிலேயே சிறுநீர் கழித்த ஒரு தேசமாக இருப்பதில் நாம் இன்னும் பெருமைப்படலாம்.

 

பாலின-நடுநிலை கொண்ட கழிப்பறைகள்

எமது நாட்டு ரயில் நிலையங்கள் ஆண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் என்று வெவ்வேறாக அமைக்கப்பட்டுள்ளன. பாலின அடிப்படையில் கழிப்பறைகளை பிரிக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்து ஐரோப்பிய, அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் இப்போது வளர்ந்து வருகிறது. ஜேர்மனியர்கள் இரு பாலினருக்கும் பயன்படுத்தக்கூடிய ஒரே வகையான மலசலகூடத்தை அறிமுகப்படுத்த முயற்சித்து வருகின்றனர். கழிப்பறைகள் எவ்வளவு இருப்பினும், ஆண்களைப் போல காற்சட்டை ஜிப் திறந்து சிறுநீர் கழிக்கும் திறன் பெண்களுக்கு இல்லை என்பதால் இவ்விடயத்தில் வெற்றிபெற முடியாமல் உள்ளது.

 

கழிப்பறைகளுக்கு சென்றால் பணம் கொடுக்கும் இந்தியா

சுதந்திரப் போரின்போது இந்தியர்கள் அழுக்காக இருந்தார்கள் என்றும் அது வெள்ளையர்களை நாட்டை வெறுக்க வைக்கும் ஒரு வழியாக இருந்ததாகவும் ஒரு கருத்து இருந்தது. இதனால், சாலைகளில் மலம் கழித்தல் மற்றும் சிறுநீர் கழிப்பது இந்திய நகரங்களில் மிக சமீபத்திய காலங்களில்கூட விரும்பத்தகாத விடயமாக இருந்தது. இந்த மோசமான பழக்கத்திலிருந்து மீட்பதற்கு இந்தியர்களைக் பொது கழிப்பறைகள் மற்றும் கழிவறைகளுக்குச் செல்வோருக்கு ஊக்கத்தொகை வழங்க இப்போது இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

 

போக்குவரத்தின் போது கழிப்பறைகள்

இலங்கையில் நீண்ட தூர பயணத்தில் ஈடுபடும் பேருந்துக்களில் கழிப்பறைகள் இல்லை. இதன் விளைவாக, பேருந்து நிறுத்தப்படும் இடத்தில் மிகவும் அழுக்கான இடத்தில் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் பெரும்பாலான நாடுகளில், நீண்ட தூர சொகுசு பேருந்துகளில் தனி கழிப்பறைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள ரயில்களில் கழிப்பறை கழிவுகள் மற்றும் சிறுநீர் நேரடியாக தண்டவாளத் தடங்களில் விழுவது ஒரு தேசிய பிரச்சினையாக இருந்தது. இந்தியாவில் கழிவுகள் நேரடியாக தெருக்களில் விழாமல் இருக்க நூறாயிரக்கணக்கான கழிவறைகளை மாற்றுவதற்கு குறைந்தது நான்கு ஆண்டுகள் ஆகும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், கழிப்பறை கழிவுகளை நேரடியாக சாலையில் கொட்டும் அளவிற்கு இலங்கை ரயில்வே இதுவரை போகவில்லை.