இறந்தது போல கனவு கண்டால் என்ன அர்த்தம்?

 

கனவுகளுக்கான விளக்கம் தொடர்பாக இதற்கு முன்னரும் இரண்டு தொகுப்புக்களை வழங்கியுள்ளோம். கனவில் இறப்பது போன்ற சம்பவங்களை காண்பது உண்மையில் அச்சமூட்டும் பயங்கரமான அனுபவம். பலர் இதை ஒரு கனவாகவும் தங்கள் வாழ்க்கைக்கு வரவிருக்கும் அச்சுறுத்தலாகவும் கருதுகின்றனர். ஆனால் மரணத்தைப் பற்றிய கனவுகள் பெரும்பாலும் வெவ்வேறு விடயங்களைக் குறிக்கின்றன. இன்று அதுபற்றி பார்ப்போம்.

 

சொந்த மரணம்

வாழ்க்கையில் ஒரு முறையாவது இவ்வாறான கனவை கண்டிருப்பீர்கள். தனது சொந்த மரணத்தை அல்லது தனக்கு இறுதி சடங்கு செய்வது போல காணும் கனவே இது. சிலர் இப்படியான கனவுகளை காணும்போது, ‘எனது வாழ்க்கை முடிவுக்கு வரப்போகிறதா ? மரணநேரம் வந்துவிட்டதா?’ என்றெல்லாம் எண்ணுகிறார்கள். ஆனால் இது அந்த அர்த்தமல்ல. உங்கள் வாழ்க்கையில் புதிதாக ஏதாவது மாறிவிட்டது என்பதையும் அல்லது அப்படியான மாற்றம் விரைவில் வரப்போகிறது என்பதையும் இந்த கனவு குறிக்கிறது. அந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமையும்.

 

நிம்மதியான மரணமும் பயங்கரமான மரணமும்

நீங்கள் நிம்மதியாக இறப்பதைப் போல கனவு கண்டால் உங்கள் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் புதிய மாற்றத்தை மிகவும் வெற்றிகரமாக எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் அதற்கு எதிர்மாறாக நீங்கள் மிகுந்த வேதனையுடன் பயங்கரமாக உங்களுக்கு மரணம் ஏற்படுவதை போல கண்டால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் புதிய மாற்றத்தை ஏற்றுக் கொள்ளமாட்டீர்கள் என்று அர்த்தம்.

 

தெரிந்தவர் மூலம் கொலை

யாராவது தம்மை கொல்வது அல்லது கொலைசெய்ய விரட்டி வருவது போல கண்டால் நீங்கள் நிஜ வாழ்க்கையில் தவறவிட்ட ஒன்றை பற்றியதாகும். உங்களுக்கு நன்கு தெரிந்த ஒருவர் உங்களைக் கொல்ல வருகிறார் என்றால், அந்த கனவைப் புரிந்துகொள்வது இன்னும் எளிதாக இருக்கும். ஏனென்றால், உங்களைக் கொல்லப் போகிறவர் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய விரும்பாத மாற்றத்தை எதிர்பார்க்கிறார் என்பதாகும். உதாரணமாக, நிஜ வாழ்க்கையில் உங்களுடைய நண்பர் ஒருவர் குடிப்பதை நிறுத்துமாறு கட்டாயப்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதே நண்பர் கனவில் உங்களைக் கொல்ல வந்தால் அந்த பழக்கத்தை விட்டுவிட கூறுவதை போல அர்த்தமாகும்.

 

இனந்தெரியாத ஒருவரால் இடம்பெறும் கொலை

இதுபோன்ற ஒரு கனவு, உங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றங்களையும் எடுத்து செய்ய நீங்கள் தயங்குகிறீர்கள் என்பதை விளக்குகிறது. எடுத்துக்காட்டாக, உங்கள் தற்போதைய வாழ்க்கையை விட்டுவிட்டு இன்னொன்றைத் தேர்வுசெய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இந்த மாற்றத்தை செய்வதால் வெளி உலகத்தின் அச்சுறுத்தல் இருந்தால், ஒரு அந்நியன் உங்களை கொன்றுவிடுவான் அல்லது உங்களை துரத்தி வருவதைப் போல கனவு காணலாம்.

 

குழந்தை இறப்பு

மிகவும் பயமுறுத்தும் மற்றும் சோகமான கனவாக இருக்கும் இந்த கனவை நீங்கள் கண்டால், அதைக் கண்டு கவலைப்பட வேண்டாம். ஏனெனில் இது ஒரு குழந்தைக்கு தீங்கு விளைவிப்பதைக் குறிக்கவில்லை. இது போன்ற ஒரு கனவு உங்கள் பிள்ளை, வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை கடந்து செல்கிறது என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது. உதாரணமாக, ஒரு குழந்தை அவர்கள் நடக்கத் தொடங்கும் போது, ​​பேசத் தொடங்கும் போது, வயதுக்கு வரும்போது, ​​அவர்கள் குறிப்பிடத்தக்க ஒன்றை அடையும்போது இது போன்ற கனவுகளை காணக்கூடும்.

 

கணவன் / மனைவி இறப்பு

இதுபோன்ற ஒரு கனவு முன்னர் குறிப்பிட்ட குழந்தைகளின் மரணம் பற்றிய கனவு போன்றது. அதாவது, உங்கள் மனைவி, கணவன், காதலி அல்லது காதலனின் வாழ்க்கையில் ஏதோ உறுதியான மாற்றம் நிகழ்கிறது என்பதனை குறிக்கிறது. உதாரணமாக, அவர் அவரது வாழ்க்கையில் எந்த நேரமும் பிசியாக இருப்பதை தவிர்த்து வாழ்வில் புதிய ஒரு மாற்றத்தை நோக்கி பயணிப்பதை குறிக்கலாம்.

 

நீங்கள் நேசிக்கும் ஒருவரின் மரணம்

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நேசிப்பவரின் மரணத்தைப் பார்ப்பது, அந்த நபருக்கு உங்கள் வாழ்க்கையில் ஒரு சில சிறப்பான இடம் இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்று அர்த்தம். உதாரணமாக, உங்களுக்கு ஒரு கனவு வருவதாக வைத்துக்கொள்ளுங்கள். அதில் சிரித்து வேடிக்கையாக இருக்கும் ஒரு நண்பர் இறந்துவிடுவார். அதற்கு அர்த்தம், இந்த நாட்களில் உங்கள் வாழ்க்கையில் வேடிக்கையாக இருப்பது நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைப்பதால் பெரும்பாலான நேரங்களில் நீங்கள் அப்படி ஒரு கனவை காண்கிறீர்கள்.