கம்பஹாவிற்கு செல்பவர்கள் பார்க்க வேண்டிய இடங்கள்

 

 இன்போது கம்பஹா என்றால் மினுவாங்கொடை கொத்தணியே ஞாபகம் வரும். காரணம் கொரோனாவின் இரண்டாம் அலை அங்குதான் உருவெடுத்தது. ஆனால் அங்கு பார்ப்பதற்கு மிகவும் அழகான இடங்கள் உள்ளன. கொரோனா அச்சம் நீங்கிய பின்னர் அங்கு செல்லும்போது இவற்றை பாருங்கள். வரலாற்று புகழ்பெற்ற இடங்களைக் காண மக்கள் அநுராதபுரம் அல்லது பொலன்னறுவைக்கு பயணம் செய்கின்றனர். அழகான இடங்களைக் காண டவுன் சவுத் அல்லது மலைநாட்டுப் பகுதிக்கே செல்கின்றனர். கம்பஹா போன்ற இடத்தில் பார்க்க வேண்டிய விடயங்கள் இல்லையா? வரலாற்று மதிப்புள்ள இடங்கள் இல்லையா? அங்கும் சிறப்புவாய்ந்த இடங்கள் உள்ளன. அந்த இடங்கள் சிலவற்றைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப்போகிறோம்.

 

ஹெனரத்கோட தாவரவியல் பூங்கா

கம்பஹாவிலிருந்து கட்டுநாயக்க வரை ஒரு கிலோமீட்டர் தொலைவில் மினுவாங்கொட வீதியில் ஹெனரத்கோட தாவரவியல் பூங்கா அமைந்துள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதை கம்பஹா மல்வத்த என்றே அறிவார்கள். இலங்கையில் உள்ள ஆறு தாவரவியல் பூங்காக்களில் ஹெனரத்கோட தாவரவியல் பூங்காவும் ஒன்றாகும். இருப்பினும், இந்த பூங்காவின் முக்கியத்துவம் என்னவென்றால், இது முதலில் ஆங்கில ஆட்சியாளர்களால் இறப்பர் உற்பத்திக்கான ஆராய்ச்சி களமாக உருவாக்கப்பட்டது. பிரிட்டனில் உள்ள ரோயல் தாவரவியல் பூங்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட இறப்பர் நாற்றுகள் இந்த பகுதியில் நடப்பட்டுள்ளன. இலங்கையின் முதல் இறப்பர் மரம் நடப்பட்ட பெருமை ஹெனரத்கோட பூங்காவிற்கு உண்டு. ஒரு சூறாவளியின் போது விழுந்த இந்த இறப்பர் மரத்தின் எச்சங்கள் இன்றும் உள்ளன. மற்றும் தாவரவியல் பூங்காவாக பார்க்க வேண்டிய இடங்களில் ஹெனரத்கோட பூங்கா ஒரு அழகான சூழல்.

 

அஸ்கிரிய ரஜமஹா விகாரை

கம்பாஹாவின் உடுகம்பல வீதியில் சென்று புலத்கடே சந்திப்பில் வலதுபுறம் திரும்பும்போது அஸ்கிரிய ரஜமஹா விகாரையை முன்னால் காண முடியும். இது உண்மையில் ஒரு பழங்கால குகைக் கோயில். மேலும் இது ஒரு அழகான மலையின் மத்தியில் கட்டப்பட்டுள்ளது. புராணக்கதைகள் மற்றும் தொல்பொருள் சான்றுகளின்படி, வலகம்பா மன்னர் இந்த இடத்தில் மறைந்து வாழ்ந்ததாக கூறப்பட்டு இது ஒரு தொல்பொருள் இடமாக நியமிக்கப்பட்டுள்ளது. அஸ்கிரிய ரஜமஹா விஹாரை மைதானத்தில் உள்ள தூபிக்கு, அரச மரம் மற்றும் சன்னதி அடர்த்தியான மரங்களுக்கு நடுவில் உயர்ந்து செல்லும் ஒரு படிக்கட்டில் ஏறிச் செல்ல வேண்டும். இங்கு பிரபல வரலாற்று ஓவியங்களும் உள்ளன. அஸ்கிரிய குகைக் கோயில் மைதானத்திலிருந்து பிலிகுத்துவா அல்லது வாரணா வரை ஒரு மர்மமான சுரங்கப்பாதை பற்றி புராணங்களில் கதைகள் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.

 

யடவத்த புராண விகாரை

இது யடவத்த விகாரை என்று அழைக்கப்பட்டாலும் யடவத்த புராண தம் பிட விஹாரை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது வித்யாரவிந்த பிரிவேனா என்றும் அழைக்கப்படுகிறது. இது தொல்பொருள் மதிப்புமிக்க ஒரு தளம். இந்த புனித இடம் கம்பஹா-பஹலகம வீதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த நிலத்தில் கோபுரங்களின் மேல் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. அது மிகவும் பாதுகாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கம்பஹாவைப் பார்வையிட சென்றால் தம்பித கோயில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும்.

 

வாரண ரஜமஹா விகாரை

இலங்கையின் வரலாற்று தளங்களை பொறுத்தவரை வாரண ரஜமஹா விகாரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். உண்மையில் அஸ்கிரிய, பிலிகுத்து மற்றும் வாரண ஆகியவை வரலாற்று ரீதியாக நாட்டுப்புறக் கதைகளின்படி பின்னிப் பிணைந்துள்ளன. கண்டிக்கு செல்லும் வழியில் உள்ள திஹாரியவில் இருந்து திரும்பி சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள, மிகவும் அமைதியான சூழலில் ஒரு பெரிய கறுப்பு பாறையையும், அதனுடன் கூடிய புனிதப் பகுதியையும் காணலாம். இந்த புனித பகுதியில் ஏராளமான கொத்து கற்கள் மற்றும் கல்வெட்டுகள் உள்ளன. இந்த ரஜமஹா விகாரையின் நிலத்துடன் ஒரு இயற்கை மூலிகை காடும் உள்ளது. நீங்கள் மிகவும் அமைதியான சூழலில் வாரண ரஜமஹா விகாரையின் பாறையில் ஏற விரும்பினால் முதலில் சுற்றுப்புறங்களை பார்வையிடலாம்.

 

பிலிகுத்துவ ரஜமஹா விஹாரை

பிலிகுத்துவ என்பது ஒரு வரலாற்று தளம் என்று குறிப்பிடுவதை விட வரலாற்றுக்கு முன்பிருந்து முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்று சொல்வது மிகவும் துல்லியமானது. இதற்குக் காரணம், வரலாற்றுக்கு முன்னைய குகைக் கோயில் பாரம்பரியத்தின் அடிப்படையில் இலங்கையின் மிக முக்கியமான இடங்களில் பிலிகுத்துவவும் ஒன்றாகும். பிலிகுத்துவ வரலாற்று குகை ரஜமஹா விஹாரை மற்றும் பௌத்த ஆலயம், அநுராதபுர காலத்தின் ஆரம்பத்தில் இருந்து அமைந்திருந்த மற்றும் ஒரு பண்டைய மனித குடியேற்றமாகவும் இருந்துள்ளது. இது மேல்மாகாணத்தின் மிகப்பெரிய மற்றும் வரலாற்று மதிப்புமிக்க குகை வளாகமாகும். பிலிகுத்துவ ரஜமஹா விகாரையை சேர்ந்த 99 குகைகள் உள்ளன. அதில் பலவும் பௌத்த காலத்திற்கு முந்தியவை மற்றும் கிமு 3-1 காலப்பகுதியில் உருவாகிய பல குகைகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக இது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு குகை வளாகமாகும்.

 

பண்டாரநாயக்க சமாதி

எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க பற்றி தெரியாத இலங்கையர்கள் யாரும் இருக்கமுடியாது. இலங்கையின் நான்காவது பிரதமரும் சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்டவருமான திரு. பண்டாரநாயக்க தனது 59 ஆவது வயதில் படுகொலை செய்யப்பட்டார். அவரது கல்லறை உண்மையில் ஹோரகொல்ல சமாதி என்று அழைக்கப்படுகிறது. ஹொரகொல்ல சமாதி கட்டுமானம் பற்றிய கதைகளும் உள்ளன. அந்த கல்லறையின் மேல் ஒரு பெரிய கற்பாறை உள்ளது. இன்றும், கண்டி வீதியில் நிட்டம்புவ வழியாக பயணிப்பவர்கள் பஸ் அல்லது வேன் மூலம் வந்து, சமாதிக்கு முன்னால் உள்ள ஒரு வெற்று நிலத்தில் நிறுத்தி, சாப்பிட்டு, சமாதிக்குள் நுழைந்து சமாதிக்கு வணக்கம் செலுத்துகிறார்கள். ஹோரகொல்ல பண்டாரநாயக்க சமாதி உண்மையில் பார்வையிடத்தக்கது.

 

டிக்கந்த அரண்மனை வளாகம்

இப்போதெல்லாம் திக்கந்த வளாகம் என்றால் பலருக்கும் தெரியும். இலங்கையில் உள்ள பேய் அரண்மனை என்று திக்கந்த வளாகத்தை சிலர் நினைக்கிறார்கள். அதைப்பற்றி தெரிந்தவர்கள் அதில் பேய்கள் இல்லை என்று கூறுகிறார்கள். இந்த அரண்மனை யக்கல-கிரிந்திவல வீதியில் டிக்கந்தவிற்கும் வதுருகமவிற்கும் இடையில் 300 ஏக்கருக்கும் அதிகமான பெரிய தோட்டத்தின் நடுவில் ஒரு மலையில் அமைந்துள்ளது. அதாவது, இந்த அரண்மனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. அது உண்மையா பொய்யா என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் தூரத்திலிருந்து பார்க்கும் போது கூட, திக்கந்த வளாகம் அற்புதமான, விசாலமான மற்றும் கம்பீரமானது. ஆனால் இந்த அரண்மனைக்குள் நுழைய அனுமதி கிடைக்காது. ஆனால் தூரத்தில் இருந்து பார்க்க அழகான இடங்கள் உள்ளன. இந்த அரண்மனை ஒரு மலையில் அமைந்துள்ளது. அங்குள்ளவர்களை அறிந்தால் அவர்களின் உதவியுடன ஒருதடவை சென்று பார்த்துவிடுங்கள்.