இலங்கையில் மிகவும் நெருக்கமான சூழலில் அலுவலகங்கள் அமைந்துள்ளன. அந்த இடத்தின் காரணமாக நாம் சிறிது நேரம் உடல் மற்றும் மன அசௌகரியங்களைக்கூட அனுபவிக்க நேரிடும். அதன் பிறகு நாம் செய்யும் வேலையின் மன அழுத்தத்திலிருந்தும் பிற உடற்சோர்வுகளிலிருந்தும் விடுபட பயணங்கள் மற்றும் வேடிக்கையான விடயங்களை நோக்கிச் செல்கிறோம். இப்படியான வேலை அழுத்தத்தை குறைத்து புதிய சுற்றுச்சூழல் சௌகரியமான நிலையை உருவாக்க உலகின் பல பிரபல தொழில்நுட்ப நிறுவன தலைமையக கிளைகளுக்குமிடையில் இப்போது போட்டி நிலவுகிறது. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட இந்த இடங்கள் மிகவும் பிரபலமாகிவிட்டன. அமெரிக்காவில் கூகிள், அமேசான் மற்றும் மைக்ரோசொஃப்ட் பேஸ்புக் தலைமையகங்களுக்கு சுற்றுலா ரீதியாக பார்வையிடுவதற்கு வருவதும் மற்றொரு புதிய பயண அனுபவமாக மாறியுள்ளது.
ஏன் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு நவீன தலைமையகம் தேவைப்படுகிறது?
தொழில்நுட்ப நிறுவனங்கள் என்பது வெறுமனே கேஜெட் தயாரிப்பாளர்கள் மாத்திரமல்ல. கூகிள், மைக்ரோசொப்ட், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், அவற்றின் முக்கிய பணி மென்பொருள் மற்றும் வலையமைப்பு மேம்பாட்டு துறையில் அதிகம் கவனம் செலுத்துகின்றது. எனவே இந்த நிறுவனங்களின் தலைமையகத்தை மென்மேலும் பராமரிப்பது அவர்களுக்கு எதிர்காலத்திலும் ஒரு நன்மை தரும் விடயமாகும். ஒருபுறம், அந்த இடங்கள் தொழிநுட்ப உலகத்தினிடையே மற்றும் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகி வருகின்றன. மறுபுறம், நெரிசலான நகரத்தில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து ஊழியர்களுக்கு வேலை கொடுப்பதை விட, ஊழியர்களுக்கு இவ்வளவு பெரிய திறந்த இடத்தில் வேலை செய்வது மிகவும் எளிதானது. நிறுவனங்கள் இதற்கு பில்லியன் கணக்கான டொலர்களை செலவிடுகின்றன. அமேசன் நிறுவனம் அவர்களின் தலைமையக கட்டிடத்தின் ஈர்ப்பால் இரண்டாவது தலைமையகத்தை உருவாக்கப் போகிறது. இதற்கு 5 பில்லியன் டொலருக்கும் அதிகமாக செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நோக்கங்கள் என்ன?
நவீன தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பாலும் நம்மில் பெரும்பாலானோரை போல மடிக்கணினி அல்லது டெஸ்க்டொப் கணினிக்கு முன்னால் வேலை செய்ய வேண்டியிருக்கும். இது சலிப்பானது மற்றும் ஆரோக்கியமற்றது. எனவே இந்த நிறுவனங்கள் கட்டிட வடிவமைப்பை சற்று வித்தியாசமாக்க முயற்சிக்கின்றன. நாங்கள் பொதுவாக பயன்படுத்தும் நான்கு சுவர்கள் கொண்ட சிறையை போல அடைந்து கிடக்கும் அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளை விட வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் ஒரு தனி வளையம் போன்றது. அவை தலைமையிடமாக மூன்று அல்லது நான்கு மாடி வட்ட கட்டிடத்தில் உள்ளன. பெரும்பாலான பேஸ்புக் நிறுவனத்தின் கட்டிடங்கள் கூட உயரமானவை அல்ல. இதன் மூலம் அவர்கள் இடத்தை மிகவும் இனிமையாகவும், மன அழுத்தமற்றதாகவும் மாற்ற முயற்சித்தார்கள். இந்த மெகா தொழில்நுட்ப நகரங்களில் விளையாட்டுத்துறை, மசாஜ் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் உள்ளன. சில இடங்களில், பாடசாலைகள் மற்றும் போர்டிங் ஹவுஸ் கூட டெக் சிட்டி அல்லது தலைமையகத்திற்கு குழந்தைகளை அனுப்பும் வகையில் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.
நன்மைகள்
இலங்கையை எடுத்துக்கொண்டால் வேலைக்குச் செல்லும் விடயம் என்றாலே யாரும் விரும்பத்தகாத அனுபவமாகும். நீங்கள் காலை ஏழு அல்லது எட்டு மணிக்கு எழுந்து அலுவலகத்திற்குச் செல்ல சுமார் பத்து நிமிடங்கள் சைக்கிள் ஓட்டினால், எவ்வளவு நன்றாக இருக்கும்? இந்த தொழிநுட்ப நிறுவனங்களில் வேலைக்குச் செல்வோர் பெரிய தொழிநுட்ப நகர தலைமையகத்தால் அந்த நன்மையைப் பெறுகிறார்கள். இந்த புதிய சூழல் இடங்களில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு ஒரு வரமாகும். எங்களைப் போலவே, பெரிய பெரிய மில்லியனர்களும் இது போன்ற ஒரு இடத்திற்கு வந்து மீட்டிங் வைக்க ஒரு கப் தேநீர் சாப்பிட விரும்புகிறார்கள். பல துறைகள் ஒரே இடத்தில் இருப்பதால், அமைப்பு மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டிற்காக ஆற்றல் மற்றும் நேரம் போன்ற விஷயங்கள் சேமிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடும் குறைக்கப்படுகிறது.
கூகிள் பிளெக்ஸ் (Google Googleplex)
கூகிள் மவுண்டன் வியூ 12 ஏக்கர் பரப்பளவில் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இந்த கட்டிடங்களிற்கு செல்ல கூகிள் ஜி பைக்குகள் உள்ளன. இந்த கூகிள் இடத்தில் இயற்கையான உணவுப் பொருட்கள், டென்னிஸ் கோர்ட்டுகள், பீச் கைப்பந்து மைதானங்கள் மற்றும் பல இலவச இடங்களும் உள்ளன. கூகிளின் ஃபிளமிங்கோ மற்றும் டி-ரெக்ஸ் சின்னங்களின் பெரிய பிரதிகளும் இந்த வளாகத்தில் உள்ளன. குறைந்த நபர்கள் இந்த தலைமையகத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் அருகிலுள்ள பிற இடங்களில் ஆண்ட்ரொய்டின் ஒவ்வொரு பதிப்பு தொடர்பான இனிப்புகளின் பிரதிகளை உருவாக்கியுள்ளன. அத்தோடு அருகில், கூகிள் தனது ஊழியர்களுக்காக ஒரு புதிய இடத்தை உருவாக்குகிறது.
ஆப்பிள் பார்க்
ஆப்பிள் பார்க்கில் 12,000 பேர் தங்கலாம். 175 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆப்பிள் பூங்கா வானில் இருந்து பார்க்கும்போது ஒரு பெரிய வளையம் போல் தெரிகிறது. உட்புறம் பச்சை நிறமாக அழகாக நடப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தின் குறுக்கே இரண்டு மைல் நடை பாதைகள் உள்ளன. இது ஊழியர்களுக்கு சோர்வாக இருக்கும்போது வேலையில் இருந்து ஓய்வெடுக்க வாய்ப்பளிக்கிறது. இந்த கட்டிடத்தில் 1,000 இருக்கைகள் கொண்ட பெரிய கேட்போர் கூடமும் உள்ளது. இந்த ஆப்பிள் தலைமையகத்தைப் பார்க்க சுற்றுலா பயணிகளிடையே நிறைய ஆர்வமும் உள்ளது. ஆனால் ஆப்பிள் பிரதான கட்டிடத்தின் அதே மாதிரியில் ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது. இது சுற்றுலாப் பயணிகள் பார்க்க பிரதான கட்டிடத்திலிருந்து வேறுபட்டது.
சேல்ஸ்ஃபோர்ஸ் டவர், சான் பிரான்சிஸ்கோ
இந்த கோபுரத்தின் தனித்துவம் என்னவென்றால், இது ஒரு நவீன கட்டிடமாகும். இது வெவ்வேறு வண்ணங்களில் ஒளிரும். இது சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்த 1.1 பில்லியன் டொலர் மதிப்புள்ள 61 மாடி கட்டிடம் 2016 இல் திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் பகல் நேரத்தில் நேரடி சூரிய ஒளியைப் பெற வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இரவு வெவ்வேறு வண்ண விளக்குகளால் ஒளிரும். மேலும், இந்த அலுவலக இடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் தங்கள் நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் அமைப்பையும் மாற்ற முடியும். ஒவ்வொரு தளத்திலும் ஒரு தியான அறை மற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு புத்தகசாலையும் உள்ளது. உள்ளே இருக்கும் இடங்கள் இயற்கை சூழலுடன் பொருந்தக்கூடிய வகையில் மரங்களால் முடிக்கப்படுகின்றன.
பேஸ்புக்
400,000 சதுர அடிக்கு மேற்பட்ட இடவசதியுடன் பேஸ்புக்கின் தலைமையகம் மென்லோ பார்க் என்று அழைக்கப்படுகிறது. இதுவும் கலிபோர்னியாவில் தான் உள்ளது. இது முதன்முதலில் 2015 இல் கட்டப்பட்டது. ஆனால் பின்னர் இந்த இடத்தை இன்னும் விரிவாக்க பேஸ்புக் பணியாற்றியது. பேஸ்புக் தலைமையகத்தில் 9 ஏக்கர் பச்சை கூரைகள் மற்றும் இயற்கை மரங்கள் உள்ளன. இந்த கட்டிடத்தின் மாடித் திட்டங்கள் திறந்தவெளி அடிப்படையில் அமைந்துள்ளது. மேலும், இந்த இடத்தின் கலை மற்றும் கட்டிடக்கலை திறமையான வடிவமைப்பாளர்களால் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக்கின் சற்று பழைய தலைமை அலுவலகம் ஒரு நெடுஞ்சாலையிலிருந்து தெருவுக்கு குறுக்கே உள்ளது. அங்கு செல்ல ஒரு சுரங்கப்பாதையும் உள்ளது. தொழிலாளர்கள் அதன் வழியாக சைக்கிளில் சவாரி செய்யலாம்.