இந்திய சுதந்திர போரின் மாவீரர்கள்

 

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தைப் பார்த்து அதனுடன் ஒப்பிடும் போது இலங்கையில் அந்த அளவிற்கு சுதந்திரப் போராட்டம் நடக்கவில்லை என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தியர்கள் சுதந்திரத்திற்காக மிகப்பெரிய போராட்டத்தையும் பல உயிர் தியாகத்தையும் செய்ய வேண்டியிருந்தது. மகாத்மா காந்தியின் ஆன்மீகத் தலைமையின் கீழ் திரண்ட இந்தியர்கள், அப்போதைய உலகின் மிக சக்திவாய்ந்த சாம்ராஜ்யத்தை அஹிம்சை வழியில் வெற்றிகொள்ள முடிந்தது. மகாத்மா காந்தியின் மிகப்பெரிய நிழலால் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு வகித்த பல ஹீரோக்களைப் பற்றி இலங்கையில் நமக்கு மிகக் குறைந்தளவே தெரியும். பெரும்பாலும் நேரு-காந்தி நல்லிணக்கத்தைப் பற்றி மட்டுமே எமக்கு தெரியும். எனவே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பாடுபட்டு உழைத்த சில ஹீரோக்கள் பற்றிய கட்டுரையை உங்களிடம் கொண்டு வருவோம் என்று நினைத்தோம்.

 

சுபாஷ் சந்திரபோஸ்

இந்தியர்களால் நேதாஜி என்று அன்பாக அழைக்கப்படும் சுபாஷ் சந்திரபோஸ் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தனது நாட்டுக்குத் திரும்பிய பின்னர், சிவில் சேவையில் சேர்ந்து, சுதந்திரப் போராட்டத்திற்காக அவர் அப்போது வகித்து வந்த அனைத்து பதவிகளையும் கைவிட்டார். இந்திய காங்கிரசின் ஆரம்பகால உறுப்பினரான சுபாஷ், ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்று நம்பினார். இதனால்தான் அவர் மகாத்மா காந்தியுடன் தர்க்கத்தில் ஈடுபடவும் செய்தார். இந்தியாவை சுதந்திரத்தின்பால் விடுவிப்பதற்காக இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்றினார். இருப்பினும், அவர் ஒரு மர்மமான விமான விபத்தில் காணாமல் போனார். சில இந்தியர்கள் சுபாஷ் சந்திரபோஸ் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர்.

 

பகத்சிங்

சீக்கிய குடும்பத்தில் பிறந்த பகத்சிங்கின் சுதந்திரப் போராட்டம் அவரது இரத்தத்தில் இருந்தே பிறந்தது. பாரத் மாதா என்ற இரகசிய அமைப்பை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்த பகத்சிங், இதன் மூலம் இந்தியா முழுவதும் சுதந்திரப் போராட்டத்தின் தீப்பிழம்புகளை எரியச் செய்ய முடிந்தது. பகத்சிங் ஒரு புரட்சியின் மூலம் இந்தியாவை விடுவிக்கவும் அதேபோல் ஒரு சோசலிச இந்தியாவை உருவாக்கவும் முயன்றார். இருப்பினும், ஏகாதிபத்தியவாதிகளால் அவர் கைது செய்யப்பட்ட பின்னர், பகத்சிங் மற்றும் அவரது குழுவின் பலமானவர்கள் பலரும் தூக்கிலிடப்பட்டனர்.

 

டாக்டர் ராஜேந்திர படேல்

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியான டாக்டர் ராஜேந்திர படேலும் இந்திய அரசியலமைப்பின் வரைவுக்கு பங்களித்தார். மகாத்மா காந்தியால் செல்வாக்கு பெற்ற அவர் மேற்கத்தேய கல்வி முறை குறித்து அக்கறை கொண்டு தனது மகனை சுதேச கல்விக்கு வழிநடத்தினார். பூகம்பத்தால் அழிவுற்ற பின்னர் பீகாரை மீண்டும் கட்டியெழுப்ப நிதி திரட்டத் தொடங்கினார். அவர் சிறையில் இருந்தபோது முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகின.

 

லால் பகதூர் சாஸ்திரி

ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதமரான சாஸ்திரி, மகாத்மா காந்தியுடன் சேர்ந்து இயங்கியதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தியதற்காக ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளானார். அவர் சுதந்திர இந்தியாவில் பசுமைப் புரட்சியை தொடங்கினார். பசி மற்றும் பட்டினிக்கு எதிராக ஒரு பெரிய போராட்டத்தையே நடத்தினார். இவர் நேர்மையான மற்றும் எளிமையான மனிதரான இவர் இந்தியாவின் மிகவும் மதிப்பிற்குரிய தேசிய தலைவர்களில் ஒருவராக வர்ணிக்கப்படுகிறார்.

 

சந்திரசேகர் ஆசாத்

பகத் சிங்கின் வழிகாட்டியாகக் கருதப்படும் ஆசாத் ஆரம்பத்தில் மகாத்மா காந்தியின் அகிம்சை இயக்கத்துடன் தொடர்புடையவர். ஆனால் அந்த இயக்கத்தின் மூலம் இந்தியா சுதந்திரம் பெற முடியுமா என்று அவர் சந்தேகித்தார். இதன் காரணமாக அவர் ஒரு அடக்குமுறை திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் சுதந்திரப் போராட்டத்திற்கான தனது உறுதிப்பாட்டை விளக்குவதற்காக உருது மொழியில் சுதந்திரம் என்று பொருள்படும் ‘ஆசாத்’ என்ற வார்த்தையை தனது பெயரில் சேர்த்தார். தனது நண்பர் ஒருவரால் காட்டிக் கொடுக்கப்பட்ட பின்னர் ஏகாதிபத்தியவாதிகளால் ஆசாத் கொல்லப்பட்டார். தனது கடைசி மூச்சு வரை அவர் போராட்டத்தை கைவிடவில்லை.

 

சர்தார் வல்லபாய் படேல்

உலகின் மிக உயரமான சிலை இந்தியாவில் உள்ளது. அது சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையாகும். சுதந்திர இந்தியாவை ஒரே தேசமாக மாற்றுவதில் போராடியதற்காக அவருக்கு முதன்மையான மரியாதை உண்டு. பெரிய மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்த சில இந்திய இராஜ்ஜியங்கள் சுயமாக சுதந்திரம் பெற முயற்சித்தன. ஆனால் படேலின் தொலைநோக்கு ஞானத்தால் தடுக்கப்பட்டன. இந்திய சிவில் சேவையைப் பாதுகாப்பதில் முன்னோடிகளில் ஒருவராக படேல் இன்றும் கருதப்படுகிறார். இதன்மூலம் அவருக்கு இன்றுவரை இந்தியா மரியாதை செலுத்துகின்றது.

 

பால் கங்காதர் திலக்

சாதாரண இந்தியர்கள் கங்காதர் திலக்கிற்கு லோக்மண்யா என்ற பட்டத்தை வழங்கினர். பள்ளிக் கல்வியை பெற முடிந்த முதற்தர தலைமுறை இந்தியர்களைச் சேர்ந்த இவர், பின்னர் கல்வி முறையை விமர்சித்தார். இந்தியாவின் உத்தியோகபூர்வ மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று முதலில் பரிந்துரைத்தார். ஆரம்பத்தில், கங்காதர் திலக் இந்தியாவின் ஆன்மீகத் தலைவராக கருதப்பட்டார். 1920 இல் திலக்கின் மரணத்தால் எஞ்சியிருந்த வெற்றிடத்தை மகாத்மா காந்தி நிரப்பினார். நவீன இந்தியாவின் நிறுவுனர் மற்றும் இந்தியர்களால் இந்து தேசியவாதத்தின் தந்தை என கங்காதர் திலக்கிற்கு காந்தி மரியாதை செலுத்தினார்.