அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய டிஜிட்டல் நுட்பங்கள்

 

சுமார் 10 வருடங்களுக்கு முன்பு அலுவலகங்களில்கூட டிஜிட்டல் என்கிற வார்த்தைக்கே இடமில்லாமல் இருந்தது. இப்போது சாதாரண அரசுசார் அலுவலகங்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. உண்மையில், இப்போதெல்லாம் ஒரு நபர் டிஜிட்டல் திறன்கள் இல்லாமல் வாழ்விலோ அல்லது தொழிலிலோ முன்னேறுவது கடினம். எல்லாம் டிஜிட்டல் செய்த மாயம் என்பதே இதற்கு காரணம். எனவே, நீங்கள் ஒரு சொந்த தொழிலை தொடங்கவோ அல்லது ஒரு வேலையை தேடுகிறீர்கள் என்றால் வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகின் திறன்களைப் பற்றி சற்று  அறிந்திருப்பதும், அந்த டிஜிட்டல் திறன்களை செயற்படுத்த தேவையான அறிவை வளர்த்துக்கொள்வதும் அவசியம். குறிப்பாக நீங்கள் தொழிலில் முன்னேற காத்திருந்தால் இந்த விடயங்களை கற்றுக்கொள்வதன் பயன் அளப்பரியது. இந்த காலத்தில் டிஜிட்டல் திறன்கள் தொழிற்துறையில் முன்னேறுவது மிகவும் கடினம்.

 

  1. சமூக ஊடகங்கள் / SOCIAL MEDIA

சமூக ஊடகங்களை பற்றி பேசினால் உடன் நினைவுக்கு வருவது பேஸ்புக். சில சந்தர்ப்பங்களில் இந்த பதிவைக் கூட பேஸ்புக் வழியாக கண்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும் உங்களிடம் நீண்ட காலமாக பேஸ்புக்கில் கணக்கு இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் பேஸ்புக்கில் வல்லவர் என்று அழைக்கப்படுவதற்கு அது இயங்க வேண்டும். அத்தோடு சோஷியல் மீடியாவில் எக்ஸ்பர்ட் என்று எதுவும் இல்லை. அதனால்தான் சமூக ஊடகங்களில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மட்டுமல்லாமல் LINKEDIN போன்றவையும் அடங்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர், இந்த சமூக ஊடகங்களை எவ்வாறு தொழில்முறைக்கு சம்பந்தப்படுத்தி பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்திற்காக ஒரு சமூக ஊடக பக்கத்தை எவ்வாறு உருவாக்குவது மற்றும் அதை எவ்வாறு மார்க்கெட்டிங் செய்வது என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். சாதாரணமாக கூகிளில் தேடியும் கற்றுக்கொள்ளலாம்.

 

  1. சேர்ச் & ரீசேர்ச் !

கூகிள் சேர்ச் பற்றி நாம் சொன்னதால் இதைப் பற்றி சொல்ல வேண்டும். அதாவது தேடுவதும் பின்னர் அதுபற்றி ஆராய்வதும் மிகவும் அவசியம். ஒரு விஷயத்தை இங்கே தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இணையம் ஒரு பெரிய கலைக்களஞ்சியம் போன்றது. ஆனால் அந்த கலைக்களஞ்சியத்தில் நாம் தேடி பெற விரும்புவதைக் காண்பதற்கும் வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, சேர்ச் மற்றும் ரீசேர்ச் என்பது கூகிளில் சில செல்களை மாத்திரம் போட்டு அதற்கு வரும் விக்கிபீடியா லிங்கில் இருப்பது மாத்திரம் அல்ல. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவை தவறாகவும் மாறக்கூடும். அதனால் சரியான முறைகள் மற்றும் நுட்பங்களுடன், எந்தவொரு விடயத்திற்குமான தேடுபொறி நுட்பங்களை எவ்வாறு துல்லியமாகவும் திறமையாகவும் கையாள்வதென கற்றுக்கொள்ள வேண்டும்.

 

  1. பகுப்பாய்வு ( ANALYTICS )

அனலிட்டிக்ஸ் என்பது நம்மில் புதிதாக இந்த வார்த்தையை கேட்கும் பெரும்பாலானோருக்கு ஏதாவது கஷ்டமான பகுதியாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணத் தோன்றும். ஆனால் இன்றைய உலகில் ஒரு தொழில்முறை மனிதன் கட்டாயம் அறிந்திருக்கவும் கற்றுக்கொள்ளவும் வேண்டிய ஒரு பகுதியாக இது இருந்து வருகிறது. முதலில் சமூக ஊடகங்களைப் பற்றி அறிந்து கொண்டோம். எமது அல்லது நாம் தொழில் புரியும் நிறுவனத்தின் ஒரு டிஜிட்டல் ப்ளாட்போர்ம் இருக்கலாம். அதாவது சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்கள் போன்றவற்றை இவை உள்ளடக்கும். இப்போது அதை முறையாக நிர்வகிக்க வேண்டும். அதை சரியாக நிர்வகிக்கவும், சரியாக அளவிடவும் வேண்டும். அதற்குத்தான் இந்த அனலிட்டிக்ஸ்  உதவும். ஒரு எளிய எடுத்துக்காட்டாக, பேஸ்புக் பேஜில் உள்ள அனலிட்டிக்ஸ் சென்று, எந்த வகையான போஸ்ட்கள் சிறப்பாகச் செயற்பட்டன, அவை எந்த நேரத்தில் அதிகமான பார்வையாளர்களை அடைகின்றன என்பதைப் பார்க்கலாம். அவற்றைப் பார்த்து பகுப்பாய்வு செய்த பிறகு எதிர்கால முடிவுகளை நாம் மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க முடியும். அதை எப்படி செய்வதென நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

  1. மைக்ரோசொப்ட் OFFICE

வேர்ட்/WORD என்பது பெரும்பாலான மக்கள் அறிந்த அலுவலக பயன்பாட்டு செயலி தான். ஆனால் வேர்டில் கூட ஒரு லெட்டர் அல்லது ஆவணத்தை எவ்வாறு தட்டச்சு செய்வதென மட்டுமே தெரியும். மைக்ரோசொஃப்ட் ஒபிஸ் தொகுப்பில் உள்ள பயன்பாடுகள், கூகிள் டாக்ஸ் மற்றும் கூகுள் ஷீட் போன்றவற்றிற்கு இணையாக பிற இலவச சேவைகளுடன் கூட செய்ய முடியும்.

உதாரணமாக EXCEL மூலம் செய்யக்கூடிய வேலைகளை கற்றுக்கொள்வது ஒரு தொழில்முறை நிபுணருக்கு மிகவும் அவசியம். எக்செல் பயன்பாட்டில் தரவு மேலாண்மைக்கு நாம் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஆயிரக்கணக்கான கருவிகள் உள்ளன. இதுபோன்ற ஆயிரக்கணக்கான விடயங்களை எக்செல் இல் செய்ய முடியும்!

 

  1. உள்ளடக்க உருவாக்கம் / CONTENT CREATION

இது ஒரு கடினமான பணியாகத் தோன்றினாலும், இதனை சரியாக பயிற்சி செய்தால் உண்மையில் கடினம் அல்ல. இப்போது டிஜிட்டல் யுகத்தில் நிறுவனம் அல்லது சேவை வலைத்தளங்கள் அல்லது சமூக ஊடக பக்கங்கள் அதைச் செய்யும்போது, ​​வெவ்வேறு வகையான உள்ளடக்கத்தை உருவாக்க வேண்டும். சில நேரங்களில் பிரத்தியேக கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் கூட உள்ளனர். ஆனால் இந்த கன்டென்ட் க்ரியேஷன் என்பதை வளர்த்துக்கொள்வது மிகவும் உதவக்கூடியது. எடுத்துக்காட்டாக, ஒரு போஸ்ட், ஒரு பென்னர் போன்றவற்றை உருவாக்குவதற்கு ஃபோட்டோஷொப் போன்ற மென்பொருளைப் பயன்படுத்தி அல்லது CANVA  போன்ற ஒன்லைன் கருவிகளை பயன்படுத்தி எவ்வாறு உருவாக்குவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். வீடியோ அல்லது போட்காஸ்டை எவ்வாறு உருவாக்குவது, அவற்றை எவ்வாறு திருத்துவது மற்றும் பதிவேற்றுவது என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்லாமல், பேஸ்புக் அல்லது ட்விட்டரில் ஒரு தொழில்முறை வழியில் ஒரு ஸ்டேட்டஸை வைக்க கற்றுக்கொள்வது, ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வதும் இந்த உள்ளடக்க உருவாக்கத்தின் கீழ் வருகிறது.

 

  1. டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் !

டிஜிட்டல் உலகில் டிஜிட்டலிஸ்ட் போல சிறந்து விளங்க வேண்டுமென்றால் நிச்சயமாக இதனை தெரிந்துகொள்ள வேண்டும். இன்று மட்டுமல்ல, கடந்த காலத்திலும் ஒரு வேலையைச் செய்யும்போது இந்த தொடர்பு அவசியமாகத்தான் இருந்து வந்தது. ஆனால் வேலை கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் போன்ற வார்த்தைகளுக்குக்கூட இடமின்றி இப்போதைய பெரும்பாலான நவீன பணியிடங்களில் வேலை செய்து வருகிறோம். டிஜிட்டல் தகவல்தொடர்பு இன்று அதை விட அதிகமாக உள்ளது. அதை முறையாகவும் திறமையாகவும் செய்யும் முறைகளையும் அதில் உள்ள நெறிமுறைகளையும் கற்றுக்கொள்வது அவசியம். எடுத்துக்காட்டாக, E-MAIL மூலம் தொழில்முறை முறையில் எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை நாங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். கூடுதலாக, மைக்ரோசொப்ட் TEAMS போன்ற பிற தகவல் தொடர்பு தளங்கள் நவீன பணியிடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதிகபட்ச செயல்திறன் மற்றும் நிபுணத்துவத்துடன் இவற்றைப் பயன்படுத்துவதற்கான நுட்பங்களையும் முறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

 

  1. உள்ளடக்க சந்தைப்படுத்தல் / CONTENT MARKETING

நாங்கள் மேலே கூறியது ஒரு கன்டென்டை உருவாக்குவது பற்றியது. கன்டென்ட் மார்க்கெட்டிங் – அதாவது, அந்த வழியில் உருவாக்கப்பட்ட கன்டென்டை எவ்வாறு சரியாக விளம்பரம் செய்வது, அதிகபட்ச வெற்றியுடன் விளம்பரப்படுத்தக்கூடிய வகையில் அதை எவ்வாறு வடிவமைப்பது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, SEO OPTIMIZATION என்றால் என்ன? இதன் பொருள் நாம் உருவாக்கும் கன்டென்ட் SEARCH ENGINEகளில் மிக எளிதாக தெரிவாவதற்கு செய்யக்கூடிய முறையாகும். எனவே SEARCH ENGINE களில் நமது CONTENT விரைவாக காண்பிக்கப்படுவதற்கு தேவையான, சிறந்த பிரபலமான முக்கிய வார்த்தைகளைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும். இணையத்திலும் இவற்றை கற்றுக்கொள்ளலாம்.