எரிமலை வெடிப்பினால் ஏற்படும் சூழல் பாதிப்புகள்

 

எமது நாட்டில் அதிஷ்டவசமாக எந்தவொரு எரிமலையும் இல்லை. அதனால் நாம் இதுவரை எந்தவொரு எரிமலை வெடிப்பினையும் அனுபவித்ததும் இல்லை. எரிமலை வெடிப்புகளை திரைப்படங்களில் பார்த்துள்ளபடி, வாய்க்காலின் வெடிப்பின் காரணமாக காலநிலை, சுற்றுச்சூழல், வாயுநிலை போன்ற பல மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எரிமலை வெடிப்பிலிருந்து வரும் தூசி துகள்கள் தரையில் விழுந்து பின்னர் அவை தரைக்கு உரமாக மாறுகின்றன. இது விவசாயத்தை மேம்படுத்தும். ஆனால் இந்த எரிமலை தூசித்துகள்களினால் ஏற்படும் வாயுக்களின் விளைவுகளுடன் ஒப்பிடும்போது, ​​அந்த நன்மைகள் மிகவும் சிறியவை.

 

எரிமலை வெடிப்பால் வெளிவரும் வாயுக்கள்

எரிமலைகளில் பல வகைகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை எரிமலைக்குழம்பை வெளியிடும் எரிமலைகளை விட கூடுதலாக அதிக அளவு நச்சு வாயுக்களை வளிமண்டலத்தில் வெளியிடுபவையே காணப்படுகின்றன. எரிமலை வெடிப்பில் நீராவியுடன் கலந்த இந்த பல்வேறு வாயுக்கள் நேரடியாக வளிமண்டலத்தில் சேர்க்கப்படுகின்றன. எரிமலை வெடிப்பின் போது கார்பன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் சல்பைட், ஹைட்ரஜன் குளோரைடு, ஹைட்ரஜன் ஃவுளூரைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றை காற்றில் கலக்கலாம். இந்த வாயுக்களின் வெளியீட்டை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியாது. சில நேரங்களில் பெரிய நகரங்களிலிருந்து தொழிற்சாலைகள் வெளியேற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களின் அளவை விட அதிகமாக எரிமலை வெடிப்பின் போது ஒரே நாளில் வளிமண்டலத்தில் சேர்க்கப்படுகின்றன.

 

வாயுக்களால் ஏற்படும் சேதம்

இந்த கார்பன் டை ஆக்சைடுவின் அதிகரிப்பு காரணமாக பச்சைவீட்டு விளைவை அதிகரிக்கிறது, இதனால் புவி வெப்பமடைகிறது. சல்பர் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் மேல் வளிமண்டலத்தில் நுழைந்தால், அது கந்தக அமிலத்தை உருவாக்கி அமில மழையை ஏற்படுத்தும். சல்பூரிக் அமிலம் கலந்த நீர் உயிரினங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். காற்று மற்றும் பூமியின் வளிமண்டலத்தின் பரவல் காரணமாக  இந்த அமில மழை எரிமலை சார்பற்ற பகுதிகளையும் பாதிக்கிறது.

 

பூமியின் வளிமண்டலத்தை குளிர்ச்சியடைய செய்தல்

1991 இல் பிலிப்பைன்ஸில் பினாட்டுபா எரிமலை வெடித்து, அருகிலுள்ள பகுதிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. அந்த எரிமலையின் பெரிய வெடிப்பிற்கு முன்னர் ஆபத்து கண்டறியப்பட்டதால் உயிர் இழப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டது. இருப்பினும், 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பெரிய எரிமலை வெடிப்பான பினாட்டுபா எரிமலை, பூமியின் மேல் வளிமண்டலத்தில் அதிக அளவு சல்பர் டை ஆக்சைடை வெளியிட்டது. அந்த சல்பர் டை ஆக்சைடு கலந்த வளிமண்டலம் சூரிய ஒளியின் ஒரு பகுதியை பூமியிலிருந்து திசை திருப்புகிறது. இதன் விளைவாக, 1992-93ல் புவி வெப்பமடைதல் 0.5 டிகிரி குறைந்தது. ஒருபுறம், புவி வெப்பமடைதல் மேம்படுவதாகத் தோன்றுகிறது, ஆனால் காலநிலை மாற்றத்திற்கான சாத்தியம் மற்றும் திடீர் மழை மற்றும் வறட்சி அதிகரிக்கும் அபாயம் இருக்கும்.

 

 எரிமலைகளால் உருவாகும் தூசு மேகம்

2008 ஆம் ஆண்டில், சிலியில் சாய் டென் எரிமலை வெடித்தது. இதன் விளைவாக தூசு மேகம் அர்ஜென்டினாவின் பதகோனியாவுக்கு சுமார் 1,000 மைல் [1,000 கி.மீ] தூரம் வரை பரவியது. இது அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களையும் பாதித்தது. 1994 ஆம் ஆண்டில் பப்புவா நியூ கினியாவின் எரிமலைகளான வல்கன் மற்றும் டவுர்வூர் ஆகியவற்றின் எரிமலை வெடிப்பு இறுதியில் அண்டை நகரங்களில் இரண்டு அடிக்கு மேல் தூசு அடுக்குகளை உருவாக்கியது. தூசு என்பது மணல் மட்டுமல்ல, எரிமலை வெடிப்பின் துகள்களும் ஆகும். கடந்த ஆண்டு இந்தோனேசிய தீவான சுமத்ராவில் இருந்து எரிமலை வெடித்து, இப்பகுதியை ஒரு சிவப்பு நிறமாக மாற்றியது. தூசி மேகங்கள் வழியாக சூரிய ஒளி வந்தபோது தூசு தாக்கத்தால் நிறம் மாறிவிட்டது.

 

 எரிமலை தூசு காரணமாக ஏற்படும் பிற சேதம்

இந்த தூசு மேகம் தீவிரமடையும் போது, ​​சூரிய வெளிச்சம் பூமியில் பல நாட்கள் படாமல் இருக்கக்கூடும். அதற்கும் கூடுதலாக, இந்த தூசு மேகங்களில் மின்னலும் தாக்குகிறது. அந்த இருள் காரணமாக, மக்கள்  பகல் வேளையை கூட இரவு அல்லது மாலை வேலையாக கருத வேண்டும். 1815 இல் டோம்போரா எரிமலை வெடித்ததன் மூலம் உருவான தூசு மேகம் சுமார் 150 மைல் [150 கி.மீ] வரை நீண்டுள்ளது. இதன் விளைவாக, காலநிலை மாற்றம் மிகவும் கடுமையானது, 1816 இல் வெயில்காலம் ஐரோப்பாவிற்கும் வடக்கு அரைக்கோளத்தில் உள்ள அமெரிக்காவிற்கும் வரவில்லை. வெயில் காலம் இல்லாதது மக்களுக்கு நல்லது என்று தோன்றினாலும், அது பயிரிடப்பட்ட பயிர்களுக்கு சரியாக இருக்கவில்லை. இதன் விளைவாக, இப்பகுதியில் பயிர் செயலிழப்பு மற்றும் பஞ்சம் மற்றும் நோய்கள் பதிவாகியுள்ளன.

 

 விமான பயணத்தில் ஏற்பட்ட மாற்றம்

எரிமலை வெடிப்பால் ஏற்படும் தூசு மற்றும் காற்று மேகங்கள் இருப்பதால் ஆகாய வழியாக விமானம் பயணிப்பது ஆபத்தானது. விண்ட்ஷீல்ட் தூசு படிந்து  மூடப்பட்டுள்ளது. கூடுதலாக, விமானத்தில் உள்ள பல்வேறு வகையான எதிரே வரும் பொருட்களை அளவிட பயன்படும் சென்சார்கள் எரிமலை தூசியால் மூடப்பட்டுள்ளன. ஒரு விமானத்தின் இயந்திரத்தில் ஒரு தடிமனான தூசு ஏற்பட்டால், அது விமான விபத்தை கூட ஏற்படுத்தும். 2010 இல் ஐஸ்லாந்தில் ஒரு எரிமலை வெடிப்பு 7 மில்லியன் பயணிகளுக்கு 100,000 க்கும் மேற்பட்ட விமானப் பயணங்களை இரத்து செய்ய கட்டாயப்படுத்தியது. இதன் விளைவாக, விமானத்துறை 2.5 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்தது.

 

மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு

இந்த எரிமலைகளிலிருந்து வரும் தூசுகள் பாரிய எரிமலைக் குழம்புகளிலிருந்து வரும் அதே சேதத்தை ஏற்படுத்துகின்றன. பினாட்டுபா எரிமலை வெடித்ததால் பிலிப்பைன்ஸ் 1991 ல் பேரழிவு தரும் சூறாவளியால் தாக்கப்பட்டது. புயலுடன் வந்த தூசு மேகம் மழையுடன் கலந்தது. மழைக்குப் பிறகு, சில வாகனங்கள் மற்றும் வீடுகளில் சிமென்ட் போன்ற தடிமனான தூசுகள் இருந்தன. இந்த எரிமலை வெடிப்புகள் சாலைகள், வீடுகளில் மற்றும் குடிநீரையும் மாசுபடுத்துகின்றன.