மாவீரர்களாக கருதப்படும் பாரிய கொலைகாரர்கள்

 

கதாநாயகனைப் போல போற்றப்படும் எந்தவொரு நபரின் வாழ்க்கையிலும் ஒரு கறுப்புப் பக்கம் இருக்கிறது என்பது பொய்யல்ல. இதுபோன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தத் தேவையில்லை. ஏனென்றால் ஹீரோக்கள் என்றாலும் அவர்கள் சாதாரண மனிதர்கள்தான். ஆனால் சில நேரங்களில் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலைக்கு வழிவகுத்த மக்களை ஹீரோக்களாக நாங்கள் கருதுகிறோம். அவ்வாறானவர்களை பற்றி இன்று பார்ப்போம்.

 

கிறிஸ்டோபர் கொலம்பஸ்

அமெரிக்காவை கண்டுபிடித்தவர் யார் என்று கேட்டால் பல தலைமுறைகளாக கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்றே பதில் வரும். உண்மையான கதை என்னவென்றால், கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை. மேற்கத்தேய படையெடுப்பாளர்களுக்காக அமெரிக்க கண்டத்தை முதலில் காட்டிக்கொடுத்தவரே அவர். இதன் விளைவாக, பல நூற்றாண்டுகள் பழைமையான மாயா, ஆஸ்டெக் மற்றும் இன்கா நாகரிகங்கள் அழிக்கப்பட்டன. இலட்சக்கணக்கான பழங்குடி மக்கள் இறந்தனர். இன்றுவரை, அமெரிக்க கண்டத்தின் உரித்தான மக்கள் தங்கள் உரிமைகளை முறையாகப் பெறமுடியவில்லை.

 

இரண்டாம் கிங் லியோபோல்ட்

கொங்கோவின் ஆட்சியாளரான பெல்ஜியத்தின் மன்னர் லியோபோல்ட், ஆபிரிக்க நாட்டை தனது சொந்த தோட்டத்தை ஆளுவது போல் ஆட்சி செய்தார். அவர் நாட்டின் முழு வளங்களையும் சுரண்டினார் மற்றும் பழங்குடியின மக்களை எந்த ஊதியமும் கொடுக்காமல் அடிமைப்படுத்தினார். அவரது ஆட்சி மிகவும் கோபத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. சில சமயங்களில் இவர்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றாத பூர்வீகர்களின் கைகளைக்கூட வெட்டினர்.

 

வின்ஸ்டன் சர்ச்சில்

நாசிசத்தின் கொடூரமான கையிலிருந்து உலகை விடுவித்த தலைவராக இன்றும் போற்றப்படும் வின்ஸ்டன் சர்ச்சில், இந்த வார்த்தையின் முழுமையான அர்த்தத்தில் ஒரு துரோகி. ஐரோப்பிய மக்களை பாதுகாக்க, இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களின் பட்டினியை போக்கக்கூடிய அளவான உணவுப் பொருட்களை ஐரோப்பாவிற்கு எடுத்துச் சென்றார். இவரது இந்த செயலின் விளைவாக மேற்கு வங்கத்தில் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தனர்.

 

மாவோ சேதுங்

புதிய சீனக் குடியரசின் ஸ்தாபகராக அழியாத நபராக மாறிய மாவோ சேதுங் ஒரு வெற்றிகரமான ஆட்சியாளராக இருந்தார். ஆனால் ஒரு நல்ல ஆட்சியாளராக இருக்கவில்லை. அவரது ஆட்சியில் இலட்சக்கணக்கான சீனர்கள் இறந்தனர். மேலும், அவரது தத்துவத்தின்படி, நிறுவப்பட்ட கூட்டுப் பண்ணைகள் மிகவும் அடக்குமுறை தன்மையைக் கொண்டிருந்தன.

 

ஜோசப் ஸ்டாலின்

வி. ஐ. ஸ்டாலின், லெனினுக்குப் பிறகு சில ஆண்டுகளில் சோவியத் ரஷ்யாவின் ஆட்சியில் வெற்றி பெற்றார். பின்தங்கிய சோவியத் யூனியனை உலக வல்லரசின் நிலைக்கு உயர்த்தினார். ஆனால் அதற்காக, சோவியத் ரஷ்யாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரை பறிகொடுக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக அவர் மேற்கத்திய ஊடகங்களில் ஒரு கொலைகாரன் என்று அழைக்கப்பட்டார். ஆனால் இன்றும் ஒவ்வொரு நாட்டிலும் ஸ்டாலினை ஒரு ஹீரோவாக கருதும் மக்கள் உள்ளனர். ஸ்டாலினின் இந்த அட்டூழியங்களை அவர்கள் தெரிந்தே மறந்து விடுகிறார்கள்.

 

 பராக் ஒபாமா

இந்த பெயரைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம். அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் பராக் ஒபாமாவின் நல்லெண்ணம் குறித்து மேற்கத்தேய ஊடகங்களில் நிறைய பேசப்பட்டன. ஆனால் லிபியாவிற்கு ஜனநாயகத்தை கொண்டு வந்ததாகக் கூறி அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இவர் செய்த பேரழிவு குறித்து எந்த ஊடகமும் பேசவில்லை. கடாபியின் சர்வாதிகாரத்தின் கீழ் வளர்ந்து கொண்டிருந்த லிபியா, இப்போது இடிபாடுகளின் குவியலாக மாறியுள்ளது.

 

ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்

ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷுக்கு நல்ல காரணம் இருந்தது. உலக வர்த்தக மையத்தின் மீதான அல்கொய்தா தாக்குதலுக்கு பதிலடியாக, அவர் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தார். அங்கு அந்த குழு தீவிரமாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது கட்டளையின் கீழ் அமெரிக்க துருப்புக்கள் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறி ஈராக்கிற்கு பறந்து சென்று தாக்கின. இன்று, இதனாலேயே ஈராக் மோதல்களின் மையமாகவும் உள்ளது.