பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் விதம்

 

பிறந்த நாள் என்பது ஒரு வருடத்திற்கு ஒருமுறையே வரும். உலகில் யாருக்கும் இருமுறை பிறந்த நாள் வரப்போவதில்லையே!. அதனாலேயே பெரிய செலவையும் சேர்த்தே தரும் இந்த நாள் மிகவும் ஸ்பெஷல். ஆனால் செலவைத்தரும் நாள் என்று கூறி உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பிறந்தநாளை தவறவிட முடியாது. தங்களுக்கு நெருக்கமான அன்புக்குரியவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட சில சிறந்த வழிகளைப் பற்றி இன்று நாம் பேசப்போகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, எவ்வளவு வயதானாலும், எல்லோரும் தங்கள் பிறந்தநாளுக்காக யாராவது ஏதாவது தர வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, அவ்வறை அதை விரும்புவோருக்கு என்ன ஸ்பெஷலாக செய்வது என்ற யோசனையைப் பெற விரும்பினால், இதைப் படிக்க வேண்டும். மற்றவர்களின் பிறந்தநாளை நீங்கள் அழகாக மாற்றினால், அவர்கள் உங்கள் பிறந்தநாளையும் அழகாக ஆக்குவார்கள் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு இதனை வாசிக்க ஆரம்பிக்கலாம்.

 

Surprise Party

இந்த மாதிரியான சர்ப்ரைஸ் பார்டீஸ் இப்போதெல்லாம் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. இதில் பிறந்தநாள் கொண்டாடுபவருக்கே தெரியாமல் அவரது பிறந்தநாளன்று ஆச்சரியப்படுத்துவது. அவர் அந்த பிறந்தநாளை எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில், கொண்டாடுகிறார். பெரும்பாலான மக்கள் பிறந்தநாளை கொண்டாட இரவு சரியாக 12 மணிக்கு தேர்வு செய்கிறார்கள். அந்த நேரத்தில் தான் எதையும் பொருட்படுத்த்தாமல் சுயநினைவு மறந்து ஆழந்த உறக்கத்தில் இருக்கும் நேரம். இரவு 12 மணியளவில், அவர் விரும்பும் கேக், பரிசு, பலூனை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து படுக்கையில் வைத்து முழு குடும்பத்தோடு ஆச்சரியப்படுத்தலாம். அல்லது நீங்கள் அவருக்காக வீட்டிலோ அல்லது வெளியிலோ ரகசியமாக ஒரு விருந்து ஏற்பாடு செய்து, அவரை ஆச்சரியப்படுத்த கடைசி நிமிடத்தில் அவரை அழைத்துச் செல்லலாம்.

 

Planned Party

இதுவும் ஒரு பழங்கால பார்டியிங் முறை தான். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான ஒழுங்குமுறைகளை அதிகம் பயன்படுத்த ஒரே வழி இதுதான். அதற்கு சில நாட்களுக்கு முன்பு அவருடன் சேர்ந்து ஒரு மீட்டிங் வைத்து அவர் விரும்பும் வகையில் உணவுகளை செய்து, விரும்பும் வாகையில் டெகரேஷன் செய்து, அவர் விரும்புவோர்களை அழைத்து பிறந்தநாள் அன்று அவர் விரும்பும் இடத்தில் ஒரு அழகான சிறிய விருந்து கொடுக்க முடியும். இதில் சர்ப்ரைஸ் என்பது இருக்கவிட்டாலும், பிறந்தநாளில் பிடித்தவர்களுடன் நேரத்தை செலவு செய்ய ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமே !.

 

Day Outing

நெருங்கிய அம்மா, அப்பா, கணவர், மனைவி, குழந்தைகள் அல்லது காதலன், காதலி ஆகியோரின் பிறந்த நாளைக் கொண்டாட இது ஒரு சிறந்த வழியாகும். இதை நண்பர்களுக்கு செய்தாலும் பரவாயில்லை. எப்படியிருந்தாலும், இந்த Day

Outing இரண்டு வழிகளில் செய்யலாம். ஒரு சர்ப்ரைஸாக செல்லவிருக்கும் இடத்தைப் பற்றி அவரிடம் சொல்லாமல் அவரை அங்கே அழைத்துச் செல்லலாம். அல்லது அவர் தனது பிறந்த நாளில் இந்த இடத்தில் செலவு செய்ய வேண்டும் அல்லது ஒரு இடத்திற்கு போக வேண்டும் என்று ஆசைப்படும் இடத்திற்கு அழைத்துச்செல்லலாம். இதனை முடிவெடுப்பது அவரவரது பொறுப்பாகும். எப்படியிருந்தாலும், அவர் தனது குடும்பத்தினருடன் ஒரு சுதந்திரமான சூழலில் நேரத்தை செலவழிக்க விரும்புவார். அங்கு ஒரு சிறிய கேக்கை வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடலாம்.

 

Family Meal

இதுவும் ஒரு குடும்ப உறுப்பினரின் பிறந்தநாளிற்கு செய்யக்கூடியதாகும். குடும்பம் ஒன்றாக பேசி முடிவெடுத்து அவர்கள் விரும்பும் இடத்தில் மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு செல்லலாம். பிஸியான வாழ்க்கையில் எல்லோருடனும் ஒன்றாக அமர்ந்து சாப்பாடு சாப்பிடுவதும் ஒரு மகிழ்ச்சி. பெரிய விஷயங்களுக்கு செலவிட உங்களுக்கு நேரம் அல்லது பணம் இருந்தால் இது ஒரு சிறந்த தீர்வாகும். வெளியே செல்வது கடினம் என்றால், வீட்டிற்குள்ளேயே ஒரு சிறப்பு உணவைக் கொண்டு வந்து கொண்டாடலாம். குறிப்பாக புதிதாக திருமணமான தம்பதியினர் என்றால், வெளியே செல்லலாம் அல்லது வீட்டில் CANDLE LIGHT DINNER போன்ற அழகான மறக்கமுடியாத கொண்டாட்டத்தை நடத்தலாம்.

 

Shopping Day

பெண்கள் தரப்பில் நாம் செய்யக்கூடிய சிறந்த கொண்டாட்டம் இது. இது பெரும்பாலும் கணவன் அல்லது காதலன் தனது மனைவி அல்லது காதலிக்கு செய்யக்கூடியது. ஆனால் இதனை செய்வதற்கு கொஞ்சம் பாக்கெட் கனமாக இருக்க வேண்டும். அத்தோடு அவரது பிறந்த நாளில், அவரை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் சென்று அவர் விரும்புவதை வாங்கிக்கொடுங்கள். ஆனால் பட்ஜெட் பற்றியும் முன்னரே கூறிக்கொள்வது நல்லது.

 

அன்னதானம் / தர்மம்

அம்மா, அப்பா, பாட்டி, தாத்தா போன்ற கொஞ்சம் வயதானவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது சிறந்தது என்றாலும், இது பக்தியுள்ள எவரும் செய்யக்கூடிய ஒன்று. வீட்டில் ஒருவரது பிறந்தநாளுக்காக கொண்டாட முடிந்தால், அத்தோடு அவர்களையும் அழைத்துக்கொண்டு, எளியவர்களுக்கு உதவுவது, வறியவர்களுக்கு உணவு வழங்குவது போன்று புண்ணியமான வேலைகளை செய்யலாம். இதை குழந்தையின் பிறந்தநாளுக்காக இதைச் செய்ய நீங்கள் திட்டமிட்டால், கொண்டாட ஒரு கேக்கை வெட்டவும் மறக்காதீர்கள். ஏனென்றால், அறியாமை காரணமாக சிறிய குழந்தைகள் தானதர்மங்களை விட சிறுசிறு அழகான விஷயங்களை விரும்புகிறார்கள்.