கஞ்சா பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்க வேண்டுமா?

 

புதிய அரசு நியமிக்கப்பட்டவுடன் கஞ்சா பயிர்ச்செய்கை சட்டப்பூர்வமாக்கப்படும் என்று ஒரு வதந்தி பரவியது. இதுகுறித்து ஆராய்ந்து வருவதாக சுதேச மருத்துவ அமைச்சர் தெரிவித்தார். மேலும், புதிய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் முக்கிய பங்கு வகித்த பெங்கமுவே நாலக தேரர், கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஒரு விழாவில் சாதகமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். ஆனால் அது சமூக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பது கர்தினாலின் எண்ணமாக இருந்தது. இருப்பினும், அரசாங்கத்திற்கு கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் எண்ணம் இல்லை என்று பிரதமர் பின்னர் பாராளுமன்றத்தில் கூறினார். அப்படியென்ன உண்டு இந்த கஞ்சாவில்? தொடர்ந்து வாசியுங்கள்.

 

கஞ்சா பற்றிய அடிப்படை

ஒற்றை-தண்டு கொண்ட கஞ்சா மரம் சுமார் இரண்டு அடி முதல் இரண்டு மீட்டர் வரை உயரத்திற்கு வளர்கிறது மற்றும் இது கூம்பு வடிவமாகும். மரங்கள் கொத்து கொத்தாக பூக்கின்றன. ஒவ்வொரு கொத்துக்கும் அருகில் ஒரு மெல்லிய ஒற்றை இலை வெளிப்படுகிறது. கஞ்சா இலைகள் சுமார் 500 இரசாயனங்களைக் கொண்ட ஒரு வகை பசை என்றும் கூறப்படுகிறது. அதற்கும் கூடுதலாக, கஞ்சாவில் 80 தனித்துவமான இரசாயனங்கள் உள்ளன. மத்திய ஆசியாவில் உள்ள அல்தாய் மலைகள் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு சொந்தமானவை.

 

சோம பானம்

சில அறிஞர்கள் பண்டைய இந்திய நூல்களில் “சோம பானம்” என்று கஞ்சாவையே அழைத்ததாக நம்புகிறார்கள். மருந்து மனிதனை கடவுளிடம் நெருங்கச் செய்கிறது என்று அந்த நூல்கள் சொல்கின்றன. பண்டைய ஆயுர்வேத நூல்களில் ஏராளமான கஞ்சா எதிர்ப்பு மருந்துகள்கூட குறிப்பிடப்பட்டுள்ளன.

 

முதல் கடதாசி

சீன நாட்டுப்புறக் கதைகளின்படி, பண்டையக்கால சீனாவில் எழுதுவதற்கு மூங்கில் குச்சிகள் பயன்படுத்தப்பட்டன. சீனர்கள் அதைவிட எடையில் குறைந்த ஒரு இலகுவான தயாரிப்பை விரும்பினர். ஒரு நாள் கஞ்சா மற்றும் மல்பெரி தோல்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு பேஸ்ட், பல நாட்கள் எழுதியதை போலவே அப்படியே இருப்பதை ஒரு மனிதன் கவனித்தான். இவ்வாறு தான் காகிதம் உலகிற்கு வந்தது என்று கூறப்படுகிறது. ஆனால், பெப்பரஸ் என்ற தாவரமே காகித கண்டுபிடிப்பின் மூலம் என இதழியல் வரலாறு கூறுகின்றது.

 

கஞ்சாவின் மூலம் பெறக்கூடிய பிற நன்மைகள்

கஞ்சா விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மற்றும் மா, பலவகையான உணவுகள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தக்கூடியது. கஞ்சாவின் மற்றொரு நன்மை என்னவென்றால், நூலைப் பயன்படுத்தி பல்வேறு ஆடைகளைத் தயாரிக்க இதைப் பயன்படுத்தலாம். கூடுதலாக, கஞ்சா காகிதத்தை மட்டுமல்லாமல், கட்டுவதற்கான பலகைகளையும் தயாரிக்க பயன்படுத்தலாம். கஞ்சா குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட மருத்துவ வல்லுநர்கள் இதில் புற்றுநோயை எதிர்க்கக்கூடிய பண்புகளும் இருப்பதாகக் கூறுகின்றனர்.

 

கஞ்சா ஏன் தடை செய்யப்பட்டது?

கஞ்சாவை தடை செய்வதில் அமெரிக்கா முன்னிலை வகிப்பதாக கருதப்படுகிறது. பல்வேறு செயற்கை மாற்றுகளைப் பயன்படுத்தி, குறைந்த விலையில் காகிதம், மருந்துகள் மற்றும் பெற்றோலிய அடிப்படையிலான ஆடைகளுக்கு புதிய சந்தையை உருவாக்குவதில் முதன்மை விடயமாக கஞ்சா காணப்பட்டதாக  அவர்கள் நம்பினர். இதன் விளைவாக, அவர்கள் இது ஒரு ஆபத்தான மருந்து என்று கூறி கஞ்சாவுக்கு எதிராக ஒரு பாரிய பிரச்சாரத்தை தொடங்கினர். இந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையும் அவர்களுக்கு சார்பாக மாறியது.

 

கஞ்சாவில் உண்மையில் பிரச்சினை உள்ளதா?

கஞ்சா பயன்பாட்டை பாராட்டும் பலர் கூறும் முக்கிய விடயம் என்னவென்றால், கஞ்சா மன செறிவை ஊக்குவிக்கிறது. அந்த விடயம் அடிப்படியில் உண்மைதான். ஆனால் அதையும் தாண்டிய பிரச்சினை என்னவென்றால், கஞ்சா பயன்பாடு மனநோயையும் சில சந்தர்ப்பங்களில் புதுப்புது மன நோய்களையும் அதிகரிக்கச் செய்யும். மேலும், கஞ்சா இளைஞர்களின் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்றும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

 

அப்போது என்னதான் செய்ய வேண்டும்?

கஞ்சாவை எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து சரியான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்ட பின்னரே இலங்கையில் கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். குறிப்பாக, நாம் மேலே குறிப்பிட்ட வகையான ஒரு தயாரிப்பு அல்லாத ஒரு விஷயத்திற்கு கஞ்சா எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பது பற்றிய தெளிவான யோசனை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதை ஆராய்ச்சி செய்து கட்டுப்படுத்த ஒரு நிர்வாகம் நிறுவப்பட வேண்டும் என்றும் நம்புகிறோம்.