புடிங் சாப்பிட்டிருந்தாலும் விதம் விதமாக சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். பிஸ்கட் புடிங், கஸ்டர்ட் புடிங், கேரமல் புடிங் இவற்றையே சாப்பிட்டிருப்பீர்கள். இதனைத் தவிர வேறு புது வகையான, வித்தியாசமான புடிங் வகைகளை சொல்லித்தரப்போகிறோம்.
ஜிஞ்சர் புடிங்
தேவையான பொருட்கள்
- சர்க்கரை – 300 கிராம்
- பால் – 1 கப்
- நறுக்கிய இஞ்சி – 375 கிராம்
- பட்டர் – 250 கிராம்
- வணிலா அசன்ஸ்
- முட்டை மஞ்சள் – கரு 3
- முட்டை வெள்ளைக்கரு – 3
- அரைத்த காய்ந்த தேசிக்காய் தோல் – சிறிதளவு
- முந்திரிப்பழம் – சிறிதளவு
- பால், பட்டர் மற்றும் 150 கிராம் சர்க்கரை சேர்த்து கலக்கவும். இதில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு கலக்கவும்.
- அதிலேயே உலர்திராட்சையும், வெண்ணிலா மற்றும் அரைத்த எழுமிச்சை தோலையும் சேர்த்து மீண்டும் கலக்கவும்.
- வேறாக மூன்று வெள்ளைக்கருக்களுக்கு மீதமுள்ள 150 கிராம் சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலக்கவும். கலந்த புடிங் கலவையை அதில் சிறிது சிறிதாக சேர்த்து, ஒரு முட்கரண்டி கொண்டு கிளறவும்.
- இதை வெண்ணெய் தடவிய புடிங் கோப்பையில் fபொயில் பேப்பர் போட்டு அதில் ஊற்றி 180 c வெப்பநிலையில் 45 நிமிடங்கள் பேக் செய்ய வேண்டும்.
ஒரேஞ் புடிங்
தேவையான பொருட்கள்
- பால் – 1 லீட்டர்
- சர்க்கரை – 1/3 கப்
- சோளமாவு – 1/3 கப் மற்றும் 2 மேசைக்கரண்டி
- ஆரஞ்சு தோல் – 1 மேசைக்கரண்டி
- ஆரஞ்சு சாறு – 500 மில்லி
- அடுப்பில் சிறிது பால் ஊற்றி, சர்க்கரை மற்றும் சோளமா 1/3 கப் சேர்த்து நன்கு கலக்கவும்/ விஸ்க் செய்யவும். சிறிது ஆரஞ்சு தோல் சேர்த்து குறைந்த வெப்பத்தில் கரண்டியால் கிளறவும். அதில் ஆரஞ்சு சாறு 50 மில்லி போடுங்கள். பால் கொதிக்கும் போது, அடுப்பிலிருந்து அகற்றவும்.
- இதை ஒரு பட்டர் தடவிய தட்டில் வைக்கவும். ஆறவிட்டு 2 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
- இப்போது அடுப்பில் ஒரு தனி கிண்ணத்தை வைத்து மீதமுள்ள ஆரஞ்சு சாறு மற்றும் 2 தேக்கரண்டி சோளமாவையும் போட்டு நன்கு கரண்டியால் கிளறி, குறைந்த வெப்பத்தில் கொதிக்கவிடவும். கலவை கெட்டியாகும்போது, அடுப்பிலிருந்து நீக்கி ஆறவிடவும்.
- முன்பு செய்த கலவையுடன் அதன் மேலே லேயர் போல இந்த கலவையை ஊற்றி விடவும், பிறகு 2 மணி நேரம் குளிரூட்டவும்.
பால் புடிங்
தேவையான பொருட்கள்
- சோள மா – மேசைக்கரண்டி 2
- பால் – 500 மில்லி
- சர்க்கரை – 2 மேசைக்கரண்டி
- பட்டர் – 1 மேசைக்கரண்டி
- முட்டை மஞ்சள் கரு – 3
- முட்டை வெள்ளை கரு – 3
- வணிலா அசன்ஸ்
- அடுப்பில் பால் ஊற்றி சூடாக்கவும். சிறிது நேரம் களைத்து அதில் சோளமாவை போட்டு கெட்டியாகாதவாறு கரண்டியால் கிளறவும். பால் கொதிக்கும் போது, அடுப்பிலிருந்து நீக்கவும்.
- கலவையை சிறிது ஆற விடவும், பிறகு அதில் சர்க்கரை மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்கு விஸ்க் செய்யவும்.
- முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு நுரை வரும் வரை அடித்து எடுத்து அதையும் இதில் சேர்த்து கொள்ளவும். பிறகு வணிலாவைச் சேர்த்து, நன்கு கலந்து ஒரு வெண்ணெய் தடவிய தட்டில் வைக்கவும், 180 c வெப்பநிலையில் சுமார் 40 நிமிடங்கள் சுடவும்.
பேரீச்சம்பழ புடிங்
தேவையான பொருட்கள்
- கொட்டை அகற்றிய பேரீச்சம்பழம் – 2 கோப்பை
- பாண் – 3 துண்டுகள்
- முட்டை – 5
- பால் – 1 கப்
- தேன் – 6 மேசைக்கரண்டி
- தேவைக்கேற்ப உப்பு
- பால், முட்டை, தேன், பாண் துண்டுகள் மற்றும் உப்பு ஆகியவற்றை நன்கு சேர்த்து கலக்கவும். நறுக்கிய ஈச்சம் பழங்களை சேர்த்து மீண்டும் கலக்கவும்.
- ஒரு வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் அதை போட்டு வைக்கவும். ஒரு சீட் கொண்டு அதை மூடி 180 C க்கு 40-45 நிமிடங்கள் ஒரு சூடான அடுப்பில் பேக் செய்யவும்.
சொக்கோ மில்க் ஜெல்லி புடிங்
தேவையான பொருட்கள்
- குக்கிங் சொக்கலேட் – 2 கப்
- ஜெலட்டின் – 2 1/2 மேசைக்கரண்டி
- பால் – 2 1/2 கப்
- இளஞ்சூட்டு தண்ணீர் – 1 கப்
- சர்க்கரை – 4 மேசைக்கரண்டி
- ஜெலட்டின் ஒரு கப் இளஞ்சூடான நீரில் கரைக்கவும். ஒரு பாத்திரத்தில் சிறிது பால், சொக்கலேட் மற்றும் சர்க்கரை போட்டு சொக்கலேட் உருகும் வரை சூடாக்கவும்.
- அதில் சிறிது ஜெலட்டின் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் கலக்கவும். ஒரு வெண்ணெய் தடவிய கோப்பையில் போட்டு உலர விடவும். பிறகு பிரிட்ஜில் போட்டு குளிராக வைக்கவும்.