பக்குவமான மனப்பான்மை  கொண்ட மனிதனாக வாழும் வழிகள்

 

ஒரு பக்குவமான மனிதன் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு வழிகளில் விபரிக்கப்படுகின்றான். இந்த கட்டுரையில் நாம் பொதுவாக பக்குவமடைந்த ஒரு மனிதனை, முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களையும், சில குணங்களுடன் முதிர்ச்சியடைந்த ஒரு மனிதனையும் எடுத்துக் கொள்ளலாம். இருபது வயதுகளிலேயே பக்குவமாக நடக்க வேண்டுமானால் கைவிடப்பட வேண்டிய பழக்கவழக்கங்கள் குறித்தும், முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் வாழ்க்கையில் இருக்க வேண்டிய குணங்கள் மற்றும் கொள்கைகள் குறித்தும் நாம் முன்பு கூறியுள்ளோம். சரி. இவை அனைத்தையும் சேர்த்தாலும், ஒரு பக்குவமான நபருக்கு இருக்க வேண்டிய பக்குவமான அணுகுமுறைகள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இன்று உங்களுக்கு தருகின்றோம்.

 

மரியாதை

ஒரு பக்குவமான மனிதன் அனைவராலும் மதிக்கப்படுகிறான் என்பது வெளிப்படையான விடயம். இவ்வாறானவர்கள் பாகுபாடின்றி, அனைவரையும் சமமாக மதிக்கவும் நடத்தவும் தெரிந்திருப்பர். ஒரு பக்குவமான மனிதன் அவமதிப்புக்கும் கேலிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிவான்.  மேலும் விமர்சனத்திற்கும் கருத்திற்கும் இடையிலுள்ள வேறுபாட்டையும் அறிவான். உண்மையில், அதனால்தான் அத்தகைய மனிதர் மற்றவர்களுக்கு மிகவும் மரியாதை செலுத்துகின்றனர்.

 

சரியான தீர்மானம்

பேஸ்புக்கில் பெரும்பான்மையான மக்கள் சிறுசிறு விடயங்களில்கூட பொறுமையின்றி, சரியான கண்ணோட்டம் இன்றி, தர்க்கம் செய்து கொண்டு வாதிடுவதை நாம் பார்க்கிறோம். அவ்வாறானவர்களின் சாதாரண வாழ்க்கை மற்றும் அணுகுமுறையின் ஒரு அம்சம் தான் அது. அத்தகையவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு பிரச்சினைக்கு தீர்வை காண்பதுகூட கடினமான விடயமாக இருக்கும். ஆனால் ஒரு பக்குவமான மனிதன் மிகவும் பொறுமையாகவும் எச்சரிக்கையாகவும் இருந்து, அந்த பிரச்சினையில் உள்ள உண்மைகளை பார்த்து பிரச்சினையின் அனைத்து பக்கங்களையும் சரிபார்த்தே தீர்மானம் எடுப்பான்.

 

வேலையில்லாதவர்கள் பயனற்றவர்கள்!

முதிர்ந்த, பக்குவமான மனப்பான்மை கொண்ட ஒரு ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு நூற்றுக்கணக்கான நண்பர்கள் இருக்க மாட்டார்கள். பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான நபர்களை நண்பர்களாக சேர்த்துக்கொள்ளவும் மாட்டார்கள். ஒரு நபர் உண்மையில் பக்குவமடையும் போது, ​​அவர் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் அவர் நேசிப்பவர்களையும், அவருக்கு நெருக்கமானவர்களையும் தேர்ந்தெடுக்க முயற்சிக்கிறார். தன்னுடைய சொந்த நலனுக்காக உண்மையாக இருக்காத, தன் வாழ்க்கையைப் பற்றி எந்த எண்ணமும் நோக்கமும் இல்லாத, சுயநலத்திற்காகவோ அல்லது சந்தர்ப்பவாதத்திற்காகவோ பயன்படுத்திக் கொள்ளும் நபர்களை தந்து வாழ்விலிருந்து ஒதுக்கி வைக்க முதிர்ச்சியுள்ள பக்குவ மனப்பான்மை கொண்ட ஒரு மனிதன் இருமுறை யோசிப்பதில்லை. அதேபோல எல்லாவற்றிற்கும் தலையாட்டும் நபராக இருப்பதும் இல்லை.

 

பொறுமையாக இருங்கள்

பொறுமை என்பது ஒரு பக்குவமான அணுகுமுறையின் ஒரு அடையாளமாகும் என்று பெரிதாக சொல்லத் தேவையில்லை. ஒரு முதிர்ச்சி பெற்ற மனிதனின் பொறுமை பல இடங்களில் வெளிப்படுகிறது. உதாரணமாக, பொறுமை ஒருவருக்கு பொறுமையாக கேட்கும் திறனை அளிக்கிறது. ஒரு பக்குமான  அணுகுமுறை உங்களை கவனமாகக் கேட்கவும் அதிகம் பேசுவதற்கு பதிலாக, தேவையானதை மட்டுமே பேசவும் அனுமதிக்கிறது.

 

திறந்த மனம்!

ஒரு பக்குவமான நபரின் சிந்தனை தனிப்பட்ட மட்டத்திலோ அல்லது சமூக மட்டத்திலோ இருக்காது. தனது சொந்த நாட்டைத் தாண்டி உலகளவில் சிந்திக்கும் திறன் உள்ளது. அதனால்தான் அத்தகைய நபர் எந்தவொரு பிரச்சினையையும் பற்றி வெளிப்படையாக சிந்திக்கக்கூடிய முதிர்ந்த சிந்தனையையும் அணுகுமுறையையும் பெறுகிறார். அதனால்தான் ஒரு சிக்கலைப் பற்றி பேசும்போது, ​​முதிர்ச்சியடைந்த மனப்பான்மை கொண்ட ஒருவர் முன்னிறுத்தப்படுகிறார். எனவே திறந்த மனது கொண்டவர்கள், மக்கள் முன் வைக்கும் கலாச்சாரம் போன்ற விடயங்களை சரியாக புரிந்து சரியான தீர்வை எடுப்பார்கள். உண்மையில், ஒரு சீரான வழியில் பார்க்கும் திறனை இது உங்களுக்கு வழங்குகிறது.

 

நேர்மறை சிந்தனை!

பொதுவாக நேர்மறையான சிந்தனையை கற்பிக்க சில நிலையங்கள்கூட உள்ளன. அதனால் 30 வயதிற்கு முன்பே ஒரு நபர் வாழ்க்கையையும் விடயங்களையும் சாதகமாக பார்க்க பழகிக்கொள்ள வேண்டும். இந்த நேர்மறையான சிந்தனை என்பது, கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் நன்றாக இருக்கும் என்று எண்ணுவதாக அர்த்தமல்ல. அதுமட்டுமன்றி வாழ்க்கையின் பிரச்சினைகளுடன் அப்படி இருப்பது சாத்தியமற்றது. அதற்கு பதிலாக, எவ்வளவு விரக்தியடைந்தாலும், நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். தேவையான சந்தர்ப்பங்களில் எதிர்மறை எண்ணங்களும் மனப்பான்மையும் இருக்க வேண்டும். அத்தோடு தேவையின் பின்னர் மீண்டும் ஒரு நேர்மறையான அணுகுமுறைக்கு வரவும் வேண்டும்.

 

நேர்மை

நேரடியான தன்மை, நேர்மை, விசுவாசம் மற்றும் நம்பிக்கை ஆகியவை ஒரு பக்குவமான நபரின் தனிச்சிறப்புகளாகும். பொதுவாக, பக்குவ மனப்பான்மை கொண்ட ஒருவர் நேரடியாக பேசுவார். அதற்கு பதிலாக அவர் கடுமையாகவோ அல்லது முரட்டுத்தனமாகவோ பேசுவதில்லை. சுருக்கமாக சொல்வதென்றால், முதிர்ச்சியுள்ள பக்குவ மனப்பான்மை கொண்ட ஒரு மனிதன் நேரடியாக முகத்தின் முன்னால் விடயங்களை பேசினாலும் மக்களை காயப்படுத்துவதில்லை.

 

காரணம் கூறிக்கொண்டு இருக்க வேண்டாம்

எதற்கெடுத்தாலும் காரணம் சொல்வதும் தாழ்வு மனப்பான்மையின் அறிகுறியாகும். மனிதன் என்று பிறந்தாலே தவறுகள், குறைகளை இருக்கலாம். அந்த நேரத்தில் அந்த தவறிலிருந்து விடுபட அல்லது அதற்கான பொறுப்பிலிருந்து விடுபட நாம் பல்வேறு காரணங்களைச் சொல்கிறோம். நம்மில் சிலர் எதுவாக இருந்தாலும், அதற்கு ஏதாவது ஒரு சாக்கை தனது சட்டைப்பைக்குள் வைத்துக்கொண்டே திரிவார்கள். உண்மையில் நீங்கள் இதுபோன்ற சாக்குப்போக்குகளை சொல்பவர்கள் என்றால், தங்கள் செயல்களை நியாயப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு முதிர்ந்த பக்குவமான மனிதன் இந்த விடயத்திற்கு அப்படியே எதிரானவர். அவரது இடத்தில் எந்தவிதமான சாக்குபோக்குகளும் இல்லை. பக்குவமானவர்கள் தங்கள் தவறுகளுக்கு அல்லது குறைகளுக்கு பொறுப்பேற்று, அவற்றை கடந்து வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள்.