கொரோனா காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானங்கள்

 

கொரோனா காலத்தில் எமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது மற்றும் அதை அதிகரிப்பது முக்கியம். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சில பானங்களை பற்றி இன்று அறியத்தருகின்றோம். எங்கள் பாதுகாப்பைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இவை அலுவலகத்திற்குச் செல்லும் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைவருக்கும் முக்கியம். நீங்களும் இதனை தயாரித்து அருந்தி கடுமையான இக்காலகட்டத்தில் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

 

மஞ்சள் இஞ்சி டீ

தேவையான பொருட்கள்

  1. வெட்டிய இஞ்சி – சிறிதளவு
  2. இலவங்கப்பட்டை – சிறிதளவு
  3. கராம்பு – 1/2 தேக்கரண்டி
  4. ஏலக்காய் – 5 விதைகள்
  5. மிளகு – 1 தேக்கரண்டி
  6. மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
  7. நொறுக்கப்பட்ட வெல்லம் – 1 தேக்கரண்டி

 

  • மஞ்சள் மற்றும் வெல்லம் தவிர எல்லாவற்றையும் ஒரு உரலில் போட்டு நன்கு இடிக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் 4 கப் நீர் ஊற்றி இந்த கலவையையும் அதில் போட்டு கலந்து அடுப்பில் வைக்கவும். அதில் மஞ்சள் மற்றும் வெல்லம் சேர்க்கவும். நன்றாகக் கிளறி வடிகட்டி பருகவும்.

 

இஞ்சி துளசி டீ

தேவையான பொருட்கள்

  1. இலவங்கப்பட்டை – 2 இலைகள்
  2. துளசி இலைகள் – 2
  3. நறுக்கிய இஞ்சி – 2 தேக்கரண்டி
  4. இலவங்கப்பட்டை – ஒரு துண்டு
  5. ஏலக்காய் விதைகள் – 3
  6. மிளகு – 1 தேக்கரண்டி
  7. கராம்பு – 1/2 தேக்கரண்டி
  8. தேன் – 1 தேக்கரண்டி

 

  • ஒரு பாத்திரத்தில் 4 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். தேன் தவிர எல்லாவற்றையும் சேர்த்து கிளறி சுமார் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • இப்போது அதை வடித்து ஒரு தேக்கரண்டி தேனுடன் குடிக்கவும்.

 

புதினா தேநீர்

தேவையான பொருட்கள்

  1. சில புதினா இலைகள்
  2. இலவங்கப்பட்டை – ஒரு துண்டு
  3. கராம்பு – 1/2 தேக்கரண்டி
  4. மிளகு – 1/2 தேக்கரண்டி
  5. ஏலக்காய் – விதைகள் 4

 

  • உரலில் புதினா இலைகள், இலவங்கப்பட்டை, கராம்பு, மிளகு மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் 5 கப் நீர் ஊற்றி இந்த கலவையை அதில் போட்டு, அடுப்பில் வைத்து கிளறவும். அது கொதிக்கும் போது, அடுப்பை அணைத்து விட்டு, வடித்து குடிக்கவும்.

 

கிறீன் விட்டமின் ஜூஸ்

 

தேவையான பொருட்கள்

  1. ஆரஞ்சு ஜூஸ் – 1 1/2 கப்
  2. நிவித்தி/ ஸ்பினாச் இலைகள் – 1 கப்
  3. நறுக்கிய வெள்ளரிக்காய் – 1/2 கப்
  4. நறுக்கிய பச்சை நிற ஆப்பிள் – 1
  5. உப்பு – சுவைக்கேற்ப

 

  • பிளெண்டர் கோப்பையில் ஆரஞ்சு ஜூஸ், ஸ்பினாச், வெள்ளரி மற்றும் ஆப்பிள் சேர்த்து கலக்கவும். விரும்பினால் உப்பு சேர்த்து குளிரூட்டியில் வைத்து குடிக்கவும்.

 

மஞ்சள் பால்

 

தேவையான பொருட்கள்

  1. பால் – 2 கப்
  2. மஞ்சள் – 1/2 தேக்கரண்டி
  3. மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
  4. இலவங்கப்பட்டை – ஒரு சிறிய துண்டு
  5. நறுக்கிய இஞ்சி – 1 தேக்கரண்டி
  6. தேங்காய் எண்ணெய் (தேவையென்றால்) – 1 தேக்கரண்டி
  7. தேன் அல்லது மேப்பிள் சிரப் – 1 தேக்கரண்டி

 

  • ஒரு கடாயில் சிறிது பால் ஊற்றி அடுப்பில் வைக்கவும். மஞ்சள் தூள், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை, இஞ்சி, எண்ணெய் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
  • நன்கு வேகும் வரை கரண்டியால் கிளறிவிட்டு அடுப்பை அணைத்து தேனை அதில் ஊற்றி கரைத்து பருகவும்.