வேலையில் கவனம் செலுத்த முடியாமைக்கான காரணங்கள்

 

எம்மில் பெரும்பாலானோர் ஒரு வேலையை செய்ய எடுத்தால் அதை மெதுவாக, அலுப்பாக, வெறுப்பாக, அங்குமிங்கும் இழுத்து இழுத்து செய்து முடிக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக ஒரு வேலையை எடுத்தால் அந்த வேலையை முடிக்காமல், வேறு எந்த வேலையின் மீதும் கவனம் செலுத்தாமல் இருப்பது மிகவும் நல்லது. ஆகவே, உலகமே தடுத்து நின்றாலும் ஜான் விக்கை போல வரும் தடைகளையும் எல்லாம் தாண்டி, தான் முடிக்க வேண்டிய வேலையில் மும்முரமாகவும் முனைப்போடும் செயற்பட்டு முடிக்கும் நபர்கள், தங்கள் வாழ்க்கையில் செய்ய முற்படாத விடயங்களை பற்றி சொல்லி தரப்போகிறோம். இதை வைத்து ஜான் விக்காக மாற முடியாவிட்டாலும் ஒரு சாதாரண விக்காகவாவது மாற முடியுமே!

 

வேலையை ஒத்திவைத்தல்

வேலையை ஒத்தி வைக்கும் பழக்கம் என்பது கவனம் செலுத்தாத ஒரு மனிதன் செய்யக்கூடிய மிகப்பெரிய தவறுகளில் ஒன்றாகும். டைமிங்கை அடிக்கடி தவறவிடும் எங்களைப் போன்றவர்களுக்கு இதுதான் நடக்கும். அதேபோல வேலையைத் தொடங்குவதற்கும் நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் அதிக கவனம் செலுத்தும் ஒரு மனிதன் ஒரு தொழிலைத் தொடங்க நேரம் எடுக்க வேண்டியதில்லை. அவர் ஒரு வேலையைச் செய்ய வேண்டிய நேரம், அதை ஒப்படைக்கத் தொடங்க வேண்டிய நேரம், அவர் வேலைக்குச் செல்ல வேண்டிய நேரம் மற்றும் அவருக்குத் தேவைப்படும்போது அதைத் தொடங்குவதற்கான மன ஆற்றல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது விருப்ப சக்தி / WILL POWER அல்லது உறுதிப்பாடு என்று அழைக்கப்படுகிறது. அது அவ்வளவு கடினமானதல்ல. நாம் செய்ய வேண்டியது எல்லாம் இன்றே செய்து முடித்திடலாம் என்று நினைத்து வேலைக்குச் செல்வது மட்டுமேயாகும்.

 

திட்டம் இல்லை

அதிக கவனம் செலுத்தி வேலை செய்யும் ஒரு மனிதன், கதவை மூடிக்கொண்டு வேலை செய்வதில்லை. வேலையை ஒத்திவைப்பதில்லை, ஒரு மேற்பார்வையும் இல்லாமல் வேலைக்குள் குதிப்பதுமில்லை. முதலாவதாக, எவ்வாறு வேலை செய்யவேண்டும், எப்படி வேலை செய்யவேண்டும் போன்ற எல்லாவற்றையும் திட்டமிடுவது முக்கியமானது. அதேபோல செய்ய வேண்டிய வேலைக்கு தேவையானவற்றை எடுத்து கொண்டு தேவையற்றவை தள்ளி வைத்து விட்டு தான் வேலைக்குள் கவனம் செலுத்தி செய்ய ஆரம்பிக்க வேண்டும். அத்தகைய திட்டத்துடன் பணியாற்றுவதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், எதிர்பாராத தடைகள் காரணமாக நீங்கள் வேலைக்கு நடுவில் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள். அதனால்தான் வேலையில் இருக்கக்கூடிய கவனமும் சிதறடிக்கப்படுவதில்லை.

 

தேவைக்கதிகமாக மல்டி டாஸ்கிங்

பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்வதும் ஒரு நல்ல விடயம் என்பதை பொதுவாக நாம் அறிகிறோம். எனினும், இதில் பல்வேறு விடயங்களும் அடங்கியுள்ளன. வழக்கமாக நாம் செய்யும் தினசரி வேலைகளில் சாதாரண கவனம் மற்றும் மல்டி டாஸ்கிங் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஒரு ஆய்வறிக்கை எழுதுதல், அறிக்கை தயாரித்தல் அல்லது ஒரு புத்தகம் எழுதுதல் போன்ற தீவிரமான பணிகளுக்கு மத்தியில் மல்டி டாஸ்கிங் அதாவது பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முயற்சிப்பது நல்லதல்ல. பல பணிகள் அந்த கூர்மையான கவனத்தை வைத்துக்கொண்டு செய்யவேண்டிய வேலைகளின் அமைப்பையே உடைக்கலாம். எனவே, அதிக கவனம் செலுத்தும் ஒரு மனிதன் தனது வேலையைச் செய்யும்போது பல்பணிகளை செய்யப்போவதில்லை.

உண்மையில், ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் தனது கவனத்தை சிதறடிக்காமல் பலதரப்பட்ட பணிகள் இல்லாமல், தனது முக்கியமான வேலைகளில் அதிக கவனம் செலுத்த முடியும்.

 

கொசிப்பிங்

இதுவும் ஒரு அதிக கூர்மையான கவனம் செலுத்தும் மனிதன் செய்யாத விடயங்களில் முக்கியமான ஒன்று. அதாவது தேவையற்ற விஷயங்களுக்கு நேரத்தை செலவிடக்கூடாது. ஆகவே இது நாம் பழங்காலத்திலிருந்தே கற்றுக் கொண்ட ஒரு விடயம். ஆனால் நாம் அதற்கு மாற்றமாகவே செயற்படுகிறோம். உதாரணமாக ஒருவரை பற்றி மோசமான அல்லது சுருக்கமாக அல்லது அர்த்தமற்ற விடயங்களை பற்றி அலுவலகத்தில் உள்ள ஒருவரிடம் பேச எவ்வளவு நேரம் ஆகும் என்று சற்று யோசித்துப் பாருங்கள். பேஸ்புக்கில் ஒருவரிடம் சாட்டிங் செய்து கொண்டிருப்பதற்கும், ஒரு தலைப்பைப் பற்றி வீணாக வாதிடுவதற்கும், அதிலேயே தொங்கிக்கொண்டிருப்பதற்கும் எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். அதிக கவனம் செலுத்தும் மனிதன் அதை செய்ய மாட்டான். ஏனென்றால், ஒரு விடயத்தில் அதிகம் கவனம் செலுத்தும் ஒருவருக்கு நேரத்தை திரும்பப் பெற முடியாது என்பது நன்றாகவே தெரியும். அதனால்தான் இது போன்ற ஒரு மனிதன் அவற்றில் எவற்றிற்கும் நேரத்தை செலவிடுவதில்லை.

 

கவனச்சிதறல்கள்

அதிக கவனம் செலுத்தும் மனிதனுக்கு கவனச்சிதறல்கள் இருப்பதில்லை. அதாவது, அவரை திசைதிருப்ப முடியாது. அத்தகைய நபர் மேலேயுள்ள உதாரணங்களில் நாம் கூறியவற்றில் நேரத்தை செலவிடுவதில்லை. ஏனென்றால் அவருக்கு நேரத்தின் மதிப்பு தெரியும். மேலும் அது நம்மை நாம் வேலை செய்யும் வழியில் இருந்து திசை திருப்புகிறது. எனவே, அதிக கவனம் செலுத்தும் நபரை எவற்றினாலும் திசைதிருப்ப முடியாது. குறிப்பாக அவர்கள் கூர்மையாக கவனம் செலுத்தும் நேரத்தில், அதாவது தீவிரமாக வேலை செய்யும் போது, ​​அத்தகைய நபரின் தொலைபேசி அழைப்புக்கள் கூட முக்க்கியமாக தெரிவதில்லை. அதேபோல அன்றாட வாழ்க்கையில் கூட அதிக கவனம் செலுத்தும் மனிதன் தேவையற்ற விடயங்களுக்கு கவனம் செலுத்துவதில்லை.

 

மற்றவர்களின் ஒப்புதல்

அதிக கவனம் இல்லாத ஒரு மனிதனுக்கு இன்னொரு பெரிய பிரச்சினை, தன்னைப் பற்றியும் அவனது வேலையைப் பற்றியும் அதிக நம்பிக்கை இல்லாதது தான். அதாவது தன்னம்பிக்கை இல்லாதது ஒரு காரணம். மற்றொரு காரணம் என்னவென்றால், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர்கள் 100% அறிந்திருப்பதில்லை, எனவே அத்தகைய சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளும் நபர் எப்போதும் மற்றவர்களின் ஒப்புதலை எதிர்பார்த்தவாறே இருக்க வேண்டி வரும். அதாவது ஆக்கபூர்வமான படைப்பாற்றல் என்பதல்ல. இன்னொருவர் அவர்கள் செய்த வேலையை நல்லது என்று சான்று வழங்கி உறுதிசெய்யாமல், அவர்களுக்கு வேலையே நடக்காதது போல இவர்கள் உணர்வர்.

ஆனால் அதிக கவனம் செலுத்தும் ஒரு நபர் மற்றவர்களிடமிருந்தும் உலகத்திடமிருந்தும் சரிபார்ப்பு அல்லது ஒப்புதல் பற்றி கவலைப்படுவதில்லை. அவர் தன்னால் முடிந்ததைச் செய்கிறார். தவறாக இருக்கலாம். விமர்சனங்கள் வரலாம். ஆனால் அதிக கவனம் செலுத்தும் ஒரு மனிதன் அந்தத் தவறுகளிலிருந்தும் விமர்சனங்களிலிருந்தும் கற்றுக் கொண்டு, அதற்கு அடுத்த காரியத்தை இன்னும் அதிகமாகச் செய்கிறான். அதைத் தவிர, அதிக கவனம் செலுத்தும் ஒரு மனிதன், வேலையைச் செய்வதற்கு முன்பு மற்றவர்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்தித்து கவலைப்படுவதில்லை. அத்தோடு வருகின்ற விமர்சனம் அவர்கள் மீது செலுத்தப்பட்டாலும், அது பயனுள்ள விமர்சனமாக இல்லையென்றால், அவர்கள் அதைப் பற்றி சிந்திக்கக்கூட நேரம் எடுக்க மாட்டார்கள்!

 

பாதுகாப்பு வளையத்தில் இருக்கவும் மாட்டார்!

அதிக கவனம் இல்லாத ஒரு மனிதன் எப்போதும் தனது ஆறுதல் வளையம் மற்றும் பாதுகாப்பு வரம்புகளுக்குள் இருந்து செயற்படுகிறான். அத்தகையவர்கள் ஒருபோதும் ரிஸ்க் எடுப்பதில்லை. ஆனால் அதிக கவனம் செலுத்தும் ஒரு மனிதன் யாருடைய அனுமதியையும் எதிர்பார்த்திருப்பதில்லை என்று நாங்கள் முன்பு சொன்னோம். அதேபோல திடீரென வேலைக்குள் புகவும் மாட்டார் என்றும் கூறினோம். அதிக கவனம் செலுத்தும் ஒரு மனிதன் ஆபத்தை எதிர்கொள்ளாமல் இருப்பதும் இல்லை. அதேபோல நாளை பற்றியும் அவர்களால் சொல்ல முடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனவே, அதிக கவனம் செலுத்தும் ஒருவர் தனது வேலையை அடைய ஆபத்துக்களை எதிர்கொள்ள தயங்க மாட்டார். ஆனால் அதில் இருக்கும் முக்கிய நன்மைகளுடன், சில குறைபாடுகளையும் அறிந்திருக்க வேண்டும்.