பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ விளையாட்டுக்கள்

 

சிறு குழந்தைகளின் பொழுதுபோக்காகக் கருதப்பட்ட வீடியோ கேம்கள் இப்போது புரட்சிகரமாக்கப்பட்டுள்ளன. இன்று இந்த வீடியோ கேம் விளையாட்டு பல பில்லியன் டொலர் தொழிலாகவும் சில பெரியவர்களுக்கு வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டது. இந்த வீடியோ கேம்ஸ் பொழுதுபோக்காக தோன்றினாலும், வீடியோ கேம் உலகில் வெளிவரும் ஒரு சில வீடியோ கேம்ஸ் அவ்வப்போது சர்ச்சைகளை எதிர்நோக்குகிறது. அவற்றில் சில மிகவும் சர்ச்சைக்குரியவை. இன்று அவ்வாறு வீடியோ கேம் வரலாற்றில் இதுபோன்ற 7 சர்ச்சைக்குரிய மற்றும் தடைசெய்யப்பட்ட விளையாட்டுக்களை பார்ப்போம்.

 

Night Trap

SEGA நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு 1992இல் வெளியிடப்பட்ட “நைட் ட்ராப்” கேம், அந்த சந்தர்ப்பத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த கேம் ஒரு மூவி கேம் வகை விளையாட்டு. இந்த விளையாட்டின் கதாபாத்திரங்கள் உண்மையான நடிகர்களை மையமாக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. விளையாட்டில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்ப எங்களுக்குக் காட்டப்படும் காட்சிகள் முன்பே படமாக்கப்பட்டவை. இந்த விளையாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது ஏனெனில், இது பாலியல் மற்றும் வன்முறையை முன்னிலைப்படுத்தியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த விளையாட்டில் அனைத்து பெண் கதாபாத்திரங்களும் கவர்ச்சியான பெண்கள். இவர்களை துன்புறுத்துவதற்காக வரும் மக்களிடமிருந்து காப்பாற்றுவதே விளையாடுபவரின் டாஸ்க். இருப்பினும், இந்த விளையாட்டு நிர்வாணம், ஆபாச படங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றை உள்ளடக்கியதால் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இதன் விளைவாக, SEGA நிறுவனம் இந்த விளையாட்டை விற்பதை நிறுத்த வேண்டியிருந்தது.

 

Manhunt 2

இந்த விளையாட்டு 2007ஆம் ஆண்டில் பிரபல ரொக்ஸ்டார் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. மிகவும் வன்முறை விளையாட்டாக இருந்த இந்த விளையாட்டில், பைத்தியகாரர்கள் மடத்திலிருந்து தப்பிய இரண்டு பேரை வீரர் வழிநடத்த வேண்டியிருந்தது. இந்த விளையாட்டு வீரர் இருவரையும் கையாளவும், மிகக் கொடூரமான கொலைகளைச் செய்யவும் வேண்டிய டாஸ்க் வழங்கப்படுவதாகவும் இருந்தது. பிரிட்டன் உட்பட பல நாடுகள் இந்த விளையாட்டில் அதிருப்தியை வெளிப்படுத்தி தடை விதித்துள்ளன. எனவே விளையாட்டை உருவாக்கிய ரொக்ஸ்டார் வன்முறையைக் குறைத்து விளையாட்டை மீண்டும் வெளியிட வேண்டியிருந்தது.

 

Ethnic Cleansing

யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள தேசிய கூட்டணியின் இனவெறி அமைப்பால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டின் பெயர் குறிப்பிடுவது போலவே அருவருப்பானது. இது கறுப்பர்கள் மற்றும் யூதர்கள் போன்ற அமெரிக்கரல்லாதவர்களைக் கொல்வதாக வடிவமைக்கப்பட்டது. இறுதியாக, இந்த விளையாட்டில் இஸ்ரேலின் பிரதமரை படுகொலை செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மோசமாக வடிவமைக்கப்பட்ட, குறைந்த தரம் வாய்ந்த விளையாட்டு என்றாலும், அதன் உள்ளடக்கத்திற்காக இது மிகவும் விமர்சிக்கப்படுகிறது.

 

Mortal Kombat

 

மோர்டல் கொம்பாட் என்பது எங்களுக்கு பிடித்த சீரீஸ் மற்றும் வீடியோ கேம்களில் ஒன்றாகும். இந்த வீடியோ கேம் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்கு, பல சக்திகளுடன், ஆனால் சிறிது வன்முறையுடன் வருகிறது. ஏறக்குறைய மூன்று தசாப்தங்களின் வரலாற்றைக் கொண்ட மோட்டல் காம்பாட் 1992இல் வெளியிடப்பட்ட முதல் விளையாட்டு ஆகும். ஒரு சண்டையின் முடிவில் எதிரியைக் கொல்லப் பயன்படுத்தப்படும் முறைகளே இந்த கேமிற்கு எதிரான சர்ச்சை வரக் காரணமாகும். வீடியோ கேம்கள் இளம் குழந்தைகளின் பொழுதுபோக்காக இருந்த நேரத்தில், பெற்றோர்கள் இந்த இரத்தக்களரி வன்முறை வீடியோ கேமை கடுமையாக விமர்சித்தனர்.

 

Bully

BULLYING / கொடுமைப்படுத்துதல் என்பது இன்று உலகில் அதிகம் பேசப்படும் தலைப்புகளில் ஒன்றாகும். ரொக்ஸ்டார் 2006இல் உருவாக்கிய இந்த விளையாட்டும் அது வெளிவந்தபோது நகரத்தின் பேசுபொருளாக மாறியது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் இந்த விளையாட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதை குழந்தைகள் விளையாடுவது ஒரு மோசமான எடுத்துக்காட்டு என்றும் கூறியது, ஏனெனில் இது பள்ளி குழந்தைகள் மத்தியில் வன்முறை மற்றும் பாலியல் செயற்பாடுகளை எடுத்துக்காட்டுகிறது. இருப்பினும், இந்த விளையாட்டு வீடியோ கேம் விமர்சகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Postal 2

POSTAL விளையாட்டுத் தொடர், வன்முறையை மற்றொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் விளையாட்டுத் தொடர். ஆனால் மிகச் சிறந்த விடயம் என்னவென்றால், நீங்கள் எந்த வன்முறையும் இல்லாமல் இந்த விளையாட்டை விளையாடி முடிக்கவும் முடியும். ஆனால் இந்த விளையாட்டை விளையாடிய பெரும்பான்மையானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வன்முறையின் வழியில் சென்றால், விளையாட்டு வீரருக்கு மிகவும் கொடூரமான குற்றங்களைச் செய்ய அனுமதிக்கும். இந்த விளையாட்டு பல நாடுகளில் அதன் முடிவற்ற வன்முறைக்காக தடைசெய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்து இந்த விளையாட்டை வைத்திருப்பவர்களை கைது செய்து அபராதம் விதித்தது.

 

The Guy Game

 

இந்த விளையாட்டு வயது வந்த ஆணிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 2004இல் பிளேஸ்டேஷன் விளையாட்டாக வெளிவந்தது. இந்த விளையாட்டு வீடியோவை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூவி கேம் வகையாகும். பிகினிக்களில் வரும் இளம் பெண்கள் குழுவின் சில கேள்விகள் இங்கே காண்பிக்கப்படும். சிறுமிகள் தங்களுக்கு அளிக்கும் பதில்களைத் தேர்ந்தெடுப்பது விளையாடுவோரின் பொறுப்பாக இருந்தது. இதில் பதில்கள் சரியாக இருந்தால், வீடியோவில் உள்ள பெண்கள் தங்கள் மார்பகங்களை வெளிப்படுத்துவதைக் காண்பிப்பார்கள்.

இருப்பினும், விளையாட்டு வெளியான சிறிது நேரத்திலேயே, ஒரு சட்ட சிக்கல் எழுந்தது. இதற்குக் காரணம், இந்த விளையாட்டின் ஒரு காட்சியில் தோன்றும் ஒரு இளம் பெண், இது ஒரு வீடியோ கேமிற்காக பயன்படுத்தப்படுவது தனக்குத் தெரியாது என்று கூறி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். அந்த நேரத்தில் அவர் ஒரு வயது குறைந்த சிறுமியாக இருந்ததால் இந்த குற்றச்சாட்டு இன்னும் தீவிரமானது. இறுதியில் இந்த விளையாட்டின் தயாரிப்பாளர்கள் விளையாட்டை விநியோகிப்பதை நிறுத்திவிட்டு அந்த பெண்ணின் காட்சிகளை அகற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.