கொரோனா என்பது இந்த நாட்களில் நாம் அடிக்கடி பேசும் ஒரு தலைப்பாக மாறிவிட்டது. நாம் எவ்வளவு பேசினாலும் சுருக்கமாக, இது எமது வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இப்போது நாம் அனைவரும் கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டோம். “வீட்டிலேயே தங்கியிருங்கள், பாதுகாப்பாக இருங்கள்” என்ற கதை எல்லா இடங்களிலும் கேட்கப்படுகிறது. குறிப்பாக சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி நம்மைப் போல வலுவாக இல்லாததை போலவே, அவர்களுக்கு நம்மைப் போல சகிப்புத்தன்மையும் இருப்பதில்லை. எனவே நாம் முடிந்தவரை கவனமாக இருக்க வேண்டும்.
எவ்வளவு சொன்னாலும், அன்றாட தேவைகள் மற்றும் குழந்தைகளின் உடல்நல பிரச்சினைகளுடன் குழந்தைகளை அவ்வப்போது வெளியே அழைத்துச் செல்ல வேண்டிய நேரங்கள் இருக்கலாம். குறைந்தபட்சம் சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி பெற செல்ல வேண்டும். அல்லது பாடசாலை மற்றும் ஆரம்பப்பாடசாலை விடுமுறை நாட்களில் இந்த தொற்றுநோய் பற்றி தெரியாத ஆறு அல்லது நான்கு வயது சிறிய குழந்தைகளுடன் சிக்கிக்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை அறிந்த தாய்மார்களும் தந்தையர்களும் ஏராளம். எனவே பலர் தங்கள் குழந்தைகளை குறைந்தபட்சம் ஓடி ஆடி விளையாடக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார்கள். அத்தகைய நேரத்தில் சிறு குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய விடயங்களைப் பற்றி இன்று நாம் பேசுகிறோம்.
நீங்கள் யாருடன் செல்கிறீர்கள்?
வெளியே செல்வதை பற்றி யோசித்த பிறகு, அடுத்ததாக நாம் யாருடன் செல்கிறோம் என்பது பற்றி சிந்திக்கிறோம். கடந்த காலங்களில் பெரும்பாலும் நண்பர்களுடன் பயணம் செய்திருந்தாலும், இப்போது முடிந்தவரை குடும்பத்தில் ஒரு சிலருடன் மட்டுமே தனியாக பயணம் செய்வது நல்லது. நீங்கள் அடிக்கடி சந்திக்காத நபர்களுடன் பயணம் செய்வது இந்த நாட்களில் ஆபத்தானது. ஏனென்றால், அவர்கள் அறிந்திருக்கக்கூடிய நபர்களிடையே, அவர்கள் செல்லும் வழிகளில் கொரோனாவின் பரவல் இருந்திருக்கக்கூடும். அவற்றின் மூலம் நம்மையும் அந்த ஆபத்தில் ஆழ்த்தும். எனவே வெளியே சென்று பயமின்றி வீடு திரும்ப விரும்பினால் உங்கள் குடும்பத்துடன் மாத்திரம் தனியாக செல்லுங்கள்.
Face Mask/ Face Shield
முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பெரியவர்கள் இதைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் ஒரு சிறிய குழந்தைக்கு முகக்கவசம் போடுவது சிறிது கஷ்டமாக இருக்கும். இன்னும் சிறிது புரிந்துகொள்ளக்கூடிய 3 அல்லது 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மற்ற பெரியவர்களைப் போல முகக்கவசம் அணியவைக்க, டொப்பி அல்லது சொக்கலேட் போன்றவற்றை காட்டி அணியவைக்கலாம். ஆனால் அதுவும் புரியாத அளவிற்கு உள்ள சிறு குழந்தைக்கு முகக்கவசம் போடுவது கடினமான வேலை. அதற்கு அவர்களுக்கு ஒரு faceshield சரியான தீர்வாகப் பயன்படுத்தலாம். இந்த முகம் கவசம் இப்போது பல மருந்தகங்களில் கூட கிடைக்கிறது.
Hand Sanitizer
மேலும், எல்லா நேரங்களிலும் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் கைகளை சுத்தம் செய்யுங்கள். உங்கள் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்ய ஒரு Hand Sanitizer ஐ பையிலேயே வைத்து கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் சொந்தமாக சுத்தம் செய்யத் தெரியாது என்பதனாலும், அடிக்கடி அவர்களின் முகம், வாய் மற்றும் மூக்கைப் பிடிக்கக் கூடும். அதனால் hand sanitizer கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வது நல்லது.
கூட்டம் குறைவாக இருக்கும் இடங்கள்
இந்த விடயம் என்றால் மிகவும் முக்கியமானதும், தவிர்க்க முடியாதபோது வெளியேறும் பயணம் பற்றியதே. எனவே இதுபோன்ற தேவைகளை பூர்த்தி செய்ய கூட்டம் குறைவாக இருக்கும் இடங்களை எப்போதும் தெரிவு செய்யவும். பொதுவாக ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்று மளிகைப் பொருட்களை வாங்கினால், குறைந்த நெரிசலான கடைக்குச் சென்று அங்கு பொருட்களை விரைவாக வாங்கிவிட்டு எடுத்துச் செல்லுங்கள். ஒரு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால், கூட்டம் குறைவாக இருக்கும் இடங்களுக்கும், கூட்டம் குறைவாகவும் இருக்கும் நேரத்திலும் மருத்துவமனையை தெரிவுசெய்யுங்கள். அது போன்ற நெரிசலான இடங்களை முடிந்தவரை தவிர்க்கவும்.
நன்கு இடைவெளி கொண்ட இடங்கள்
வெளியே செல்வதற்கு முன், குழந்தையை எங்கே அழைத்துச்செல்வது என்பதை சரியாக தெரிவு செய்யுங்கள். நெரிசலாக இருக்கும் சிறிய இடங்களுக்கு குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டாம். எனவே அதிக இடைவெளி இருக்கும் இடத்தை தேர்வுசெய்யுங்கள். விளையாட நிறைய இடம் உள்ள விளையாட்டு மைதானம் போல தோற்றமளிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
குழந்தைகள் தொடும் விடயங்கள்
முன்பு குறிப்பிட்டது போல, குழந்தைகளுக்கு நம்மைப் போல சிந்தித்து அபாயத்தை எவ்வாறு குறைப்பது என்று தெரியாது. அவர்கள் பார்ப்பதை எல்லாம் தொடுகிறார்கள். அப்படியே முகத்தையும் தொடுவார்கள். எனவே கைகளை சுத்தம் செய்து, குழந்தை பொதுவான பொருட்களை தொடுவதைக் கவனியுங்கள். குழந்தை மேலும் சிறியவர்களாக இருந்தால், எதையும் தொடக்கூடாது என்பதற்காக அவர்களை உங்களுடனேயே முடிந்தவரை அதிகமாக வைத்திருங்கள். ஓரளவு புரிந்துகொள்ளும் குழந்தைகளுக்கு இந்த விடயங்களை அன்புடன் தொடக்கூடாது என்று கற்றுக் கொடுங்கள்.
போக்குவரத்து மார்க்கம்
குழந்தையை எப்படி அழைத்துச் செல்வது? எந்த வாகனத்தில்? அதைப் பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். சிறு குழந்தைகளை பொது போக்குவரத்திற்கு அழைத்துச் செல்வது இந்த நாட்களில் ஏற்றுக்கொள்ள முடியாதது. முடிந்தவரை உங்கள் சொந்த அல்லது அறிமுகமானவரின் வாகனம் அல்லது குறைந்தபட்சம் ஒரு வாடகை வாகனத்தை பயன்படுத்தவும். அவசர சூழ்நிலைக்கு நீங்கள் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தினாலும், தனிப்பட்ட பயணமாக இருந்தால் சொந்த வாகனத்தில் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் அதிகம் உள்ளனர். அவர்கள் அனைவரும் சுகாதார விதிகளை சரியாக பின்பற்றுவதில்லை.