சீஸ் கேக் என்றாலே அனைவருக்கும் வாய் ஊறும். அதன் விலையும் சற்று அதிகமாகும். ஆகவே, பலருக்கு சீஸ் கேக் வாங்குவதற்கு முடியாவிட்டாலும், சீஸ் கேக் துண்டுகளையாவது வாங்க முடியும். பெரும்பாலும் சீஸ் கேக் துண்டுகளும் சற்று விலை அதிகம். அதன் அலாதியான சுவை காரணமாக, எப்போதாவது வாங்கி சாப்பிடுவோம் அல்லவா? சரி, உங்களுக்கு கேக் செய்ய தெரிந்தால் அதுபற்றிய கவலை வேண்டாம். ஆம், அந்த சுவையான கேக் செய்யும் முறைபற்றி இன்று நாம் உங்களுக்கு சொல்லித்தர போகின்றோம்.
பிலிப்பினோ பேக்ட் மேங்கோ சீஸ் கேக்
தேவையான பொருட்கள்
- நறுக்கிய பழுத்த மாம்பழம் – 1
- கிரீம் சீஸ் – 500 கிராம்
- சர்க்கரை – 250 கிராம்
- கோதுமை மாவு – 30 கிராம்
- முட்டை – 2
- விபின் கிரீம் – 250 ml
- உருகிய வெண்ணெய் – 100 கிராம்
- எலுமிச்சை சாறு – சிறிது
- நொறுக்கப்பட்ட பட்டர் குக்கீஸ் – 120 கிராம்
- நொறுக்கப்பட்ட பிஸ்கட் மற்றும் வெண்ணெய் சேர்த்து கிளறவும். இதை பேக்கிங் தட்டின் அடிப்பகுதியில் வைத்து ஒரு கரண்டியால் தட்டி இறுக்கிக் கொள்ளுங்கள்.
- மாம்பழத்தை துண்டுகளாக வெட்டி ப்ளெண்ட செய்யவும். சர்க்கரை மற்றும் கிரீம் சீஸ் ஆகியவற்றை போட்டு பீட் செய்துகொள்ளுங்கள். இதில் மாம்பழ ப்யூரி சேர்க்கவும்.
- பின்னர் விப்பிங் கிரீம் சேர்த்து தொடர்ந்து பீட் செய்யுங்கள். முட்டைகளையும் ஒவ்வொன்றாக போட்டு. சிறிது கோதுமை மாவோடு சேர்த்து கிளறி இறுதியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- இப்போது இந்த கலவையை பிஸ்கட் லேயருடன் சேர்த்து வாணலியில் வைத்து 180 மணிக்கு ஒரு சூடான அடுப்பில் 40 நிமிடங்கள் சுட வேண்டும்.
ஜேர்மன் சீஸ் கேக்
தேவையான பொருட்கள்
- பட்டர் – 1/2 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- முட்டை – 2
- பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
- கோதுமை மா – 1 கப்
- கிரீம் சீஸ் – 500 கிராம்
- சர்க்கரை – 3/4 கோப்பை
- வெணிலா அசன்ஸ் – சிறிதளவு
- வெணிலா புடிங் மிக்ஸ் – 1 பைக்கட்
- முட்டையின் மஞ்சள் கரு – 2
- பால் – 2 ¼ கப்
- எலுமிச்சை சாறு – 2 மேசைக்கரண்டி
- ஒரு பாத்திரத்தில் 1/2 கப் பட்டர் மற்றும் சர்க்கரை 1/2 கப் சேர்த்து கிளறவும். பேக்கிங் பவுடரை மாவுடன் கலந்து சலித்து எடுக்கவும். பட்டர் சர்க்கரை கலவையில் முட்டைகளை சேர்த்து கிளறவும். அதில் சலித்த மாவையும் சேர்க்கவும். இதனை ஒரு பேக்கிங் பாத்திரத்தில் போடவும்.
- ஒரு தனி கிண்ணத்தில், கிரீம் சீஸ், 3/4 கப் சர்க்கரை மற்றும் புடிங் மிக்ஸ் ஆகியவற்றை ஸ்மூத்தி ஆகும் வரை பீட் செய்யவும். முட்டையின் மஞ்சள் கரு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மீண்டும் கிளறவும்.
- இந்த கலவையை பேக்கிங் பேனில் அடுத்த லேயராக சேர்க்கவும்.
- 175 c வெப்பநிலையில் 45 நிமிடங்களுக்கு ஒரு சூடான அடுப்பில் சுட்டெடுத்துக்கொள்ளவும்.
பேக்ட் சொக்கலேட் கேரமல் சீஸ்கேக்
தேவையான பொருட்கள்
கீழ் லேயருக்கு
- நொறுக்கப்பட்ட பட்டர் குக்கீஸ் – 10-12
- கோகோ தூள் – 1/2 கப்
- சர்க்கரை – 1 கப்
- உருகிய வெண்ணெய் – 3/4 கப்
சீஸ் கலவைக்கு
- சர்க்கரை – 2 கப்
- நீர் – 3/4 கப்
- ஹெவி கிரீம் – 1 1/2 கப்
- நறுக்கிய சொக்கலேட் – 150 கிராம்
- புளிப்பு கிரீம் – 3/4 கப்
- கிரீம் சீஸ் – 250 கிராம்
- முட்டை – 4
- வெணிலா – சிறிதளவு
- பிஸ்கட்டை ஒரு பிளெண்டரில் போட்டு அரைக்கவும். இப்போது உருகிய பட்டர், கோகோ பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து அதில் கலக்கவும். இதை பேனில் கீழ் லேயராக போட்டு ஒரு கரண்டியால் இறுக்கிக் கொள்ளுங்கள்.
- ஒரு தனி கிண்ணத்தில் 2 கப் சர்க்கரை, நீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். குறைந்த வெப்பத்திற்கு சூடேற்றவும், மெதுவாக கேரமல் வரும்போது அடுப்பை அனைத்து விடவும்.
- அதை உலர விட்டுவிட்டு, ஹெவி கிரீம் மற்றும் சொக்கலேட் சேர்த்து சொக்கலேட் உருகும் வரை கிளறவும். சொக்கலேட் உருகும்போது, புளிப்பு கிரீம் சேர்த்து கிளறவும்.
- ஒரு தனி கிண்ணத்தில் சிறிது கிரீம் சீஸ் வைத்து பீட் செய்யவும். நன்கு கிளறி, சொக்கலேட் கேரமல் சேர்க்கவும்.
- முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும். வெணிலா சேர்க்கவும். நன்றாகக் கிளறி, பேக்கிங் பேனில் போடவும். இப்போது இந்த பேனை நீர் நிரப்பிய ஒரு தட்டில் வைத்து 175 சி வெப்பநிலையில் ஒரு சூடான அடுப்பில் சுமார் 50 நிமிடங்கள் சுட வேண்டும்.
கிரீம் சீஸ்கேக்
தேவையான பொருட்கள்
கீழ் லேயரிற்கு
- நொறுக்கப்பட்ட பட்டர் குக்கீஸ் – 10-12
- உருகிய பட்டர் – ¼ கப்
சீஸ் கலவைக்கு
- கிரீம் சீஸ் – 250 கிராம்
- முட்டை – 2
- சர்க்கரை – 3/4 கப்
- வெணிலா – 2 டீஸ்பூன்
- அரைத்த எலுமிச்சை தோல் – சிறிதளவு
மேற்பகுதிக்கு
- குக்கிங் சொக்கலேட் – 100 கிராம்
- நறுக்கிய முந்திரி – ஒரு பிட்
- பால் – 30 மில்லி
- பட்டர் மற்றும் பிஸ்கட் தூள் கலந்து பேக்கிங் தட்டில் கீழ் லேயரில் வைக்கவும்.
- கிரீம் சீஸை ஸ்மூத் ஆகும்வரை கிளறவும். முட்டை மற்றும் வெணிலா சேர்த்து கிளறவும். சிறுது நேரத்தில் அதில் லெமன் தோலையும் சேர்த்துக்கொள்ளவும். நன்கு கலந்து ஒரு பேக்கிங் டிரேயில் வைக்கவும். 170 டிகிரி செல்சியஸில் சூடான அடுப்பில் 30 நிமிடங்கள் சுடவும். பிறகு குளிர்விக்க விடவும்.
- சொக்கலேட்டை டபுல்போயில் செய்து பால் சேர்க்கவும். இந்த கணேச்சை கேக் மீது ஊற்றவும். நறுக்கிய முந்திரியையும் மேலே தூவி விடவும்.