தாடி வளர்ப்பதில் உள்ள தனித்துவமான நன்மைகள் 

 

தாடி வளர்ப்பது தற்போது ஆண்களிடையே ட்ரெண்டிங்காக உருவாகியுள்ளது. தாடி வைத்த ஆண்களிலும் இரண்டு வகையினர் உள்ளன. சிலர் காட்டைப் போல தாடி வளர்க்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் தோற்றத்தை அதிகரிக்க தாடியை பராமரிக்கின்றனர். தாடியின் வகையைப் பொருட்படுத்தாமல், சுத்தமாக தாடியைப் பராமரிப்பதன் ஏழு தனித்துவமான நன்மைகளை இன்று பார்ப்போம்.

 

கவர்ச்சிகரமான தோற்றம்

ஒரு ஆண் அழகாகவும் கவர்ச்சியாகவும் தோற்றமளிக்க தாடி உதவியாக இருக்கும். நல்ல தாடி முகத்தில் உள்ள சில குறைபாடுகளையும் மறைத்து முகத்தில் உள்ள மற்ற சிறந்தவற்றை வெளிப்படுத்தும். தாடியுடன் கூடி வரும் நல்ல தோற்றத்தில் இருக்கும் ஆண்களால் பல பெண்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. பெண்கள் சராசரி அளவை விடக் குறைவாக இருக்கும் தாடி வைத்த ஆண்களால் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், சற்று நீளமான தாடி கொண்ட ஆண்கள் பெண்களை ஈர்க்கும் வாய்ப்பும் அதிகம். இதற்குக் காரணம், அத்தகைய ஆண்கள் ஒரு நல்ல தந்தையைப் போல பாதுகாப்பாக உணர்கிறார்கள். எனவே, திருமண உறவை நாடும் பெண்கள் அதிக தாடியை வளர்த்த ஆண்களிடம் சற்று அதிகமாகவே ஈர்க்கப்படுகிறார்கள்.

 

சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து பாதுகாப்பு

பெரும்பாலான தாடி வைத்த ஆண்களுக்கு இந்த உண்மை தெரியாது. ஆனால் உண்மையில் தாடியை வளர்ப்பது முகத்தின் தோலை சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. இருப்பினும், அந்த அளவிலான பாதுகாப்பு தாடியின் தன்மையுடன் மாறுபடும். 100% இல்லை என்றாலும், தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களை முகத்திலிருந்து எதிர்கொள்வதன் மூலம் சூரியனிடமிருந்து கணிசமான அளவு பாதுகாப்பை தாடி வழங்குகிறது. இதன் விளைவாக, தாடி வளர்க்கும் நபர்களுக்கு தோல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்தும் குறைவு.

 

நேரத்தை மிச்சப்படுத்தும்

இன்று பிஸியான வாழ்க்கையில் அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது. அவற்றில் சிலவற்றை முடிக்க எங்களுக்கு போதிய நேரம் கூட இல்லை. ஆகவே, தாடியை அடிக்கடி ஷேவ் செய்து ஏன் நேரத்தை வீணடிக்கிறீர்கள்? ஷேவ் செய்ய ஒரு நபரின் வாழ்நாளில் சுமார் 5 மாதங்கள் வரை செலவாகின்றதாம். இதே தாடி வளர்ப்பவர் எப்போதாவது தவிர, தாடியை கவனித்துக்கொள்ள அடிக்கடி அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை.

 

முகப்பருவை தடுக்கிறது

முகப்பரு கடுமையான உளவியல் விளைவுகளை ஏற்படுத்தும். ஆண், பெண் இருபாலாருக்கும் இது பொருந்தும். தாடியை வளர்ப்பது சருமத்திற்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது. அடிக்கடி ஷேவிங் செய்வது பாக்டீரியா வளர்ச்சி மற்றும் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். அத்துடன் முகப்பருவை ஏற்படுத்தும். அடிக்கடி ஷேவிங் செய்வதும் முகத்தில் ஏற்கனவே முளைத்த முகப்பருவை மோசமாக்கும். எனவே, தாடியை வளர்ப்பது சருமத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்ல விடயம்.

 

தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது

தாடியை வளர்ப்பது ஒரு மனிதனை கவர்ச்சியாகக் காண்பிக்கும் என்று முன்பே கூறினோம். தனது முகத்தோற்றத்தில் திருப்தி அடைந்த ஒரு நபரின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கிறது. இதற்கு கூடுதலாக, சமீபத்திய ஆராய்ச்சியொன்று, தாடியை வளர்ப்பது ஆண்களுக்கு வலுவான நகைச்சுவை உணர்வைத் தருகிறது என்றும் தாடி வைத்த ஆண்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாகவும் காட்டுகிறது. இந்த தன்னம்பிக்கை வாழ்க்கையில் வெற்றியை நோக்கி நகர ஒரு பெரிய உதவியாக அமையும்.

 

நோய்களிலிருந்து பாதுகாப்பு

தாடியை வளர்ப்பது சருமத்திற்கு மட்டுமல்ல, உடலின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.  ஒருவரின் தாடி உடலிற்கு மேலதிக ஃபில்டராக செயற்படுகிறது. அதாவது, தாடி ஃபில்டரிங் மற்றும் காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா போன்ற பல்வேறு நோய்கள் நம் உடலில் நுழைவதைத் தடுக்கிறது. இது நெஞ்செரிச்சல் மற்றும் தொண்டை புண் போன்ற தொற்றுநோய்களை தடுக்கவும் உதவுகிறது.

 

சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது

தாடியை வளர்ப்பது சருமத்தை தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்களிலிருந்து பாதுகாக்கிறது என்று முன்பே கூறினோம். இந்த பாதுகாப்பு சருமத்தை கருமையாக்குவதையும் தோல் சுருங்குவதையும் தடுக்கிறது. இந்த தாடி சுற்றுச்சூழலின் தூசியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தாடியை வளர்ப்பது முகப்பருவைத் தடுக்கும் என்றும் கூறியுள்ளோம். இதற்கு கூடுதலாக, தாடி சருமத்தின் இயற்கையான எண்ணெய் அடுக்கை பாதுகாக்கிறது. இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது. தாடியை ஷேவிங் செய்வதால் இந்த எண்ணெய் அடுக்கு விரைவாக நீங்குகிறது. இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு, தாடி வைத்தவரின் தோல் ஒப்பீட்டளவில் வயதானதாகவும் சேதத்திற்கு ஆளாகக்கூடியதாகவும் இருப்பதில்லை.