விண்கற்களை எமக்கு கட்டுப்படுத்த முடியுமா?

 

பூமியில் அடையாளம் தெரியாத ஒரு பொருளின் திடீர் வீழ்ச்சி உலக பேரழிவிற்கு காரணம் என கூறப்படுகின்றது. ஒரு சிறிய விண்கல்லாக இருந்தால் அது பூமியின் வளிமண்டலத்திலேயே அழிக்கப்பட்டுவிடும். ஆனால் அது பெரிதாக காணப்பட்டால் பூமியில் பெருமளவான உயிர்கள் அதனால் அழிக்கப்படலாம். இதன் காரணமாக, வானியலாளர்கள் தொடர்ந்து விண்கற்களை கவனித்து, சோதனை செய்து அவற்றின் திடீர் வீழ்ச்சி பற்றி தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றனர்.

 

விண்கல் ஒன்று விழுந்துவிட்டால் என்ன நடக்கும்?

2020 டிசம்பரின் ஆரம்பத்தில் ஜப்பானின் ஹயாபூசா விண்கலம் சிறு கோளில் இருந்து மாதிரி மண்ணை எடுத்துக்கொண்டு பூமியில் தரையிறங்கியது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மக்கள் வானத்தில் விண்கற்கள் நொறுங்கிப் போவதைக் கண்டிருக்கிறார்கள். ஆனால் முதன்முறையாக இந்த ஹயாபூசா விண்கலம் பூமிக்கு வெளியே உள்ள ஒரு விண்கல்லின் மீது இறங்கி அதன் மாதிரிகளை எடுத்துள்ளது. இதன் மூலம், விண்கற்கள் பற்றி இருந்த கருத்து மேலும் புதுப்பிக்கப்பட்டது. இந்த விண்கற்கள் பூமியில் விழுந்தால், அது உலக அழிவையும் ஏற்படுத்தும். எனவே, அபிவிருத்தி அடைந்த நாடுகளில் உள்ள விண்வெளி வீரர்கள் பூமியில் வந்து மோதக்கூடிய சந்தேகத்திற்கிடமான விண்கற்களை தேடி வருகின்றனர்.

 

டைனோசர் அழிவு

பூமியிலிருந்து டைனோசர்கள் அழிந்து போனதற்கு ஒரு முக்கிய காரணம் விண்கல் மோதல் என்றும் கூறப்படுகிறது. 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் எவ்வாறு அழிந்தன என்பது மற்றொரு கேள்வி. பூமியில் வந்து மோதிய பெரிய விண்கல் பூமியில் டைனோசர் சகாப்தத்தின் முழுமையான முடிவை ஏற்படுத்தியிருக்கலாம். அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவில் காணப்படும் டைனோசர் புதைபடிவத்தில் ஒரு மெல்லிய கண்ணாடி அடுக்கு உள்ளது. படிக அடுக்கின் காரணம் சிறுகோள் விபத்தின் தாக்கம் என்று நம்பப்படுகிறது. அந்த நேரத்தில் மோதிய அந்த விண்கல் 12 கிலோமீட்டர் அளவுக்கு பெரியது என்றும் அதன் துண்டுகள் நூறாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் வரை சிதறிக் கிடந்தன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக, இந்த விண்கல் மெக்சிகோ வளைகுடாவில் தரையில் மோதியுள்ளது.

 

ஆபத்தான விண்கற்கள்

விண்கற்கள் அளவில் சிறியவை மற்றும் விண்கற்கள் மழையாக பூமியில் விழுகின்றன. பொதுவாக, பெரிய விண்கற்களாக கருதப்படுபவை 150 மீட்டரை விட பெரியவை. நமது பூமியின் வளிமண்டலத்தினால் அவற்றை சற்று சிதைத்து, ஆபத்தை குறைக்க முடியும். இவை பூமிக்கு வருவதற்கு முன்பு, வியாழன் போன்ற சூரியக்கோளின் ஈர்ப்பு விசையால் இந்த விண்கற்கள் அழிவடைய முடியும்.

 

விண்கற்களை கட்டுப்படுத்தல்

ஆராய்ச்சியாளர்கள், விண்கற்கள் உலகை தாக்குவதற்கு முன்பே அவற்றை பற்றி சோதித்து வருகின்றனர். மேலும் ஒரு விண்கல் துரதிஷ்டவசமாக தாக்கினால் என்ன செய்வது என்றும் பரீட்சித்து வருகின்றனர். அணு ஆயுதங்கள் அல்லது ரொக்கெட்டுக்களை அனுப்பி ஒரு விண்கல்லை அழிப்பது ஒரு வழி. அதன்மூலம் விண்கல் சிதறி அதன் பாதையை மாற்றி பூமிக்கு வரும் பாதையை விட்டு வெளியேறினால் நல்லது. ஆனால் வேகமாக நகரும் இது வெடித்தாலும், மீண்டும் ஒன்றிணையும் ஆபத்து உள்ளது. ஒரு யோசனை என்னவென்றால், வரவிருக்கும் விண்கல்லிற்கு எதிராக ஒரு பெரிய விண்கலத்தை அனுப்புவதும், அதன் மூலம் வழங்கும் சக்தியுடன் விண்கலத்தின் சுற்றுப்பாதையை மாற்றுவதும் ஆகும். அந்த யோசனையை செயற்படுத்தும் அளவிற்கு எமது தொழில்நுட்பம் இன்னும் முன்னேறவில்லை.

 

விண்கற்களில் தாதுக்களை தேடுதல்

மின்னணு தொழில்நுட்ப கருவிகளை உருவாக்குவதற்கு தற்போது முக்கியத்துவம் வாய்ந்த விலைமதிப்பற்ற உலோகங்கள் பூமியின் மேலோட்டத்தில் அரிதாகவே காணப்படுகின்றன. அவை கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை பிரித்தெடுக்க நிறைய செலவாகும். மறுபுறம், பூமியின் கடல் தளத்தில் சில அடிப்படை தாதுக்கள் இருந்தாலும், அவற்றை ஆராய அதிக செலவு செலவு செய்ய வேண்டும். ஆகவே, விண்கற்களின் மூலம் வளமான தாதுக்கள் மற்றும் உலோகங்களை பூமிக்கு கொண்டு வர முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் எவ்வாறு விண்கற்களில் இருந்து அவற்றை பெறுவது? விண்கற்கள் மீது ரொக்கெட்டுகள் மற்றும் தரை விமானங்களை ஏவுவதற்கும் அவற்றை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதற்கும் நிறைய செலவாகிறது. ஆனால் ஸ்பேஸ்-எக்ஸ் போன்ற திட்டங்கள் மூலம் ஒரு சுமை விண்கலத்தை நகர்த்துவதற்கான செலவைக் குறைத்துள்ளன. எனவே, எதிர்காலத்தில் விண்கற்களில் இருந்து தாதுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.

 

பூமிக்கு அருகில் உள்ள விண்கற்கள்

எமது சூரிய மண்டலத்தில் 20,000க்கும் அதிகளவான விண்கற்கள் சுற்றுப்பாதையில் உள்ளன. அவை பூமிக்கு அழிவாக அமையக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு கூடுதலாக, எமது சூரியனிலிருந்து வெளிப்படும் விண்கற்கள் நம்மை அடையக்கூடிய ஆபத்தும் உள்ளது. வானியலாளர்கள் இதையெல்லாம் நன்கு அறிவார்கள். இவற்றை அறிய இராட்சத தொலைநோக்கிகளை உருவாக்க மில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகின்றன. ஆனால் இந்த தொலைநோக்கிகள் மூலம் எதிர்கால விண்கல் அபாயத்தை நாம் அடையாளம் காண முடிந்தது.

 

ஸ்னீக்கி விண்கற்கள் (எதிர்பாராத விதமாக வரக்கூடிய விண்கற்கள்)

2019  ஜூலையில் ஒரு விண்கல் பூமிக்கு அருகில் சென்றது. இது விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்படவில்லை. இது பூமியைத் தாக்கி இருந்தால், அது ஹிரோஷிமா அணு வெடிப்பை விட 30 மடங்கு அதிக சக்தியை வெளியேற்றி இருக்கக்கூடும். இந்த விண்கல் 57 – 130 மீட்டர் அளவுக்கு பெரியதாக இருந்தது. பூமியை தாக்கும் இதுபோன்ற கண்ணுக்குத் தெரியாத விண்கற்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர். 2020 பெப்ரவரியில், ரஷ்யாவில் ஒரு சிறிய விண்கல் தரைமோதியது. இந்த வீழ்ச்சி அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடியையும் சேதப்படுத்தியது.

வேற்றுக்கிரக பொருட்களைப் பற்றி சில ஆய்வுகள் இருந்தாலும், அவற்றைப் பற்றி நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய விண்கற்களால் ஆபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்பது குறித்த திட்டவட்டமான யோசனை எம்மிடம் இன்னும் இல்லை.