பாலங்கள் என்பது எந்த நேரத்திலும் போக்குவரத்தை எளிதாக்கும் ஒரு அமைப்பாகும். எந்த நாட்டிற்கும் இது பொருந்தும். அந்த காலத்தில் கற்பாலங்கள், மரப்பாலங்கள் மற்றும் இரும்பு பாலங்கள் முதல் இன்று வானளவிற்கு ஒன்றன்பின் ஒன்றாக பாலத்தின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. இலங்கையில் கூட, இந்த வகையான பாலங்கள் அனைத்தையும் காணலாம். ஆனால் எத்தனை பாலங்கள் கட்டப்பட்டாலும், பாலம் என்று குறிப்பிடப்பட்டவுடன் சில பாலங்களே எமது நினைவிற்கு வருகின்றன. அவை பெருமளவில் பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் எப்போதும் நினைவில் நிற்கின்றன. இன்று நாம் இலங்கையின் புகழ்பெற்ற சில பாலங்கள் பற்றி பேசப்போகிறோம்.
Nine Arches Bridge
Nine Arches Bridge என்றால் இலங்கையில் தெரியாத ஆட்களே இல்லை. இந்த பாலம் பதுளை மாவட்டத்தின் தெமோதரை பகுதியில் அமைந்துள்ளது. தெமோதர பாலம் என்றும் கூறுவார்கள். கொழும்பிலிருந்து பதுளை வரை செல்லும் ரயில் இந்த Nine Arches Bridge ஐக் கடந்து தான் செல்கிறது. நூறு ஆண்டுகள் பழைமையான தெமோதர பாலத்தின் வரலாறு அழகானது.
இந்த பாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்டது. ரயில்வே கட்டப்படும்போது, இரண்டு மலைகளையும் ஒரு கட்டத்தில் இணைக்க இரும்பு பாலம் கட்ட பொறியாளர்கள் திட்டமிட்டனர். ஆனால் இரும்பு பாலம் இல்லாதபோது, அவர்கள் அவற்றை கட்டுவதற்கு சங்கடப்பட்டனர். ஆனால் அதற்கு தீர்வளிக்கும் விதமாக இந்த கிரானைட் அஸ்திவாரத்தின் மேல் ஒன்பது வளைவுகளுடன் பாலத்தின் வடிவமைப்பை எழுதியவர் அப்புஹாமி என்ற கிராமவாசி. தனது திட்டத்தின்படி இந்த பாலம் கட்டப்பட்டாலும், முதல் ரயில் ஓடும் வரை அப்புஹாமி பாலத்தின் அடியில் படுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. இதன் பின்னர் ஒரு ரயிலை தாங்கும் திறன் பாலத்திற்கு உள்ளதா என்ற பொறியாளர்களின் சந்தேகங்களை நீக்கியது.
கிண்ணியா பாலம்
கிண்ணியா பாலம் இலங்கையின் மிக நீளமான பாலமாகும். இதனால்தான் இந்த பாலம் மிகவும் பிரபலமானது. இதன் நீளம் 396 மீட்டர். கிண்ணியா பாலம் திருகோணமலை மற்றும் கிண்ணியா ஆகிய இரு நகரங்களை ஒரு கலப்பிற்கு மேலாக இணைக்கிறது. இந்த பாலம், நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் எவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
மனம்பிட்டி பாலம்
மனம்பிட்டி பாலம் அதன் நீளத்திற்கு பிரபலமான ஒரு பாலம். கிண்ணியா பாலம் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கையில் மிக நீளமான பாலமாக இருந்தபோதிலும், இப்போது கிண்ணியா பாலத்திற்குப் பிறகு இது இரண்டாவது மிக நீளமான பாலமாக உள்ளது. சரியாக 302 மீட்டர் நீளம் கொண்டது இந்த பாலம். இங்கு இரண்டு பாலங்கள் உள்ளன. அதில் ஒன்று தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் கட்டப்பட்ட இரும்பு பாலம், மற்றது சமீபத்தில் கட்டப்பட்ட பாலம். இந்த மனம்பிட்டி பாலம் மற்றும் நாம் முன்னர் குறிப்பிட்ட ஒன்பது வளைவுகள் கொண்ட Nine Arches Bridge ஆகியவற்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய 50 ரூபாய் நோட்டில் காணலாம்.
கல்லடி பாலம்
“கல்லடி பாலத்தின் அடியில் மீன் பாடுவது” என்பது நன்கு அறியப்பட்ட கதை. இங்கு மீன் உண்மையில் பாடுகிறதா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதைப் பற்றி அழகான கலைப் படைப்புகளில் கேட்கிறோம். இருப்பினும், இந்த பாடும் மீன்கள் வசிக்கும் கல்லடி பாலம் மட்டக்களப்பிலுள்ள கல்லடி பகுதியில் அமைந்துள்ளது. பாலத்தின் உண்மையான பெயர் “லேடி மனிங்” என்றாலும், இந்த பாலம் அதன் எளிமை மற்றும் பிரதேசத்தின் பெயருக்கு பிரபலமானது. 1924 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பாலம் 946 அடி நீளம் கொண்டதாக கூறப்படுகிறது.
போகொட மரப் பாலம்
போகோட மரப் பாலம் ஒரு பிரபலமான மற்றும் தொல்லியல் பழைமைமிக்க வரலாற்று கட்டமைப்பாகும். இந்த மரப் பாலம் 16 ஆம் நூற்றாண்டில் தம்பதெனியவின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த மரப் பாலம் இலங்கையின் பழைமையான மரப் பாலமாக கருதப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால், இந்த பாலத்துடன் மரங்களை இணைக்கும் ஆணிகள் கூட மரத்தால் ஆனவை. பலா மற்றும் கும்புக் மரத்தால் ஆன இந்த பாலத்தில் மர வேலைப்பாடுகளும் அழகிய ஓடுகளால் வேயப்பட்ட கூரையும் உள்ளன.
பரலண்தொட்ட கம்பி பாலம்
இந்த பாலம் சபரகமுவ மாகாணத்தில் தெரனியகல பரலந்தோட்ட என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த பரலந்தோட்ட கம்பி பாலம் தற்போது இலங்கையின் மிக உயரமான கம்பி பாலம் மற்றும் மிக உயரமான ஒற்றைப் பாதை பாலமாக கருதப்படுகிறது. இந்த பாலம் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கட்டப்பட்டது. 90 அடி உயரத்திலும், 210 அடி நீளத்திலும், இந்த பாலத்தின் முக்கிய கேபிள்கள் ஒரு அங்குல மற்றும் ஒன்றரை அங்குல தடிமன் கொண்டவை. அந்த காலத்தில் மலிபோட தோட்டத்திலிருந்து பிரதான சாலைக்கு இறப்பரைக் கொண்டு செல்வதற்காக கட்டப்பட்ட இந்த பாலம் இன்னும் உள்ளூர்வாசிகளால் பயன்படுத்தப்படுகிறது.
சமனல பாலம்
சமனல பாலம் இலங்கையில் மற்றொரு பிரபலமான பாலம். இதன் பெயர் பல கலைப் படைப்புகளில் அடிக்கடி கேட்கப்படுகிறது. சமனல பாலம் காலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பட்டாம்பூச்சியின் இரண்டு சிறகுகளின் விசித்திரமான வடிவம் காரணமாக இந்த பாலம் சமனல பாலம் என்று அழைக்கப்படுகிறது. சமனல பாலம் அதிகளவானோரை கவரும் ஒரு விடயமாக அமைந்துள்ளது.