உலக நாடுகளின் தனித்துவமான தற்காப்பு கலைகள்

 

சண்டை என்பது சில காரணங்களால் இரண்டு நபர்களிடையே ஏற்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் அடி, தடி என கைகலப்பில் முடிவடைவதும் உண்டு. இதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். உலகில் மனித குடியேற்றத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே, பல்வேறு விடயங்களால் மக்கள் இந்த சண்டையின் மீது ஈர்க்கப்பட்டுள்ளனர். அதன் மூலம் ஒவ்வொன்றாக தற்காப்பு கலைகள் உருவாகியுள்ளன. சண்டைப்பயிற்சி என்பது தற்காப்பு, ஆளுமை மேம்பாடு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் பல அம்சங்களுக்கும் உதவுகிறது. அதனால் தான் இன்று இந்த கட்டுரையில் உலகெங்கிலும் உள்ள பிரபலமான தற்காப்பு கலைகள் பற்றி ஒரு சுருக்கமாக பார்க்கவுள்ளோம். பின்னர் ஒரு தனி ஆய்வு சம்பந்தமான கட்டுரையில் விளக்கமாக இந்த தற்காப்பு கலைகள் ஒவ்வொன்றையும் பற்றி மேலும் பேசலாம்.

 

அங்கம்பொர – இலங்கை

அங்கம்பொர என்பது இலங்கைக்கே உரித்தான ஒரு தற்காப்புக்கலை. இந்த பெயர் உலகில் மிகவும் பிரபலமாக இல்லை என்றாலும் இந்த தற்காப்புக் கலையின் தனித்துவத்தின் காரணமாக, இப்போது பலர் அதைப் பற்றி அறியத் தொடங்குகிறார்கள். கிராமப்புறங்களில் மறைந்திருந்த அங்கம்பொர கலை படிப்படியாக வெளிவரும் காலம் தான் இது. இந்த அங்கம்பொர கலை, இராம-இராவணப் போர்களின் காலத்திற்கு முந்தைய மிகப் பழமையான வரலாற்றைக் கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இந்த அங்கம்பொர கலையை கற்பித்தல் மற்றும் கற்றல் இலகுவாக செய்ய முடியாது. இந்த தற்காப்புக் கலையை கற்பிக்க ஒரு தனி பாடசாலை இருந்தது போலவே, அங்கு படித்த மாணவர்களின் சாதி, குலம் போன்ற அனைத்து விபரங்களும் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே கற்பிப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டன. அடித்து உதைப்பதை தவிர, அங்கம்பொரவும் மனதை ஒருமித்து உள்ளடக்கிய ஒரு பெரிய அம்சத்தை உள்ளடக்கியுள்ளது.

 

களரி – இந்தியா

களரி அல்லது களரிபயட்டு என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமான தற்காப்புக் கலை. இந்த தற்காப்புக் கலை கேரள மாநிலத்தில் தோன்றியது. இந்தியாவில் இன்னும் பல தற்காப்புக் கலைகள் இருந்தாலும், களரி இந்தியாவின் மிகப் பழமையான தற்காப்புக் கலைகளில் ஒன்றாகவும், உலகின் மிகப் பழைமையான தற்காப்புக் கலைகளில் ஒன்றாகவும் இன்றும் அறியப்படுகிறது. இந்த தற்காப்புக் கலை இந்து மதம் மற்றும் இந்திய ஆயுர்வேத மற்றும் யோகாசனங்களால் ஈர்க்கப்பட்டுள்ளது. களரி என்ற சொல்லுக்கு போர்க்களம் என்று பொருள். அதாவது, இந்த தற்காப்புக் கலை போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ஒரு தற்காப்புக் கலை என்ற எண்ணத்திலிருந்து களரி என்ற பெயர் உருவானது.

 

கராத்தே – ஜப்பான்

கராத்தே என்பது இலங்கையில் நன்கு அறியப்பட்ட தற்காப்புக் கலை. இது நமது நாட்டின் சொந்த அங்கம்கொர தற்காப்புக் கலையை விடவும் மிகப் பிரபலமானது. இந்த சண்டை முறை ஜப்பானில் தோன்றியது. இந்த தற்காப்புக் கலை, 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியதாக நம்பப்படுகிறது. இது ஜப்பானிய மாநிலமான டோக்கியோவில் தோன்றியது. ஜப்பானில் தோன்றிய கராத்தே இன்று உலகில் மிகவும் பிரபலமான தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். இந்த கலையின் சிறப்பு என்னவென்றால், சண்டைக்கான எந்த ஆயுதங்களும் இல்லாமல் உடலினாலே செய்யப்படுகின்றது.

 

வுஷு – சீனா

வுஷு உலகளவில் மிகவும் பிரபலமான தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். சீனாவில் தோன்றிய இக்கலை, சைனீஸ் குங்ஃபு என்றும் அழைக்கப்படுகிறது. வுஷு என்றால் சீன மொழியில் தற்காப்புக் கலை என்று பொருள். இதனாலே இந்த தற்காப்புக் கலைக்கு வுஷு என்ற பெயர் வந்தது. இதனை வெறுங்கையுடன் மற்றும் சில ஆயுதங்களை பயன்படுத்தியும் செய்யலாம்.

 

டைகொண்டோ- கொரியா

டைகொண்டோ ஒரு கொரியன் ஸ்டைல் தற்காப்புக் கலை. இந்த தற்காப்புக் கலைக்கும் மிக நீண்ட வரலாறு உண்டு. இந்த தற்காப்புக் கலை கி.மு 37 அளவில் கொரியாவில் உள்ள மூன்று போட்டி வம்சங்களிலிருந்து தோன்றியதென கூறப்படுகிறது. டைகொண்டோ இன்று உலகின் மிகவும் பிரபலமான தற்காப்புக் கலைகளில் ஒன்றாகும். டைகொண்டோ என்பது சற்று வித்தியாசமான தற்காப்புக் கலை. இது நாம் முன்னர் குறிப்பிட்ட கராத்தே மற்றும் வுஷு தற்காப்புக் கலைகளை விட சற்று அதிக முரட்டுத்தனம், மனக்கிளர்ச்சி, குதித்தல் மற்றும் தலையில் அறைதல் போன்ற நுட்பங்களை உள்ளடக்கியது.

 

முவாய் தாய் – தாய்லாந்து

முவாய் தாய் அல்லது தாய் குத்துச்சண்டை தாய்லாந்தில் பொதுவானது. ஆனால் இது ஜப்பானிய குத்துச்சண்டையை மிகவும் ஒத்திருக்கிறது. முவாய் தாய், கைகள் மற்றும் முழங்கைகள் உட்பட எட்டு மூட்டுகளைப் பயன்படுத்தி சண்டையிடுவதால் தி ஆர்ட் ஆஃப் எய்ட் லிம்ப்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. முவாய் தாய் என்பது 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகவும் பழைமையான தற்காப்புக் கலையாகும்.

 

கபோயிரா (CAPOEIRA) – பிரேசில்

கபோயிரா என்பது பிரேசிலுக்கு உரித்த தனித்துவமான தற்காப்புக் கலையாகும். இது 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரேசிலில் ஆபிரிக்க அடிமைகளால் கண்டுபிடிக்கப்பட்ட தற்காப்புக் கலை என்று கூறப்படுகிறது. அடிமைகள் மறைந்திருந்த காட்டில் இருந்தே இந்த கபோயிரா தற்காப்புக் கலை அதன் பெயரைப் பெற்றது.