பிரித்தானிய பிரதமர்களை பற்றிய சுவாரஸ்யங்கள்

 

உலகின் நாடாளுமன்ற அமைப்பு கிரேட் பிரிட்டனில் இருந்தே தொடங்கியது. பிரதமர் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியின் தலைவரானார். பிரிட்டிஷ் நாடாளுமன்ற பாரம்பரியத்தை பின்பற்றும் அநேகமாக எல்லா நாடுகளிலும் அரசாங்கத்தின் தலைவர் பெரும்பாலும் பிரதமராகத்தான் இருக்கின்றார். (இலங்கையில், இந்த நிலைமை சற்றே வேறுபட்டது. ஜனாதிபதி தான் இலங்கையில் அரசாங்கத்தின் தலைவர்). இன்று நாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரமாக இருக்கும் பிரதமர்களைப் பற்றி பேசப்போகிறோம்.

 

குடையில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வாளை சுமந்து சென்ற வெலிங்டன் டியூக்

எந்தவொரு நாட்டிலும் ஒரு தலைவரை பாதுகாக்க இன்று பல பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளனர். ஆனால் சில சமயங்களில் அரச தலைவர் தனது சொந்த பாதுகாப்புக்காக ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னாள் பாலஸ்தீனிய தலைவர் யசீர் அரபாத் தன்னுடன் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததாக கூறப்பட்டது. வெலிங்டனின் டியூக்கான ஆர்தர் வெல்ஸ்லி, பிரிட்டனில் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் ஒரு ஹீரோவாக கருதப்படுகிறார். ஏனென்றால் நெப்போலியனின் தோல்விக்கு அவர் அளித்த பங்களிப்பே அதற்குக் காரணம்.

மிக விரைவாக ஆத்திரமடையக்கூடிய மனிதராக கருதப்படும் அவர், பிரிட்டனின் பிரதமரான பின்னரும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சவால் விடுத்ததாக அறியப்படுகிறது. அவர் ஒரு குடையுடன் பாராளுமன்ற வளாகத்தை சுற்றி நடப்பதைப் பார்ப்பது ஒரு பொதுவான காட்சியாக இருந்தது. ஆனால் பலருக்கு தெரியாமல், குடையில் ஒரு வாள் இருந்தது. இந்த குடையைப் பயன்படுத்த வெலிங்டன் டியூக்கிற்கு வாய்ப்பு கிடைத்ததா என்பது இன்னும் அறியப்படாத உண்மை.

 

கிட் கட்டிற்கு பதிலாக வாழைப்பழங்கள்

அந்த நேரத்தில் டோனி பிளேயரின் நிதியமைச்சரான கோர்டன் பிரவுன் அப்போது மிகவும் பிரபலமான அமைச்சர்களில் ஒருவராக இருந்தார். ஆனால் அவர் பிரதமரான பிறகு அவரது புகழ் வேகமாக குறைந்தது. இந்த நேரத்தில் பிரிட்டிஷ் ஊடகங்கள் அவரை பல்வேறு வழிகளில் விமர்சிக்க ஆரம்பித்தன. சில நேரங்களில், அவரது உடல் பருமனை கேலி செய்தார்கள். பிரதமர் கிட்கட் சொக்கலேட் சாப்பிடுவது, குறிப்பாக ஒரு நாளைக்கு நான்கு முறை சாப்பிடுவது அவரது உடல் பருமனுக்கு காரணம் என்று செய்தித்தாள்கள் குறிப்பிட்டன. இதன் விளைவாக, பிரதமர் பின்னர் கிட்கட் சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டு, ஒரு நாளைக்கு ஒன்பது வாழைப்பழங்களை சாப்பிட்டார். செய்தித்தாள்கள் பின்னர் இந்த இரண்டு நடைமுறைகளின் நன்மை தீமைகள் பற்றி நீண்ட கட்டுரைகளை வெளியிடத் தொடங்கின.

 

தட்சரின் தூக்கம்

பிரிட்டிஷ் அரசியலின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் மார்கரெட் தட்சர் ஒரு நாளைக்கு சுமார் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கியுள்ளார். இதில் பிரச்சனை என்னவென்றால், அரசாங்க அதிகாரிகள் பல காரணங்களுக்காக இரவு முழுவதும் அவரிடமிருந்து தொலைபேசி அழைப்புகளைப் பெற்ற வண்ணம் இருந்தனர். மேலும் அவர் பதவியில் இருந்த 11 ஆண்டுகளில், பல அரசாங்க அதிகாரிகள் தங்கள் வாழ்க்கை முறைகளை தட்சரைப் போலவே மாற்றிக்கொண்டனர். அவரது வாரிசான ஜோன் மேஜர் சாதாரண ஆறு மணிநேர தூக்கத்திற்கு பழக்கமாகிவிட்டார், அவருடைய ஆட்சியின் போது தான் ​​அரசாங்க அதிகாரிகள் தங்கள் இயல்பான வாழ்க்கை முறையை சரிசெய்ய தொடங்கினர்.

 

நிர்வாணமான சர்ச்சில்

மற்றொரு முக்கிய பிரிட்டிஷ் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில் இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். அமெரிக்காவின் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் சர்ச்சில் 24 நாட்கள் கழித்தார். யாரும் தங்கள் தனிப்பட்ட அறையில் நிர்வாணமாக இருப்பது பொதுவானது என்றாலும், பல்வேறு நோக்கங்களுக்காக சர்ச்சிலின் அறைக்குச் சென்ற வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு இது ஆச்சரியமாக இருந்தது.

 

வில்லியம் பீட் ஜூனியரின் போர்ட் பானம்

பிரிட்டனின் பிரதமர் வில்லியம் பீட் ஜூனியர் சுமார் 18 ஆண்டுகளாக ஒரு முக்கிய பிரதமராக இருந்து வந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது, ​​பீட் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். மரணத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு நாளைக்கு ஒரு போத்தல் போர்ட் குடிக்குமாறு அவரது மருத்துவர் அறிவுறுத்தினர். (இதனால் நோய்க்கு ஆல்கஹால் பரிந்துரைப்பது 18 ஆம் நூற்றாண்டில் பொதுவானதாகிவிட்டது). போர்ட் பானத்திலிருந்து ஆரோக்கியமாக மாறிய பீட், அவரை குணப்படுத்திய பானத்தை ஒருபோதும் மறக்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஒரு போத்தல் போர்டை குடிப்பது அவரது அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக மாறியது. சில நாட்களில் போத்தல்களின் எண்ணிக்கை ஒருநாளைக்கு மூன்றாக அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

 

 டிஸ்ரேலியின் புகழாரங்கள்

பிரிட்டனின் பிரதமரான யூத வம்சாவளியைச் சேர்ந்த ஒரே பிரதமர் பெஞ்சமின் டிஸ்ரேலி. தனக்கு நெருக்கமானவர்களைப் புகழ்ந்து, அவர்களின் நம்பிக்கையைப் பெற்றதற்காக டிஸ்ரேலி அறியப்பட்டார். அந்த நேரத்தில் இங்கிலாந்தில் பரவிய ஒரு கதை அதற்கு ஒரு சான்று. முன்னாள் பிரதமர்கள் கிளாட்ஸ்டோன் மற்றும் டிஸ்ரேலியுடன் ஒரு பிரபுத்துவ பெண் இரவு விருந்தொன்றில் கலந்து கொண்டார். இது குறித்து தன்னிடம் கேட்டவர்களுக்கு அவர் பின்வரும் பதிலை கூறினார்.  “பிரதமர் கிளாட்ஸ்டோனிடம் பேசியபோது, ​​நான் இங்கிலாந்தின் மிகப் பெரிய மனிதர்களில் ஒருவரிடம் பேசுவதாக உணர்ந்தேன். ஆனால் டிஸ்ரேலியுடன் பேசும்போது, ​​நான் இங்கிலாந்தின் மிகப் பெரிய பெண் என்று நினைக்கிறேன் ”

 

மூன்று அரசர்களுக்கு சேவை செய்த பால்ட்வின்

ஸ்டான்லி பால்ட்வின் ஐக்கிய இராச்சியத்தின் மிக நீண்ட கால பிரதமர் ஆவார். ஆனால் இது பொதுவான வழியில் இருந்து சற்றே மாறுபட்டது. கிங் ஜோர்ஜ் கிங் 1936 இல் இறந்தார். அவருக்குப் பின்னர் அவரது மூத்த மகன் எட்வர்ட் VIII மன்னரானார். ஆனால் லேடி வாலிஸ் சிம்ப்சனின் அன்பினால் அவர் அரியணையை கைவிட முடிவு செய்தார். இதன் விளைவாக, 1936 ஆம் ஆண்டில், எட்வர்ட் VIII இன் இளைய சகோதரர் ஆறாம் கிங் ஜோர்ஜ் மன்னரானார். ஆங்கில முடியாட்சியின் இந்த மாற்றம் இயல்பாகவே நாட்டின் அரசியல் வரலாற்றில் பால்ட்வினை உடைக்க முடியாத சாதனைக்குள் கொண்டுசென்றது.