வீடு வாங்க போகின்றீர்களா? – இதனை படித்துவிட்டுச் செல்லுங்கள்

 

 அழகான, மனதிற்கு அமைதி தரக்கூடிய மற்றும் சொந்தமாக ஒரு சிறிய வீடு இருப்பது பொதுவாக அனைவரதும் எதிர்பார்ப்பாகும். ஆனால் இந்த கனவை நனவாக்குவது ரியல் எஸ்டேட், வீடு கட்டும் பொருட்கள் மற்றும் வாடகை ஆகியவற்றின் அதிக செலவு காரணமாக எளிதான காரியமல்ல. எனவே இந்த எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு வீட்டை கவனமாக கட்ட வேண்டும். ஆனால் கஷ்டப்பட விரும்பாதவர்கள், நேரத்தை செலவு செய்ய முடியாதவர்கள்  கட்டி முடிக்கப்பட்ட வீட்டை வாங்க விரும்புகிறார்கள். இது நினைப்பது போல் எளிதான விடயமல்ல. ஒரு வீட்டை வாங்குவதற்கு முன் நிறைய விடயங்கள் உள்ளன. இந்த தேவை பெரியதாக இருந்தாலும் நாம் வாழக்கூடிய நிலையில் காணப்பட வேண்டும். எனவே வீடொன்றை வாங்குவதற்கு முன் கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றி இன்று பார்க்கவுள்ளோம்.

 

விலை

வீடு வாங்குவதற்கு முன்பு நாம் அனைவரும் சிந்திக்கும் முதல் விடயம் இதுதான். நிச்சயமாக எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். சிக்கலில் விழுந்துவிடாமல் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் ஒரு வீட்டை தேடத் தொடங்குவதற்கு முன்பு விலை பற்றி முடிவு செய்ய வேண்டும். அதாவது, எம்மிடம் உள்ள பணத்திற்குள் வீட்டைப் பார்க்கிறோமா என்பதையும், அந்த பணம் ரொக்கமாக வழங்கப்பட வேண்டுமா அல்லது வங்கிக் கடனூடாக வழங்க வேண்டுமா என்பதுபற்றி முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். இல்லையென்றால் வீடு பார்க்க ஆரம்பித்தவுடன், ஆசைப்பட்டு வீடு வாங்கிய பின், அங்குமிங்குமாக பணத்தையும் பிரட்டி உருட்டி கடன்காரனாக மாறுவது நல்லதல்ல.

மற்றொன்று வீட்டிற்கு கொடுக்கக்கூடிய விலை மதிப்புள்ளதா என்பதை கருத்திற்கொள்வது அவசியம். வீட்டின் அமைவிடம், நிலத்தின் மதிப்பு, வீட்டின் பூச்சு போன்றவற்றைப் பொறுத்து, எவ்வளவு அவசரமாக இருந்தாலும் அது விலை மதிப்புள்ளதா என்பதை நீங்கள் தேடி ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும்.

 

பாதுகாப்பு

ஒன்றுக்கு ஆயிரம் தடவை கவனிக்க வேண்டிய விடயம் இதுவாகும். ஆனாலும் பரவாயில்லை. வீட்டின் பாதுகாப்பு, வீடு கட்டப்பட்ட விதம், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் நிறுவப்பட்ட விதம், சுற்றியுள்ள வீடுகள், சாலைப் பாதுகாப்பு என அனைத்தையும் சரிபார்க்க வேண்டும். ஏனெனில் வீடு வாங்குவது என்பது தலைமுறை தலைமுறையாக குழந்தைகளுக்கு சேர்த்து வாழ்வது போன்றது.

 

அமைவிடம்

அமைவிடம் என்பது வீடு அமைந்துள்ள நிலமாகும். இந்த புள்ளியும் மிக முக்கியமானது. ஏனென்றால் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு ஆளாகக்கூடிய இடமா  என்பது பற்றி பார்க்க வேண்டும். நிலத்தின் இருப்பிடத்தைப் பொறுத்து மழைநீர் போன்றவற்றால் பிரச்சினை ஏற்படுமா என்பது பற்றியும் அவதானம் செலுத்த வேண்டும். அத்தோடு, சுற்றியுள்ள தொழிற்சாலைகள் தேவையற்ற சத்தம் போன்ற சிக்கல்களை ஏற்படுத்துமா? இது வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் அமைந்திருந்துள்ளதா என்பவை பற்றியும் அவதானியுங்கள்.

அத்தோடு அருகில் உள்ள பாடசாலை, வைத்தியசாலை, பிரதான சாலைக்குள்ள தூரம் என்பவற்றை பற்றி சிந்திக்க வேண்டும்.

 

வீட்டின் வடிவமைப்பு மற்றும் வசதிகள்

இது வீட்டுத் திட்டத்தைப் பற்றியது. உங்கள் வீட்டில் இருப்பவர்களின் அளவைப் பொறுத்து,வீடு வசதிகளை கவனிக்க வேண்டும். தேவையான அறைகள், குளியலறை அளவு, சமையலறைக்கான இடம், முற்றம் தேவையென்றால் அதற்கான வசதி, ரூப்டாப், குழந்தைகள் விளையாடும் இடம், உள்ளக பாதுகாப்பு, அதாவது வயதானவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தான பல படிக்கட்டுகள் இருந்தால் அது பற்றி கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் பிற உள்கட்டமைப்புகளும், குழாய் நீர், மின்சாரம் மற்றும் தொலைபேசி வசதிகள், இணைய சமிக்ஞைகள், சூடான நீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகளைக் கண்டறியவும். வாங்கும் நேரத்தில் அல்லது வாங்கியபின் அவற்றை சரிசெய்யும் திறன் உங்களிடம் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

 

சுற்றுச்சூழல்

சுற்றுப்புறங்கள், அருகிலுள்ள வீடுகள், சுற்றியுள்ள வீடுகளின் சுவர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களை சரிபார்க்க வேண்டும். சுற்றியுள்ள மக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை, அக்கம் பக்கம் கேட்டாவது அறிந்துகொள்ளுங்கள். மேலும், நிலத்தின் எல்லையில் நெல் வயல்களும் நீர்வழிகளும் இருந்தால், அவற்றின் விளைவுகள் எவ்வாறாக அமையும் என்பதையும் ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள்.

 

நில உரிமை பத்திரங்கள்

வீடு வாங்கும் எவரும் எப்படியும் பார்ப்பதால் இது மீண்டும் சொல்ல எதுவும் இல்லாத விடயம். ஆனால் நாம் அதை எவ்வளவு பார்த்தாலும், நமக்குத் தெரியாத பல முக்கியமான விடயங்கள் இதில் உள்ளன. வீடு வாங்கும் போது நம்பகமான ஒருவரிடம் வீட்டின் நிலப் பத்திரங்கள் சரியாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். எனவே கணக்கீடுகளைப் பற்றி சிந்திக்காமல் இந்த வேலைக்கான சிறந்த வழக்கறிஞருடன் தொடர்பு கொள்ளுங்கள். மேலும், வங்கிக் கடனை பெறும்போது அவர்களது வட்டி உள்ளிட்ட விடயங்களில் அவதானமாக செயற்படுங்கள்.

 

வீட்டின் வரலாறு

எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் வீட்டின் முன்னைய வரலாற்றை கண்டுபிடிக்க வேண்டும். இந்த வீடு ஏன் விற்கப்படுகிறது, இதற்கு முன் இந்த வீட்டில் ஏதாவது பிரச்சினைகள் இருந்தனவா எனப் பாருங்கள். இந்த வீடுகளுடன் தொடர்புடைய பேய்கள் போன்ற அமானுஷ்ய நிகழ்வுகளைப் பற்றி அறிய வேண்டும். ஏனெனில் இதுபோன்ற காரணங்களுக்காக, திடீரென விற்கப்படும் வீடுகள் இலாபத்தை நினைத்து நிலத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. நீங்கள் அந்த விடயங்களை நம்பவில்லை என்றாலும், பணத்தை செலவழித்து சிக்கலில் சிக்குவதை விட வேறு எங்கும் வீட்டை தேடிப்பார்ப்பது நல்லது.