கொரோனா வைரஸின் தாக்கம் எவ்வளவு கடுமையானது என்பது இப்போது உலகில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும். இதற்கெதிராக இப்போது பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலும் முதன்முறையாக கொவிட் தொற்றுக்கு ஒரு புதிய மூலிகையும் கண்டறியப்பட்டது. அவை ஓரிரு நாட்கள் செய்திகளாக உருவாகிவிட்டு பின்னர் மீண்டும் காணாமல் போனது. இவற்றை தவிர்த்து உலகளாவிய ரீதியிலான தடுப்பூசி மூலம் கொரோனா வைரஸை உலகத்திலிருந்து ஒழிக்க முடியுமா? அதைப் பற்றி இன்று பார்ப்போம்.
உற்பத்தி சிக்கல்கள்
தடுப்பூசி அல்லது மருந்து தயாரிக்க பல்வேறு வகையான இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வாறான பல வேதிப்பொருளைப் பெறுவது எளிதான காரியமல்ல. முதலில் ஆராய்ச்சி செய்து மாதிரி சோதனைகளுக்குத் தேவையான அளவில் ஆயிரக்கணக்கான ஊசிகளை போடுவது சாத்தியமாகும். ஆனால் அதற்கும் அதிகமாக இந்த தடுப்பூசியை உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மற்றும் பில்லியன் கணக்கான அளவிற்கு தயாரிக்க மூலப்பொருளை உற்பத்தி செய்வது ஒரு பிரச்சினையாகும். தடுப்பூசியை உருவாக்க தேவையான தொழில்நுட்பத்தையும் பெரியளவில் உருவாக்க வேண்டும். ஒரு தொழிற்சாலை, விநியோகச் சங்கிலி மற்றும் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான தடுப்பூசிகளை உருவாக்குவது போன்ற சவால்களை கொவிட்- 19 கொண்டுள்ளது.
விநியோக சிக்கல்கள்
கொவிட் 19ஐ கட்டுப்படுத்துவதற்கு முழு உலகத்திற்கும் குறுகிய காலத்தில் தடுப்பூசி போடப்பட வேண்டும். அப்போதுதான் வைரஸை கட்டுப்படுத்த முடியும். எனவே இதற்கு வேகமான பரிமாற்ற ஊடகம் தேவைப்படுகிறது. இப்போதைய உலகம் எங்கும் மிக வேகமாக பொருட்களை அனுப்ப முடியும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. ஆபிரிக்காவின் தொலைதூர கிராமங்கள், இந்தியாவின் இமயமலை மற்றும் மத்திய ஆசியாவின் புறநகர்ப்பகுதிகளுக்கு தடுப்பூசிகளை அனுப்புவது சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் மற்றொரு பெரிய சவாலாகும். கொரோனா ஒரு வருடத்திற்குள் சீனாவிலிருந்து உலகின் ஒவ்வொரு மூலையிலும் பரவியுள்ளது. ஆனால் அதே வேகத்தில் அதற்கான மருந்து உலகின் அனைத்து பகுதிகளையும் அடைய முடியுமா? இதுவும் ஒரு பெரிய சவால்.
மருந்தின் செயற்பாட்டுக் காலம்
நாம் திடீரென்று நாயிடம் கடிபட்டால் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று தடுப்பூசி பெறுகிறோம். தடுப்பூசி பொதுவாக ஒரு நாளைக்கு மூன்று முறை வழங்கப்படுகிறது. அப்படியிருந்தும், அந்த தடுப்பூசியின் வீரியம் சராசரி நபருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மாத்திரமே பயனளிக்கும். அதனால் கொரோனாவிற்காக கண்டுபிடிக்கப்படும் புதிய தடுப்பூசி மக்களை எவ்வளவு காலம் பாதுகாக்கிறது என்பது இன்னும் ஆராய்ச்சிக்குரிய விடயம். பல வெற்றிகரமான தடுப்பூசிகளும் தற்போது இந்த சிக்கலை கொண்டுள்ளன. இந்த தடுப்பூசி அல்லது மருந்து ஒன்றிலிருந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பாதுகாப்புடன் இருக்க முடிந்தால், முழு உலகமும் கொவிட்டை ஒழிக்கும் என்று நம்பலாம். இல்லையெனில், வரக்கூடிய புதிய தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுத்தால், கொவிட்டை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
தேவையான அளவு சேமிப்பதும் அவசர சூழலில் வழங்குவதும்
புதிய ஜெர்மன்-அமெரிக்க தடுப்பூசி 0 செல்ஷியஸிற்கும் குறைவான வெப்பநிலையில் சேமித்து கொண்டு செல்லப்பட வேண்டும். அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் உள்ள போக்குவரத்து சேவைகளுக்கு கூட அந்த நிலையை வழங்குவது ஒரு சவாலாகும். மீன் மற்றும் காய்கறிகளைக் கொண்டு செல்வதற்கு இயல்பான இந்த குறைந்த வெப்பநிலையை பராமரிக்க போக்குவரத்து தீர்வைக் கண்டுபிடிக்க சிறிது காலஅவகாசம் எடுக்கும். போக்குவரத்து மற்றும் சேமிப்பகத்தின் போது தடுப்பூசிக்கு தேவையான சூழலை வழங்குவது தடுப்பூசி எதிர்கொள்ளும் புதிய சவாலாக மாறியுள்ளது.
தடுப்பூசிக்கு பதிலளிக்காத வைரஸின் புதிய விகாரங்கள்
சில காலத்திற்கு முன்பு பெரியம்மை உலகம் முழுவதும் பரவியது. பெரியம்மை நோயை ஒழிக்க பெரியம்மை ஆன்டிபாடிகளைப் பயன்படுத்தி ஒரு பெரியம்மை தடுப்பூசி உருவாக்கப்பட்டது. பெரியம்மை என்பது அம்மை நோய்க்கு என்று வரும்போது இந்த அமைப்பு வேறுபட்டது. கொரோனா வைரஸ்கள் புதிய சூழல்களுக்கு மிகவும் பொருந்தக்கூடியவை மற்றும் அவை பரவுவதற்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. எனவே ஒரு மருந்து அல்லது தடுப்பூசிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் புதிய வகை வைரஸ் மீண்டும் உருவாகும் அபாயம் உள்ளது.
மற்ற நோய்களுக்கு மத்தியில் கொவிட் தடுப்பூசி
இலங்கையில் 100க்கும் மேற்பட்ட இறப்புகள் நாட்பட்ட வேறு நோய்களால் பதிவாகியுள்ளன. நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் மற்றும் நோயெதிர்ப்பு மண்டல கோளாறுகள் உள்ளவர்கள் கொவிட் நோயால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த சில நோய்கள் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் எப்படியும் மருந்து எடுத்துக்கொள்கிறார்கள். நாட்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு புதிய கொவிட் தடுப்பூசி வழங்கப்படும் போது, அதில் உள்ள பக்கவிளைவுகள் என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும். ஒரு புதிய தடுப்பூசி வரும்போது நோயாளியின் ஒவ்வொரு வகை மருந்துகளின் விளைவுகளையும் தீர்மானிக்க புதிய ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
பல மருந்துகள், ஒரே நோய்
கொவிட்டிற்கான பல தடுப்பூசிகள் ஏற்கனவே சீனா, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவிலிருந்து வெளியிடப்பட்டுள்ளன. ஆராய்ச்சி நிலை தடுப்பூசிகள் மற்றும் மூலிகைகள் பல உள்ளன. எனவே இவற்றுக்கு இடையிலான போட்டி மிகப்பெரியது. சீனாவும் அமெரிக்காவும் தற்போது உலக சுகாதார நிறுவனத்துடன் பெரிய ஒப்பந்தங்களைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் கொவிட் நிலைமை அமைதி அடையும் போது, முழு உலகமும் முன்பு போலவே மீண்டும் ஆரம்ப நிலைக்கு திரும்ப விரும்புகிறது. எனவே வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு நிலைமைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளிலிருந்து என்ன வகையான நோய் எதிர்ப்பு சக்தி வருகிறது என்பதை அறிவதும் ஒரு சவாலாகும்.
சவால்களை எதிர்கொள்ளும் விடாமுயற்சியின் தரம் உலகளவில் 9 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பரவியுள்ளது. எனவே இன்று கொவிட் என்று அழைக்கப்படும் நிலைமை மனிதனுக்கு ஒரு சவாலாகிவிட்டது. ஆனால் விரைவில் நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அதற்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கும்.