ஒன்லைனில் பணம் சம்பாதிக்கக்கூடிய வலைத்தளங்கள்

 

கொரோனா காலத்தில் வெளியில் சென்று வேலைசெய்வது பெரும்பாலும் குறைவடைந்து ஒன்லைனில் பணம் சம்பாதி்ககும் வழியை பலர் தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமையுமென நம்புகின்றோம். தொழிநுட்பத்துடன் இணைந்து எல்லாம் நடக்கும் இந்த உலகில், காலையிலிருந்து மாலை வரை வெளியே சென்று ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு உழைக்கும் நம் அனைவருக்கும் தெரிந்த பாரம்பரிய முறைக்கு மேலதிகமாக, இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் பணம் சம்பாதிக்கவும் வேலை செய்யவும் முடியும் என்பது பலருக்கு இன்னும் தெரியாது. இதைக் கொண்டு ஒரு பெரிய வேலையைச் செய்யத் தெரிந்த ஒரு சிலர் இருக்கும் அதே சந்தர்ப்பத்தில், ​​இதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ளவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். உங்களிடம் ஒரு கணினி அல்லது ஸ்மார்ட் ஃபோனுடன் இணைய இணைப்பு இருந்தால், வீட்டிலேயே உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம்.

ஒன்லைன் வேலை என்பது Graphic Designing, Content Writing, Data Entry, Resume Writing, Accounting போன்ற விடயங்களை போலவே, நாங்கள் ஒருபோதும் நினைக்காத உணவு வகைகளின் சமையல் குறிப்பு, வீடியோக்கள் ஆகியனவும் தேவையாகவே உள்ளன. எனவே இதில் உங்களுக்கு ஏற்ற ஒரு வேலையைத் தேட முயற்சிப்பதில் எந்த நஷ்டமும் இல்லை. அதேபோல வெறுமனே இருந்து ஒன்லைனில் சம்பாதிக்க நினைப்பதும் முடியாத காரியம் என்பதை தெரியப்படுத்தவும் வேண்டும்.

 

Fiverr

ஃபைவர் என்பது ஒன்லைன் வேலை செய்யக்கூடியவர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு வலைத்தளமாகும். பொதுவாக எமது பாஷையில் கூறுவதென்றால் ஒன்லைன் ஃப்ரீலான்சிங் சைட் என்றும் கூறலாம். இது இஸ்ரேலிய வலைத்தளம். இந்த வலைத்தளம் அதிகாரபூர்வமாக 2010ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஏதாவது வேலையை செய்ய விரும்புவோர் மற்றும் வேலையை செய்ய விரும்புவோர் ஆகிய இருதரப்பினரையும் இணைக்கக்கூடிய வலைத்தளமாகும். இருவரையும் சந்திக்க வைப்பதே இந்த தளத்தின் பங்கு. தொடர்புடைய ஃப்ரீலான்ஸர் தான் இங்கு ஒரு வேலையை பெறக்கூடிய நபர். அவர் செய்யும் வேலையைப் பற்றி அவர் GIG ஒன்றை உருவாக்கி பதிவிடுவதன் மூலம் அவரே வேலை ஒன்றை உருவாக்குகிறார்.

 

Upwork

ஒன்லைன் வேலைகளில் இது மிகவும் பிரபலமான அடுத்த வலைத்தளம் இதுவாகும். அப்வொர்க் என்பதும் ஃபிவர்ர் வலைத்தளத்தினை போலவே இரு தரப்பினரை சந்திக்கவைக்கும் ஒரு வலைத்தளம். ஆனால் இது ஃபிவர்ர் போன்ற GIG  அமைப்பு அல்ல. வேலை தேடுபவருக்கு நேரடியாக விண்ணப்பித்து ஒரு நல்ல திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வேலை பெறுவதற்கான வழி இதன் மூலாம் கிடைக்கிறது. இந்த தளம் ஒரு அமெரிக்க வலைத்தளம். எலான்ஸ் (Elance) மற்றும் ஓடெஸ்க் (oDesk) எனப்படும் இரண்டு பழைய வலைத்தளங்களை இணைத்ததன் மூலம் இந்த வலைத்தளம் 2015ஆம் ஆண்டில் புதிய பெயரில் அப்வொர்க்காக வெளியிடப்பட்டது.

 

Freelancer

ஃப்ரீலான்ஸர் மிகவும் பிரபலமான ஒன்லைன் வேலைத்தளம். முந்தைய இரண்டு வலைத்தளங்களை விட இந்த தளம் மிகவும் எளிதான முறையைக் கொண்டுள்ளது. முன்பு கூறியதை போலவே, இந்த தளமும் இருதரப்பினரை இணைக்கும் ஒரு முறையைப் பின்பற்றுகிறது. ஆனால் இங்கு ஏலம் விடுவதன் மூலம் எளிதாக ஒரு வேலையைப் பெற முடியும். இது 2009இல் தொடங்கப்பட்ட ஒரு அவுஸ்திரேலிய வலைத்தளமாகும்.

 

Guru

Guru.com என்பது கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் 1999இல் நிறுவப்பட்ட வலைத்தளம். முன்னர் குறிப்பிட்ட மற்ற வலைத்தளங்களை விட இது சற்று பழையது. மேற்கூறிய வலைத்தளமான freelancer.com ஐப் போலவே இந்த குரு வலைத்தளமும் எளிதான முறையைப் பின்பற்றுகிறது. பிரபலத்தை பொறுத்தவரை, முன்னர் குறிப்பிட்ட மூன்று வலைத்தளங்களை போல அவ்வளவாக அறியப்படவில்லை. ஆனால் நீங்கள் இந்த வலைத்தளத்துடன் தொடர்புடையவராக இருந்தால் செய்ய வேண்டிய வேலைக்கு பஞ்சமில்லை.

 

PeoplePerHour

பீப்பிள் பெர்ஹோர் என்பது ஐக்கிய இராச்சியத்தில் 2007இல் தொடங்கப்பட்ட ஒரு வலைத்தளம். உலகில் இது அதிகம் அறியப்படவில்லை என்றாலும், இது இங்கிலாந்தில் நம்பர் 1 ஃப்ரீலான்ஸ் அல்லது ஒன்லைன் வேலை வலைத்தளம். ஆனால் முன்னர் குறிப்பிட்டபடி, இது உலகின் எந்த நாட்டிலும் உள்ள யாருடனும் நீங்கள் பணியாற்றக்கூடிய ஒரு வலைத்தளம். மேற்கூறிய வலைத்தளங்களில் இருக்கும் உயர் மட்ட அளவிலான போட்டியைப் பற்றி சிந்திக்கும் எவரும் இந்த குறைவாக அறியப்பட்ட வலைத்தளங்களுடன் வேலையில் ஈடுபட முயற்சி செய்யலாம்.

 

FlexJobs

ஃப்ளெக்ஸ்ஜோப்ஸ் என்பது 2007இல் தொடங்கப்பட்ட ஒரு வலைத்தளம். முந்தைய வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்ட ஒன்லைன் பணிகளுக்கு மேலதிகமாக, அதாவது இருவரையும் ஒன்லைனில் சந்தித்து வேலைகளைச் செய்வதோடு இந்த வலைத்தளம் அதன் உறுப்பினர்களுக்கு பல்வேறு சேமிப்பு, முதலீடுகள் மற்றும் வீடியோ வழிகளிலான படிப்புகளையும் வழங்குகிறது. எனவே, இந்த வலைத்தளம் மேற்கூறிய வலைத்தளங்களை விட சற்று வித்தியாசமாக செயற்படும் வலைத்தளம் என்றும் விபரிக்கலாம். நீங்கள் ஒன்லைனில் வேலை தேடுகிறீர்கள் என்றால் இது கட்டாயம் பார்க்க வேண்டிய வலைத்தளமாகும்.

 

WriterAccess

ரைட்டர்அக்சஸ் ஒரு ஒன்லைன் ஃப்ரீலான்சிங் வலைத்தளம். ஆனால் முன்னர் குறிப்பிட்ட அனைத்து வலைத்தளங்களையும் போலல்லாமல், இது எழுத்தாளர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பை தரும் வலைத்தளம். இது எழுதுவதாக மாத்திரமே இருந்தாலும், வேலையில் ஈடுபட சிறந்த வலைத்தளங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனென்றால் மற்ற தளங்கள் ஒரு பெரிய வரம்பில் கவனம் செலுத்துகையில், இந்த தளம் ஒரே ஒரு பணியில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. எனவே இந்த தளத்துடன் தொடர்புடைய நிறைய வேலைத்தளங்களை நீங்கள் காணலாம்.