கொவிட் ஏற்படுத்தும் தனிமை மற்றும் பதட்டத்திலிருந்து விடுபடுவோம்

 

கொவிட் காலத்தில் பலர் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். மன ஆரோக்கியத்தை சமநிலையில் வைத்திருப்பது இன்று உலகிற்கு சவாலாக காணப்படுகின்றது. எனவே, அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் தனிமையை போக்கி மனரீதியாக ஆரோக்கியமாக வைத்திருக்க சில குறிப்புகளை உங்களுக்காக கொண்டுவந்துள்ளோம்.

 

செய்தி பார்ப்பதை கட்டுப்படுத்துங்கள்

செய்திகளைப் பார்ப்பது நாட்டிலும் உலகிலும் உள்ள அனைத்து குப்பைகளையும் நம் வாழ்க்கைக்குள் கொண்டு செல்வதற்கான ஒரு வழியாகும். செய்தி இல்லாமலும் நாம் எதுவும் செய்ய முடியாது. நாட்டில் உள்ள விடயங்களை அறிய எங்களுக்கு செய்தி கட்டாயம் தேவை. ஆனால் அடிக்கடி செய்திகளைப் பார்ப்பது பழகுவது கூடுதல் தொல்லையாகவும் மாறலாம். அதற்கும் கூடுதலாக, கொவிட்- 19இன் இந்த சிக்கலான நிலைமை காரணமாக இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் புள்ளிவிபரங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டின் மற்றும் உலகின் பொருளாதார, சமூக சூழல் மோசமடைந்து வருகிறது. எனவே, மிக முக்கியமான காரணத்திற்காக ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செய்திகளைப் பார்ப்பது நமது மன ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

 

நெருக்கமானவர்களுடன் ன்லைன் உறவை அதிகரித்தல்

இந்த நாட்களில் புதிதாக அறிமுகமானவர்களை ஒன்லைனில் உருவாக்குவது எளிதானது. ஆனால் எமது குறைபாடுகளையும் ஒவ்வொரு நாளும் நம்மை பற்றி நன்கு தெரிந்தவர்களுடன் ஒன்லைனில் தொடர்பு கொள்ள முடிந்தால் மனச்சோர்வு பெரும்பாலும் குறையும். நீண்ட காலமாக எங்களை அறிந்தவர்களுக்கு எங்களுடன் எவ்வாறு இணைவது எப்படி என்று தெரியும். எங்கள் தேவைகளை விருப்பு வெறுப்புக்களை அறிந்து செயற்படுவார்கள். இதைத் தாண்டி புதிய உறவுகளுக்குச் செல்வது பெரிய விடயமல்ல. ஆனால் நாம் மகிழ்ச்சியாக அல்லது துயரத்தில் இருக்கும்போது ஒன்லைனில் நம் நெருங்கிய உறவினர்களுடனும் நெருங்கிய நண்பர்களுடனும் நெருக்கமாக இருப்பது இந்த நாட்களில் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.

 

முடிந்தவரை சுகாதார பரிந்துரைகளை பின்பற்றவும்

எமக்கு அல்லது நாம் நேசிப்பவருக்கு இந்த நோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டாலே, நாம் சற்று மனம் தளர்ந்து சோர்வடைந்து விடுகிறோம். அதற்கு பதிலாக நோய்வாய்ப்படும் சூழ்நிலைக்கு ஏற்ற வாய்ப்புகளை நாம் குறைக்க வேண்டும். கொவிட் 19 சுகாதார பழக்கங்களான முகக்கவசம், அடிக்கடி கைகளை கழுவுதல், ஒரு மீட்டர் தூரத்தை பேணுதல் போன்றவை இப்போது நமக்கு மனப்பாடமாக அமைந்துள்ளன. ஆனால் அவற்றை உண்மையில் பினபற்றுகிறோமா என்றால், பெரும்பாலும் இல்லை என்றே கூற வேண்டும். அதனால் அவற்றை தவறாது பின்பற்றுவதும் நோய்வாய்ப்படுவதை பெரிதும் குறைக்க உதவும்.

 

வீட்டிலிருந்து வேலை

வீட்டிலிருந்து வேலை செய்வது எளிதானது அல்ல. குழந்தைகளின் சத்தங்கள், குடும்பத்தினரின் கூச்சல்கள், உணவு, சமையல் போன்றவை வீட்டிலிருந்து வேலை செய்வோரின் வேலை விடயத்தில் தலையிடுகின்றன. அவற்றை சரியாக முறைப்படுத்தக சிறந்த விஷயம் ஒரு அட்டவணையை அமைப்பதாகும். அட்டவணையை சரியாக பின்பற்றுவது எங்களுக்கு கடினம் என்றாலும், வேலை செய்வதற்கும் சாப்பிடுவதற்கும் தேநீர் குடிப்பதற்கும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்கும் டிவி பார்ப்பதற்கும் நாம் நேரத்தை சரியாக ஒதுக்கினால் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது மன அழுத்தத்தை குறைக்கலாம்.

 

பொசிட்டிவ் வைப்ஸ் மீது அதிக கவனம் செலுத்துங்கள்

இந்த கொவிட் சூழலில் நல்ல விடயங்கள் நடப்பது மிகவும் அரிதாகவே நிகழ்கின்றது. பொருளாதார பிரச்சினைகளை பற்றி நாம் நன்றாகவே அறிவோம். குடும்ப பிரச்சினைகள், வேலை பிரச்சினைகள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் கொவிட்-உடன் ஒரேடியாகவே வந்துள்ளன. இந்த விடயங்களில் தேவைக்கதிகமாக நமது கவனத்தை ஈடுபடுத்துவது சிக்கலை அதிகப்படுத்தும். ஆனால் எம்மால் முடிந்தவரை பல சாதகமான விடயங்களைப் பின்தொடர்வது மதிப்புக்குரிய விடயம். ஒரு திரைப்படம் அல்லது புத்தகத்தை வாசிப்பது போன்றவற்றை தேர்ந்தெடுக்கும்போது, ​​அழிவுகரமானவற்றைத் தேர்ந்தெடுக்காமல் நல்ல கதைக்களத்தை கொண்டவையை தெரிவு செய்யலாம். வீட்டிலேயே இருக்கும் போது ஒருவருக்கொருவர் தமது குறைகளை தேடி வீண்பிரச்சினைகளை வளர்த்துக்கொள்ளாமல் நல்ல விஷயங்களை பாராட்டுவதில் நேரத்தை செலவிடுவது நல்லது.

 

பிரச்சினைகள் ஏற்பட்டால் தொழில்முறை ஆலோசனையைப் பெறவும்

மனித மன மற்றும் உடல் பரிணாம வளர்ச்சியிலிருந்து இரண்டும் ஒரே இடத்தில் வாழப் பழக்கப்பட்டவையல்ல. மனிதர்களாகிய நாம் ஒரு சமூக வாழ்க்கைக்கு பழக்கமாகிவிட்டோம். அதனால்தான் உலகின் ஒவ்வொரு நாடும் இந்த கொவிட் காலத்தில் எழும் பல மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் உங்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் நீங்கள் ஒரு சரியான தொழில்முறை ஆலோசகரைப் பார்க்க வேண்டும். இல்லையெனில், பிறரது ஆலோசனைக்கேற்ப செயற்படுவது ஆபத்தானதும் வீணானதும் ஆகும். ஒரு ஆலோசகரை உடனடியாக பார்ப்பது முக்கியம். சலிப்பு, கோபம், எரிச்சல் அல்லது மயக்கமாக உணர்ந்தால் சிக்கலைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள்.