இணையத்திலுள்ள முக்கியமான படிமுறைகள்

 

இணையத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை என்ற அளவிற்கு இன்று விரல் நுனியில் தகவல்களை தரும் இடமாக இணையம் காணப்படுகின்றது. எளிய தகவல் தேடலில் இருந்து DIY வீடியோக்கள் மற்றும் சமீபத்திய அப்டேட்டுக்கள் வரை, ஒன்லைனில் பெற முடியாத எதுவும் இல்லை. உலகெங்கிலும் உள்ளவர்கள் தங்கள் வேலைகளுக்கு மதிப்பு சேர்க்க இவ்வாறான ஒன்லைன் தளங்களையே நம்பியுள்ளனர். ஆனால் நாள் முழுவதும் நாம் உலாவிக் கொண்டிருக்கும் இந்த வலையமைப்புக்களில் 5% மட்டுமே நாம் பொதுவாக பார்க்கும் பெரும் தகவல்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? பலரால் முழுமையாக புரிந்துகொள்ளப்படாத எண்ணற்ற அம்சங்களையும் காரணிகளையும் இணையம் தன்னுள் வைத்துள்ளது.

 

SURFACE WEB

இதன் பெயரில் குறிப்பிடுவது போல, இணையத்தில் சேர்ச் செய்யும்போது கிடைக்கப்படும் சேர்ச் ரிஸல்ட்கள் தான் ‘மேற்பரப்பு வலை (SURFACE WEB)’ என்றழைக்கப்படும். இந்த செயற்பாடுகள் குறியீட்டுடன் இருப்பதால் (INDEXABLE) அவை அனைத்தும் தேடுபொறிகளால் இலகுவாக ரிஸல்ட்களாக வெளிவரலாம். முன்னணி தேடுபொறிகளான BING, YAHOO மற்றும் GOOGLE போன்றவை இந்த வலைப்பக்கங்களை சேர்ச் யூசர்களுக்குக் கிடைக்கும்படி வந்து குறியிடுகின்றன. இந்த சைட்களில் உள்ள தகவல்களைப் பொறுத்து, இந்த தேடுபொறிகள் வலைத்தளங்களை வரிசைப்படுத்துகின்றன. இன்று ஒவ்வொரு வணிகமும் SEO சேவைகளைத் தேர்வுசெய்கிறது. இது அவர்களின் பிராண்டை தேவையான நுகர்வோரின் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உதவுகிறது.

 

WEB தேடல் செயன்முறை 

கூகிள் அல்லது எந்தவொரு தேடுபொறியும் இணையதளங்களை அடைந்து செல்வதற்கான தனித்துவமான வழியைக் கொண்டுள்ளது. TARGETED KEYWORDS மற்றும் SITE LINKSகளை அடையாளம் காண்பதன் மூலம், இந்த தேடுபொறிகள் தளங்களை கவனித்து வந்து அதற்கேற்ப சரியான முறையில் சேர்ச் ரிஸல்ட்களை ஒதுக்குகின்றன. உள்ளடக்கத் தேடலும் (CONTENT SEARCH) இந்த செயற்பாட்டின் குறிப்பிடத்தக்க பகுதியாகும். சுருக்கமாக, SURFACE WEB,  தேடுபொறிகளால் குறியிடப்படுகின்ற வெப் அடிப்படையிலான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.

 

DEEP WEB

SURFACE WEB பற்றி அறிந்தால், அதற்கு அப்படியே எதிரான ஒரு பக்கம் தான் இந்த DEEP WEB எனப்படும் அடுத்தபடியான WEB BROWSING LEVEL. DEEP WEB முழு உலகளாவிய WEB அமைப்பிலுமே 90% மற்றும் அதற்கு மேல் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் இதில் ஆச்சரியமான பகுதி என்னவென்றால், இது பொதுமக்களது கண்ணுக்கு தெரியாத ஒரு WEB MODE என்று சொன்னால் சரியாக இருக்கும். DEEP WEB, பெயர் குறிப்பிடுவது போல, WWW இன் DEEP PARTS. தேடுபொறிகளால் சில WEB CONTENT-களை INDEX செய்ய முடியாது. எனவே தேடல்களை இயக்க முடியாது என்பதால் இது கண்ணுக்கு தெரியாத WEB என்றும் அழைக்கப்படுகிறது. எனவே DEEP WEBஇல் குறியிடப்படாத உள்ளடக்கம் (NON-INDEXED CONTENT) உள்ளது.

மேலும், DEEP WEB-ஐ ஒரு மோசமான இடமாக பலர் கருதுகின்றனர். ஆனால் இது உண்மையிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. இது நெறிமுறையாக ஒரு தார்மீகமான இடமாகும். இருப்பினும் மக்கள் இதில் தவறாக நடந்து கொள்ளலாம் மற்றும் தவறாக பயன்படுத்தலாம்.

 

DARK WEB

இதனது அமைவிடத்தை சரியாக சொல்ல வேண்டுமானால், DEEP WEB-ன் ஆழமான முடிவில் இந்த டார்க்நெட் எனப்படும் DARK WEB-ன் ஆரம்பத்தை காண முடியும். இது DEEP WEB-ன் மிகச் சிறிய பகுதியாகும். ஆனால் சட்டவிரோத நடவடிக்கைகளின் மையமாக அறியப்படுகிறது என்று அறிக்கைகள் கூறுகின்றன. மேலே கூறியது போல DEEP WEB பொதுமக்களுக்கு தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். DARK WEB-ம் அதேபோல தான் பொதுமக்களின் கவனத்திற்கு புலப்படாது. இருப்பினும் அணுகல் அடிப்படையில் DEEP மற்றும் DARK WEB ஆகியவற்றிற்கு இடையில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான வேறுபாடு உள்ளது. DARK WEB இற்கான ACCESS, SUFACE மற்றும் DEEP WEB போலல்லாமல் சில சிறப்பு டூல்ஸ் தேவை. எனவே இது வேண்டுமென்றே பயனர்கள் இலகுவாக அணுகமுடியாதவாறு மறைக்கப்பட்டுள்ளது.

மேலும், மனிதகுலத்தின் மிக இருண்ட பகுதி இந்த DARK WEB இல் தான் வெளிப்படுகிறது. இதில் பெரும்பாலும் மனித சமூகத்தில் கெட்டபெயரை சம்பாதித்த சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுகின்றன. உதரணமாக, ஹேக்கர்களால் திருடப்பட்ட க்ரெடிட் கார்டுகள், பாஸ்வர்டுகள் போன்றவையும், சட்டவிரோத போதைமருந்து, ஆயுதங்கள், தீவிரவாத செயல்கள், குழந்தைகளை வைத்து படமாக்கப்பட்ட ஆபாச வீடியோக்கள், பழிவாங்கக்கூடிய ஆபாச வீடியோக்கள், விலங்கு துன்புறுத்தல் வீடியோக்கள் மற்றும் இன்னும் கூறுவதற்கே மனதை உருக்கக்கூடிய பல விடயங்கள் இதில் காணப்படுகின்றது.