எவ்வளவு படித்தாலும் மறந்து விடுகிறீர்களா? – இனி கவலை வேண்டாம்

 

2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை இவ்வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலருக்கும் இப்பொழுது படித்த அனைத்தும் மறந்து போய் இருக்கும். ஒருவேளை இந்த கட்டுரையைப் மடிக்கும் உங்கள் உடன்பிறப்புகளுக்கோ அல்லது பிள்ளைகளுக்கோ இந்த பிரச்சினை இருக்கலாம். கீழ்வரும் விடயங்களை கடைப்பிடித்து அவர்கள் படித்தவற்றை நினைவில் கொண்டுவர உதவுங்கள்.

 

ஃப்ளாஷ் கார்ட்ஸ்

ஃப்ளாஷ் கார்டுகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். அல்லது இன்று முதற்தடவையாக கேட்டிருக்கலாம். ஃபிளாஷ் கார்டை உருவாக்குவதற்கான எளிய வழி, முதலில் நீங்கள் விரும்பும் அளவுக்கு அட்டைப் பெட்டியிலிருந்து ஒரு சதுரத்தை வெட்டுவதாகும். உங்கள் பாடப்புத்தகத்தில் உங்களுக்கு புரியாத கேள்வி ஒரு பக்கத்திலும் பதிலை மறுபுறத்திலும் எழுதுங்கள். பதில்களை எழுதும் போது, ​​அவற்றை புத்தகத்தில் மட்டும் இல்லாமல் உங்கள் சொந்த வார்த்தைகளிலோ அல்லது படங்களின் அடிப்படையிலோ உங்களுக்கு புரியும் விதத்தில் எழுதலாம். இறுதியாக, நீங்கள் உருவாக்கிய அட்டைகளை (கேள்வியின் பக்கத்திற்கு) திருப்பி வைத்து அவற்றுக்கு மனதினாலேயே பதிலளிக்கவும். நீங்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை செய்தால், அந்த விடயங்களை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.

 

 சிறிய இலக்குகளை வைத்திருங்கள்

இந்த முறை மிகவும் வெற்றிகரமானதாகும். அதற்கு ஒரு உதாரணமாக, “நான் இன்று கணித புத்தகத்தில் உள்ள பாடங்களின் தொகுப்பில் அனைத்து பயிற்சிகளையும் செய்த பிறகு தான் எனக்கு பிடித்த தொலைக்காட்சி தொடர்களைப் பார்க்கப் போகிறேன். அல்லது எனது நண்பர்களுடன் விளையாடப் போகிறேன்” என்று கூறி உங்களுக்கே நீங்கள் சிறு சிறு இலக்குகள் அடிப்படியில் வேலைகளை செய்து முடியுங்கள்.

 

பாஸ்ட் பேப்பர்களை சரியாக செய்வோம்

நீங்கள் நிச்சயமாக ஒரு பரீட்சைக்கு முன் கடந்த வருட பரீட்சை வினாத்தாள்களுக்கு விடையளித்து பார்த்திருக்கலாம். குறிப்பாக இதனை தனியாக செய்வதே சிறந்தது. மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாஸ்ட் பேப்பர்களை செய்யுங்கள். பின்னர் அந்த ஆவணங்களில் உங்கள் பாட அலகு சம்பந்தப்பட்ட அனைத்தையும் முன்னிலைப்படுத்தவும் அல்லது குறிக்கவும். இன்னும் ஒரு விஷயம், கடந்த கால ஆவணங்களில் நீங்கள் தவறுவிட்டவற்றை மீண்டும் செய்யவும். அத்தோடு அந்த கேள்விகள் நிச்சயம் வரும் என்று நீங்கள் நினையுங்கள். பின்னர் நன்றாக அவற்றை நினைவில் கொள்ளுங்கள்.

 

யூடியூப் பார்ப்போமா

யூடியூப் வீடியோக்களில் உங்களுக்கு புரியாத பாடம் சம்பந்தமாக ஒரு வீடியோவை பாருங்கள். குறிப்பாக அறிவியல் போன்ற பாடங்களில் நிச்சயமாக இருக்கும். அவற்றைத் தேடுங்கள். ஓடியோ வழியில் நீங்கள் கற்கும் பாடத்தை விட விஷுவல் மீடியா மிகவும் மறக்கமுடியாதது. இவற்றிற்கு சிறந்த உதாரணம் நீங்கள் பார்க்கும் தொலைக்காட்சித் தொடர். அதனை நீங்கள் எவ்வளவு நீண்ட காலமானாலும் மறக்க மாட்டீர்கள்.

 

ஆசிரியராக மாறுங்கள் !

இந்த முறை கூட அறிவியல்பூர்வமாக மிகவும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மிகவும் எளிதானது. உதாரணமாக இப்படி கற்பனை செய்து பாருங்கள். வரலாற்றுப்பாடத்தில் ஒரு பகுதியை பாடம் செய்கிறீர்கள், அதை உங்கள் சகோதரி அல்லது சகோதரருக்கு அல்லது உங்கள் வீட்டில் உள்ள டெடி பெயாறுக்கு அல்லது சுவருக்காவது சொல்லிக்கொடுப்பது போல கற்பிக்கவும். இது பாடங்களை நினைவில் கொள்வதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

 

நண்பர்களுடன் ஒன்றுகூடி படியுங்கள்

இந்த முறை நம் அனைவருக்கும் தெரியும். நீங்கள் தனியாக இருக்கும்போது படிப்பதை விட நண்பர்களுடன் படிப்பது எளிதானது. இருப்பினும், நீங்கள் படிக்க நிறைய நேரம் செலவிட வேண்டும் என்று இதில் நாம் கூறவில்லை. வகுப்பிலும் படிப்பிலும் நான்கு அல்லது ஐந்து நல்ல அறிவுள்ள நண்பர்களை சேர்த்துக்கொள்ளவும். பின்னர் நான்கு பேரின் அறிவையும் பகிர்ந்து கொள்ளலாம். பரீட்சையில் வெற்றிபெற இது மிகவும் உதவும்.