கொரோனாவால் உலகில் நிகழ்ந்த நல்ல விடயங்கள்

 

உலகம் முழுவதுமே கடந்த ஆண்டு அதிகளவில் பேசிய விடயம் கொரோனாவாகும். அந்தளவிற்கு மனித வாழ்வில் ஊடுருவி இன்றுவரை ஆட்டிப்படைத்து வருகின்றது. யாரும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் முழு உலகையும் முடக்கிப் போட்டு வல்லரசு நாடுகளையும் வசப்படுத்தி வைத்திருந்த இந்த கொரோனாவால் நமது வாழ்வே புதிய கோணத்தை நோக்கி நகர்ந்தது. உண்மையில் தவிர்க்க முடியாத விதமாக கொரோனாவின் காரணமாக நாங்கள் நிறைய விடயங்களை இழந்தோம். ஆனால் கொரோனாவினால் நாம் பெற்ற நிம்மதி எவ்வளவு என்றும் நாம் கணக்கில் சேர்க்க வேண்டும். அதாவது நாம் நித்தமும் கைகளை கழுவி சுத்தமாக இருப்பது போன்ற சிறுவிடயங்களை கூறவில்லை. அதையும் தாண்டி வாழ்க்கைக்கே நிம்மதியும் சந்தோஷமும் தந்த விடயங்களை அலசி ஆராய இன்று வந்துள்ளோம்.

 

வீட்டிலிருந்து வேலை (WORK FROM HOME)

வீட்டிலிருந்து வேலை செய்வதும் வேலை தானே என்று பலர் உணர்ந்திருப்பது கொரோனாவின் காரணமாக நடந்த ஒரு நல்ல விடயம். குறிப்பாக பல அலுவலகங்களில் நம்பப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், ஒரு தொழிலாளி எட்டு மணி நேரம் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யவில்லை என்றால், அவர் சரியாக வேலை செய்யவில்லை என்றே கருதினர். உழைக்கும் மக்களும் அதைத்தான் நினைத்தார்கள். ஆனால் பலர் உணர்ந்த ஒரு விடயம் என்னவென்றால், வீட்டிலிருந்தே பணிபுரியும் போது ஒன்லைனிலும் பணியிடத்திலும் வேலை மற்றும் மேற்பார்வையாளர்களைக் கண்காணிக்க சில ஒன்லைன் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவர்கள் நிறைய அலுவலக வேலைகளைச் செய்ய முடியும் என்பதாகும். நிச்சயமாக, இது கிட்டத்தட்ட ஒவ்வொரு வேலைக்கும் பொருந்தாது. அலுவலகம் இல்லாமல் எல்லா வேலையையும் செய்வது கடினம் தான். இருப்பினும், வீட்டிலிருந்து வேலை செய்யும் போது இந்த புதிய வேலையின் விடாமுயற்சியுடன், அலுவலக வளாகங்களை பராமரிப்பதற்கான செலவும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.

 

பொருட்களை ன்லைனில் ர்டர் செய்தல்

கொரோனா வர முன் ஒன்லைனில் பொருட்களை வாங்குவது போன்ற விடயங்களில் மக்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். இதனாலே பெரும்பாலான மக்கள் கடைக்குச் சென்றே பணம் கொடுத்து பொருள் வாங்குவது போன்ற பழக்கத்திற்குள்ளேயே இருந்தனர். ஒன்லைனில் ஓர்டர் செய்து கேஷ்-ஒன்-டெலிவரி முறை மூலம் பொருள் கிடைத்தவுடன் பணத்தை கொடுக்கும் முறை இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் ஒன்லைனில் பொருட்களை ஓர்டர் செய்யும் நபர்களின் பயம் முற்றிலும் மறைந்துவிடவில்லை.

ஆனால் கொரோனாவின் வருகையுடன் பல இடங்களில் மக்களுக்கு வேறு வழியில்லாமல் ஒன்லைன் ஓடர்களுக்கு பழக்கமாகிக்கொண்டனர். இதனால் அதிகரித்த போட்டி காரணமாக ஒன்லைன் விற்பனையாளர்களும் நியாயமான மற்றும் நேர்மையான சேவையை வழங்க வேண்டியிருந்தது. கொரோனா பிரச்சினைக்கு பிறகும், பொருட்களை ஒன்லைனில் விற்கும் இடங்கள் இருக்கும் என்று நாங்கள் நினைக்கின்றோம். ஏனெனில் இது வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவருக்கும் மிகவும் எளிதான வழியாகும்.

 

ன்லைனில் கற்றல்

பாடசாலை மாணவர்களுக்கு டெப் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்தமை எமக்கு நினைவிருக்கிறது. நிச்சயமாக, ஒன்லைனில் கற்றல் ஏனைய நாடுகளில் ஆச்சரியமான விடயமல்ல. இலங்கையில் கூட, ஈ-கற்றல் முறைமை நாவலயிலுள்ள திறந்த பல்கலைக்கழகம் மிக வெற்றிகரமாக செய்து வருகிறது. ஆனால் கொரோனாவுடன் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டன. இதனால் எல்லோரும் ஒரு சிறிய ஸ்மார்ட்போன் மூலமாவது ஆன்லைனில் படிக்க வேண்டியிருந்தது. பிள்ளைகளுடன் சேர்ந்து ஆசிரியர்களும் மிகவும் போராடி எப்படியாவது கற்கை செயற்பாடுகளை செய்து வந்தனர். குழந்தைகளுக்கு எப்படியாவது டெப்கள் வழங்கப்பட்டிருந்தால் இப்போதெல்லாம் நடந்துகொண்டிருக்கும் ஒன்லைன் கற்றலின் காணப்படும் ஏற்றத்தாழ்வை பூர்த்திசெய்திருக்க முடியும்.

இப்போது சில பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்லைனில் சில டிப்ளோமா கற்கைகளை நடத்த எண்ணுகின்றன.

 

ஓரளவிற்கு குறைந்த கார்பன் கலந்த வாயு மாசுபாடு

கொரோனா முடக்கல்நிலை மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றின் ஆரம்ப நாட்களின் மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் எழுதிக்கொண்டிருந்த தலைப்பு இதுவாகும். திறந்தவெளியில் மனித நடவடிக்கைகள் குறைந்ததால் வாயு மாசுபாடு குறைந்து கட்டிடங்களுக்கு அப்பால் சிவனொளிபாதமலை தென்படுவது போன்ற காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவப்பட்டன.

உண்மையில் அவை அனைத்தும் போட்டோ எடிட் தான். அந்த எடிட்களை செய்த பெரும்பாலோருக்குத் தெரியாதது என்னவென்றால், உலகின் கார்பன் பயன்பாடு இரண்டு மாதங்களால் குறைந்து இயற்கையானது நேரடியாக சீராகியது என்றும் ஓசோன் படலம் சரியாகி இந்த உலகம் மீண்டும் பசுமைப் புரட்சி உருவாகிறது என்பதெல்லாம் குறுகிய காலத்தில் இடம்பெறாது. அதற்கு கணிசமான காலம் எடுக்கும்.

ஆனால், தேவையற்ற அளவுக்கதிகமான காபன் பயன்பாடு மேலும் ஒரு வருடம் குறைந்தால் நிச்சயமாக உலகம் மறுசீரமைக்கப்பட்டு எமக்கு சீரான வாயு கிடைக்கும் என்பதே உண்மை. ஓரளவு அதுவும் நடந்து வருகிறது.

 

PLAN B, PLAN C

கொரோனா காரணமாக நிறைய பேர் தமது வேலைகளை இழந்தனர். சிலர் சம்பளத்தில் பாதியை மாத்திரமே பெற்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் கொரோனா நாம் செய்த வேலைகளின் உறுதித்தன்மையை நமக்கு உணர்த்தியது. உண்மையில் நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க வைத்தது. கொழும்பில் பலர்  வாங்கிய வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் கட்டமுடியாமல் பெரிய கார்களை சாலையின் ஓரத்தில் நிறுத்துவதையும் அவற்றின் பிற்பகுதியில் தேங்காய்,பனீஸ்,மரக்கறிகளை விற்பதையும் கண்டோம். ஒரே பெரிய விஷயம் என்னவென்றால், வெறுமனே ஏதோ ஒரு வேலை செய்வதை விட, தொழில் ரீதியாக வருமான அடிப்படையில், PLAN B, PLAN C என்று இருக்க வேண்டும் என மக்களுக்கு இது உணர்த்தியது.

 

பொழுதுபோக்குகள்

இப்போதெல்லாம் பலர் தூங்குவதையோ டிவி பார்ப்பதையோ இரசிக்கிறார்கள். ஆனால் கொவிட் -19 வந்த பிறகு, பலர் பயனுள்ளதாக இருந்த பல பொழுதுபோக்கிற்கு திரும்பினர் என்பது பொய் அல்ல. சிலர் ‘மரம் வளர்ப்போம், நாட்டை காப்போம்’ போன்ற திட்டங்களைத் தொடங்கினர். சிலர் ‘வீட்டிலே இருப்போம்’ போன்ற திட்டங்களைத் தொடங்கினர். எதுவானாலும் பலரும் அறிந்த ஒன்று தான், வீட்டிலே பல காலம் இருக்கப்போகிறோம் அதனால் ஏதாவது உபயோகமான விடயங்களை செய்வோம் என்று பொழுதுபோக்காக நல்ல நல்ல விடயங்களை செய்ய ஆரம்பித்தனர். அது உண்மையில் கொரோனாவின் காரணமாக நடந்த ஒரு நல்ல விடயமாகும்.

 

குடும்பத்தோடு ஒன்றாக இருத்தல்

பலருக்கு பிஸியான வாழ்க்கை காணப்படுவதால் தமது குடும்பத்தோடு சரியாக நேரத்தை செலவிடக்கூட இயலாமல் இருந்தது. ஆனால் இந்த கொரோனாவிற்கு பிறகு பலரும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டி இருந்ததால் குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் அதிகமாக இருந்தது. ஆனால் உண்மையில் இந்த கொரோனா காலங்கள் பெரும்பாலான மக்களை விருப்பத்துடன் அல்லது விருப்பமின்றி வீட்டிலேயே இருக்கும்படி கட்டாயப்படுத்தின. சிலருக்கு சிலநேரம் தொந்தரவாக தோன்றலாம். குறிப்பாக வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும்போது ​​சச்சரவுகளும் அதிகரிக்கும். ஆனால் அது எப்படியோ நன்றாகவே இருந்தது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தலைவலி என்றால் உடனே தைலம் தேய்த்து விடவும், கைமருந்து செய்து தரவும், வீட்டில் அம்மா, மனைவி போன்றவர்கள் அருகிலேயே இருந்ததால் அனைவரும் சந்தோசத்தை அனுபவித்திருப்பர் என்பது உண்மையாகும்.