சிறு குழந்தைகளை டிவி பார்க்கவும் தொலைபேசிகளைப் பார்க்கவும் வீடியோ கேம்களை விளையாடவும் அனுமதிப்பது நல்லதல்ல என்பது பொதுவான கருத்தாகும். ஆனால் அவ்வாறு கூறும் பலருக்கு அது ஏன் என்ற கேள்விக்கு சரியான பதில் தெரியாது. எனவே இந்தத் திரைகளில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என்று கூறுவதற்கான உண்மையான மற்றும் ஆதாரபூர்வமான காரணத்தை இன்று கூறுகிறோம். முதலில், இந்த ஸ்கிரீன் நேரம் டிவிக்கு மட்டுமல்ல. நாங்கள் பொதுவாக டிவி பார்ப்பதில்லை என்றாலும் ஸ்கிரீன் டைம் பிரிவில் டிவிகள், செல்போன்கள், டெப்லெட்டுகள் மற்றும் கணினித் திரைகள் போன்றவை அடங்கும். எனவே, டிஜிட்டல் திரைகள் அல்லது SCREEN TIME குழந்தைகளுக்கு ஏன் தீங்கு விளைவிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் குழந்தைகளை இவற்றிலிருந்து விலக்கி வைப்பதும் பெரியவர்களாகிய எமது பொறுப்பாகும்.
Virtual Autism
இந்த Virtual Autism என்பது மிக சமீபத்திய மருத்துவ ரீதியான கண்டுபிடிப்பாகும். வைத்தியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி டிஜிட்டல் திரையில் அதிகம் நேரத்தை செலவிடும் குழந்தைகளுக்கு இந்த Virtual Autism-த்தின் சில அறிகுறிகளைக் காட்டக்கூடும். இந்த டிஜிட்டல் திரைகள் சிறார்களுக்கு Autism எனப்படும் இந்த நோய்களுக்கான அறிகுறிகளுக்கு ஒரு காரணம். தொடர்ந்து டிஜிட்டல் திரையை பலமணிநேரம் பார்ப்பது குழந்தையின் மூளை வளர்ச்சியைக் குறைக்கும். இது ஒருவருக்கு பதிலளிப்பது மற்றும் கண்ணைப் பார்த்து நேரடியாக தொடர்பு கொள்ளாதது போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். இவை Autism-த்தின் அடிப்படை அறிகுறிகள்.
நடத்தை பிரச்சினைகள்
தேவையில்லாமல் குழந்தைகளை டிஜிட்டல் திரைகளுக்கு பழக்கப்படுத்து வளர்ந்து வரும் குழந்தைகளின் நடத்தையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குழந்தைகளில் சில சராசரி வயதினருக்கு இயல்பான நடத்தை பிரச்சினைகள் இருக்கலாம். குறிப்பாக டிவி, மொபைல் மற்றும் கணினிகள் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தாத சாதாரண வழக்கத்தைக் கொண்ட ஒரு குழந்தை மற்றும் இந்த டிஜிட்டல் சாதனங்களில் அதிக கவனம் செலுத்தும். அதாவது, அவர்களின் உணர்ச்சிகள், சமூக தொடர்புகள் மற்றும் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதற்கு அவர்கள் பதிலளிக்கும் விதம் போன்றவற்றில் அவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம்.
கல்வியில் சிக்கல்கள்
அடுத்தது கல்வி தொடர்பான பிரச்சினைகள். கல்வி என்பது பாடசாலை கல்வி மட்டுமல்ல. சிறுவயது முதல் குழந்தைகள் சில விடயங்களை தாமாகவே கற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் அதைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அவர்கள் சுற்றுச்சூழலைக் கவனிக்க வேண்டும். இருப்பினும் டிஜிட்டல் திரை இந்த சூழல் கண்காணிப்பு திறன்களில் குழந்தைகளின் நேரத்தையும் ஆர்வத்தையும் குறைக்கிறது. எனவே சிறுவயது மற்றும் முன்பள்ளி கல்வி இரண்டுமே இந்த டிஜிட்டல் திரைகளால் தடங்கலாக இருக்கும்.
உடல் பருமன்
டிஜிட்டல் திரை என்பது ஒரே இடத்தில் உட்கார்ந்து பலமணிநேரத்தை வீணடிக்கக்கூடிய ஒரு கருவியாகும். குழந்தைகள் இயற்கையாகவே மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இந்த செயற்பாட்டைக் குறைப்பது மற்றும் டிவி மற்றும் கணினிகளைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவது குழந்தைகளில் தேவையற்ற உடல் பருமனுக்கு வழிவகுக்கும். குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமன், வளர்ந்த பிறகும் உடலை பாதிக்கும் ஒரு நிலையாக மாறும் என பல மருத்துவ நிபுணர்கள் ஆதாரபூர்வமாக விளக்கியுள்ளனர். பிற்காலத்தில் இது தொடருமேயானால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும்.
முரண்டுபிடித்தல்
டி.விக்கள், செல்போன்கள் மற்றும் கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களுக்கு அதிகளவில் அடிமையாக்கப்படும் குழந்தைகள், அதில் உள்ள கதாபாத்திரங்களுக்கேற்ப, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வீடியோ கேம்கள் காரணமாக காலப்போக்கில் முரட்டுக் குழந்தைகளாக மாறக்கூடும். டிஜிட்டல் திரைக்கு அப்பால் சூழல் மற்றும் கலை போன்ற விடயங்களில் அவர்கள் கவனம் செலுத்தாததால் உணர்திறன் மிக்க திறன்களை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். இந்த குழந்தைகள் சமூகத்தில் தங்களைச் சுற்றியுள்ளவர்களின் மாறுபட்ட உணர்ச்சிகளைக் கவனித்து செயற்படுவதும் குறைவாக இருக்குமென மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த டிஜிட்டல் திரைகளுக்கு முன்னால் அவர்கள் செலவிடும் நேரத்தின் காரணமாக அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய சமூக திறன்களை அவர்கள் இழக்கின்றனர்.
தூக்கமின்மை
இது டிஜிட்டல் திரையுடன் நேரடியாக தொடர்புபடுத்தப்படாத ஆனால் மறைமுகமாக இணைந்துக்கொள்ளக்கூடிய ஒரு விடயம். டிவி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் தூங்குவதும் குறைவு. இதற்கு காரணம், டிஜிட்டல் திரை வழியாக கண்ணுக்கு மிக அருகில் வரும் தேவையற்ற ஒளி காரணமாக இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வேறுபாட்டை மூளை சரியாக பெறாததால் இரவில் விழித்திருப்பதும் பகலில் உறங்குவதுமாக இருக்கலாம். இதன் விளைவாக பெரும்பாலும் தூக்கத்தை இழக்கலாம்.
குடும்ப உறவுகள்
டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாக இருப்பதன் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை இழக்கின்றனர். பெரியவர்கள் இதை உணர்ந்தும், அத்தோடு அவர்கள் வேண்டுமென்றே டிஜிட்டல் திரையில் அதிக நேரத்தை செலவிட்டாலும், சிறியவர்கள் இதைப்பற்றி சரியாக அறியாமல் உள்ளனர். இதனால் குடும்ப உறவுகளில் இருந்து தூரமாகின்றனர். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது, அவர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொள்வது இந்த டிஜிட்டல் திரைகளால் தடைபடுகிறது. இந்த அங்கீகாரம் அவர்களின் மன வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருப்பதால் இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு நிலை. இதனால்தான் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களின் வசதிக்காக குழந்தைகள் டிஜிட்டல் திரைகளுக்கு ஆளாகின்றனர் என கூறப்படுகிறது. ஆனால் பிற்காலத்தில் குழந்தைகளும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் இதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டியுள்ளது.